நமக்கு எதிரே நின்று நம்மிடம் சண்டை போட்டு பிரச்சனை செய்பவர்களை கூட, சமாளித்து விடலாம். ஆனால் ஒருசிலர் நேரில் பார்க்கும் போது தேன் ஒழுக பேசுவார்கள். மனது முழுக்க விஷம் இருக்கும். கண்கள் முழுக்க கண் திருஷ்டி இருக்கும். பொறாமை எண்ணம் இருக்கும். இப்படி மனதில் ஒரு வஞ்சத்தை வைத்துக்கொண்டு, வாயால் இனிமையான வார்த்தைகளை பேசுபவர்களை, மட்டும் ஒருபோதும் நம்ப கூடாது.
மனிதர்களாக பிறப்பவர்கள் எல்லோருக்குமே இந்த பொறாமை குணம் லேசாக இருக்கும். சில பேருக்கு அது சீக்கிரம் வெளிப்படும் சில பேருக்கு அது வெளிபடாது. நம்முடைய சொந்த பந்தங்களை விட வசதி வாய்ப்பில் நாம் கொஞ்சம் உயர்ந்த இடத்தில் இருந்தால், சொல்லவே வேண்டாம் நமக்கு பிரச்சினைகள் கூடுதலாகத்தான் இருக்கும். நிச்சயமாக கண் திருஷ்டி நம் குடும்பத்தின் மீது விழும்.
நம் வீட்டில் யார் யாரெல்லாம் ஓடி ஓடி வேலை செய்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் அந்த வேலையை செய்யாமல் தடுக்கும் வகையில் உடல் பாதைகள் வரும். இந்த பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்ன செய்வது. நம்முடைய குடும்பத்தை கண் திருஷ்டியிலிருந்து பாதுகாப்பது எப்படி. ஒரு எளிமையான வழி இருக்கிறது.
இதை செய்து பாருங்கள் கண் திருஷ்டியால் வரும் பாதிப்புகள் படிப்படியாக குறையும். ஒரு காலகட்டத்தில் கண் திருஷ்டி உங்களிடம் வராது. அந்த எதிர்மறை ஆற்றல் உங்களை நோக்கி வரும்போது, இந்த மை அதை தடுத்துவிடும். இந்த சக்தி வாய்ந்த மையை சுலபமாக தயாரிப்பது எப்படி.
தர்பை புல். நாட்டு மருந்து கடைகளில் விற்கும். இது ரொம்ப ரொம்ப சக்தி வாய்ந்த ஒரு பொருள். ஆன்மீகத்தை பொருத்தவரை இந்த பொருளுக்கு சக்தி அதிகம். இது நம்மில் நிறைய பேருக்கு தெரியும். இதை வைத்துதான் மை தயார் செய்யப் போகின்றோம். ஒரு வெள்ளிக்கிழமையும் அல்லது செவ்வாய்க்கிழமையும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு தர்ப்பை புல்லை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை 108 முறை சொல்லுங்கள்.
எங்கள் குடும்பத்தின் மீது கண் திருஷ்டி விழக்கூடாது. கவசமாக குலதெய்வம் தான் நின்று காக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு கையில் இருக்கும் தர்ப்பை புல்லை எடுத்து பூஜை அறையில் எரியும் விளக்கில் பொசுக்க வேண்டும். தர்பை புல் நெருப்பில் எரிந்து கொஞ்சம் சாம்பல் உங்களுக்கு கிடைக்கும். அதை ஒரு சின்ன டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அந்த தர்ப்பைப்புல் சாம்பலில் கொஞ்சம் நெய் விட்டு கலந்தால் கருப்பு நிற மை உங்களுக்கு கிடைத்துவிடும். தினமும் குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி இந்த மையை நெற்றியில் இட்டுச் செல்ல பொறாமை கொண்ட கண் திருஷ்டியில் இருந்து உங்களை நீங்கள் பாதுகாக்கலாம். இதை உங்கள் குடும்பத்தார் அனைவரும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பத்து நாட்களுக்கு ஒரு முறை இதுபோல மையை தயார் செய்து பயன்படுத்த வேண்டும். ஒரே மையை தயார் செய்து, வருடம் முழுவதும் வைத்துக் கொண்டால் அது வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இதையும் படிக்கலாமே: தூங்கும் போது சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரம்
அதிகபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது மையை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்கள், கண் திருஷ்டியால் உடல் வலியால் அவதிப்படுபவர்கள், கண் திருஷையால் அடிக்கடி தலைவலி அனுபவிப்பவர்கள், எல்லாம் இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம். நிச்சயமாக நல்லதொரு பலன் கை மேல் கிடைக்கும் என்ற இந்த தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.