கண் திருஷ்டி நீங்க வெந்தய பரிகாரம்

vendhyam
- Advertisement -

நம்முடைய குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கும். எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் யாரோ ஒரு சொந்த பந்தம், நண்பர்கள் நம்முடைய வீட்டிற்கு வந்து சென்றால் போதும். அவ்வளவுதான். நம்மிடையே வீடு இரண்டாகும் படி ஒரு பெரிய சண்டை வந்துவிடும். கணவன் மனைவிக்குள் சண்டை. ஒற்றுமையாக இருந்த சகோதர சகோதரிக்குள் சண்டை.

மாமியார் மருமகளுக்குள் சண்டை, என்று வீடு ரெண்டு பட்டு போகும். அதற்காக வீட்டிற்குள் வருபவர்களை குறை சொல்லவில்லை. ஆனால், சில கெட்ட எண்ணம் கொண்டவர்களுடைய கண் பார்வைக்கு அந்த சக்தி இருக்கிறது. இவர்கள் வீடு மட்டும் எப்படி அழகா இருக்குது பாரு. இவர்களுடைய குடும்பம் மட்டும் எவ்வளவு சந்தோஷமாக இருக்குது பாரு, என்று பெருமூச்சு விட்டு அந்த ஏக்கத்தை கண்பார்வையின் மூலம் வெளிப்படுத்தி விட்டால் போதும்.

- Advertisement -

நல்லா இருக்க குடும்பத்தில் நிச்சயம் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். நம்முடைய வீட்டிலேயே இப்படிப்பட்ட பிரச்சனைகளை நாம் அனுபவத்தில் பார்த்திருப்போம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் நமக்கு வரக்கூடாது. சந்தோஷமாக இருக்கும் நம் குடும்பத்தில் கண்திருஷ்டி விழக்கூடாது என்றால் வரவேற்பறையில் என்ன பொருளை வைக்கணும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கண் திருஷ்டியை நீக்கும் வெந்தய பரிகாரம்

ஆமாங்க, சாதாரணமாக சமையல் அறையில் இருக்கும் வெந்தயம் போதும். ஒரு சின்ன கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போட்டு வரவேற்புரையில் அலமாரியில் அப்படியே திறந்தபடி வைத்து விடுங்கள். இது அடுத்தவர்களுடைய கண்ணுக்குத் தெரியாக் கூட தேவை கிடையாது. உங்கள் வீட்டிற்குள் இப்படி யாராவது பொறாமை எண்ணத்தோடு வந்து வீட்டை சுற்றி முற்றி பார்த்து உங்களை பார்த்து பொறாமை கண்ணோடு கண் திருஷ்டி வைத்தால் கூட, அதனால் எந்த பாதிப்பும் வராது. அவர்களுடைய நெகட்டிவ் எனர்ஜியை இந்த வெந்தயம் அழித்துவிடும்.

- Advertisement -

வெந்தயத்திற்கு குளிர்ச்சியான தன்மை உண்டு. அந்த குளிர்ச்சியான தன்மை உங்கள் வீட்டை எப்போதுமே குளிர்ச்சியாக வைத்திருக்கும். பெரிய அளவில் சண்டையை உண்டாக்காது. இந்த வெந்தயத்தை வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். பழைய வெந்தயத்தை எடுத்து கால் படாத செடி கொடிகளுக்கு கீழே போட்டுடுங்க. மீண்டும் புதிய வெந்தயத்தை எடுத்து வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்ந்து செல்வம் பெருக திருப்பதி தரிசனம்

உதாரணத்திற்கு பிறந்தநாள் கொண்டாடுகிறீர்கள். வீட்டு விசேஷத்திற்கு சொந்த பந்தங்களை எல்லாம் அழைக்கிறீர்கள், என்றால் முதலில் இந்த வெந்தயத்தை வரவேற்பறையில் வைத்து விட்டு அடுத்த வேலையை பாருங்க. உங்க குடும்பம் ஒரு பாதுகாப்பு கவசத்திற்குள் வந்துவிடும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -