என்னங்க எப்ப பாத்தாலும் பணம் பணம் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். பணம் இல்லை என்றால் இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாதா என்று சில பேர் சிந்திக்கலாம். ஒரு மனிதனுக்கு மரியாதை இந்த சமுதாயத்தில் எதை வைத்து வழங்கப்படுகிறது. பணத்தை வைத்து தானே. குணத்தை வைத்து மரியாதை வழங்கப்படுகிறதா? இல்லை. அந்த காலத்தில் எதுவுமே இல்லாத முனிவருக்கு கூட, ராஜாக்கள் மரியாதை கொடுப்பார்.
ஆனால் இந்த காலத்தில் அப்படியா. எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. நல்ல குணம், அறிவு திறமை எதற்குமே மரியாதை இல்லை. கட்டு கட்டாக பணம் வைத்திருப்பவர்களை தான் சமுதாயம் பெரிய மனிதர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும் மரியாதை கொடுக்கிறது. நாம் மட்டும் விதிவிலக்கா என்ன. வெறும் அறிவை வைத்துக்கொண்டு, திறமையை வைத்துக்கொண்டு நான் தான் பெரிய மனிதர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் பைத்தியக்காரன் என்ற பட்டம் தான் கிடைக்கும்.
அதனால்தான் தேவைக்கு ஏற்ப பணம், தேவைக்கு கொஞ்சம் அதிகமாக பணத்தை சம்பாதித்து வைத்துக் கொள்வதில் தவறு கிடையாது. அதற்காக இப்படிப்பட்ட சின்ன சின்ன பரிகாரங்களை செய்தாலும் தவறு கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள் உங்களுடைய வீட்டிலும் செல்வ வளம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி வழிபாடு
பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே எல்லோர் வீட்டிலும் மகாலட்சுமிக்கு காலை நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சின்னதாக ஒரு பூஜை நடக்கும். அந்த பூஜையின் போது இந்த விளக்கை ஏற்றுங்கள். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். விளக்கில் இருக்கும் நல்லெண்ணையில் கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி போட்டுக் கொள்ளவும். பஞ்சு திரி 3 தேவை.
ஒரே ஒரு மண் அகல் விளக்கில், அந்த விளக்கின் வாய்ப்பகுதியில் ஒரு திரி போடவும். அந்த வாய்ப்பகுதிக்கு இடது பக்கம் ஒரு திரி, வலது பக்கம் ஒரு திரி, தனித்தனியாக போட வேண்டும். ஆக மொத்தம் ஒரே மண் அகல் விளக்கில் மூன்று திரிகள் ஏற்றப்பட வேண்டும். முப்பெரும் தேவியரை நினைத்து இந்த விளக்கை ஏற்றி பூஜையறையில் வைத்து மனதார செல்வ வளம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்தால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் கொழிக்கும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர நெல்லிமர தீப வழிபாடு
இந்த வழிபாட்டின் போது பூஜை அறை முழுவதும் பூக்களின் வாசம் நிறைவாக இருக்க வேண்டும். மல்லிகை பூ, முல்லை பூ, ஜாதி மல்லி, பாரிஜாதம், தாமரைப்பூ இப்படி இந்த ஐந்து பூக்களும் கிடைத்தால் மிக மிக விசேஷம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை, ஐந்து வெள்ளிக்கிழமை செய்து பாருங்கள் நிச்சயம் கடன் சுமை குறைவதையும். செல்வ வளம் அதிகரிப்பதையும் உணர்வீர்கள் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.