என்னடா இது விருந்தாளிகள் வருவதன் மூலம் கண் திருஷ்டி படுமா? சொந்த பந்தங்களை தவறாக சொல்கிறோமே, என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஒரு சில பேர் இருக்கிறார்கள். நம் வீட்டை நோட்டம் விடுவதற்காகவே வருவார்கள். நமக்கே தெரியும். இவர்கள் நம் வீட்டிற்கு வந்து சென்றால், அடுத்த நம்முடைய வீட்டில் ஏதோ சண்டை வரப்போகிறது என்று, முடிவு கட்டிக் கொள்ளலாம்.
காரணம் வந்தவர்களுடைய கண் பார்வையில் இருக்கும் எதிர்மறை சக்தி, நம் வீட்டை தாக்கி இருக்கும். நம் வீட்டில் என்னென்ன பொருட்கள் எல்லாம் இருக்கிறது. நம் வீட்டில் இருப்பவர்கள் எப்படி சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்று வயிற்றேரிச்சலோடு ஒரு பார்வை பார்த்தால் போதும். வீட்டில் சண்டை வந்துவிடும். வீட்டில் இருப்பவர்களுக்கு நோய் நொடி பிரச்சனை வந்துவிடும். இப்படிப்பட்டவர்களிடமிருந்து நம் குடும்பத்தை காப்பாற்ற என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
பொல்லாத கண்களில் இருந்து தப்பிக்க பரிகாரம்
கண் திருஷ்டியை உடனடியாக நீக்குவதற்கு முதலில் தேவைப்படக்கூடிய பொருள் கல் உப்பு. இந்த கல் உப்புக்கு இருக்கும் சக்தியும் மகிமையும் ரொம்ப ரொம்ப பெரியது. ஆகவே அதை குறைத்து எடை போடாதீர்கள். வந்தவர்களுடைய காலடி மண்ணை உங்களால் எடுக்க முடியும் என்றால், அந்த மண்ணை ஒரு கைப்பிடி எடுத்து, உங்கள் வீட்டில் இருப்பவர்களுடைய தலையை மூன்று முறை சுற்றி நெருப்பில் போட்டு விடவும். காலடி மண்ணை எடுக்க முடியவில்லை என்ன செய்வது.
உங்களுடைய வீட்டிற்குள் வந்து நின்று இருப்பார்கள் அல்லவா. எந்த இடத்தில், அவர்கள் பாதம் பதிந்தது எந்த இடத்தில் என்று பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் சென்ற பிறகு அந்த பாதம் வைத்த இடத்தில், கொஞ்சமாக கல் உப்பை தூவி 5 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.
பிறகு அந்த கல்லுப்பை இடது உள்ளங்கையால் எடுத்து, யார் மீது திருஷ்டி பட்டதோ அவர்களுடைய தலையை இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை சுற்றி அதை உடனடியாக தண்ணீரில் கரைத்து விடுங்கள். என்னடா இது நம் வீட்டிற்கு வந்தவர்களை அவமானப்படுத்துவது போல இப்படி பரிகாரம் செய்வதா என்று சில பேர் சிந்திக்கலாம். வேறு வழி கிடையாது.
இதையும் படிக்கலாமே: செல்வ வளம் பெருக வெள்ளிக்கிழமை ஏற்ற வேண்டிய தீபம்.
உங்களுக்கு துன்பம் வரும்போது அந்த துன்பத்தை தடுக்க வேண்டும் என்றால் இப்படிப்பட்ட சில விஷயங்களை செய்து தான் ஆக வேண்டும். எல்லா சொந்த பந்தங்களையும் குறை சொல்லவில்லை சில பேர் இப்படியும் இருக்கிறார்கள் என்பதற்காகத்தான் இந்த பரிகாரம். உங்க குடும்பத்தில் இப்படிப்பட்ட பொறாமை குணம் கொண்டவர்கள் இருக்கிறார்களா என்பதை கமெண்டில் பதிவு செய்யுங்கள். உங்களுடைய அனுபவம் அடுத்தவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.