கடன் தீர்ந்து செல்வம் பெருக திருப்பதி தரிசனம்

perumal-cash
- Advertisement -

உலகிலே இரண்டாவது பெரிய பணக்கார கடவுள் என்று பெருமை கூறியவர் தான் நம்முடைய திருப்பதி வெங்கடாஜலபதி. திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்ற பழமொழிகேற்ப திருப்பதி வெங்கடாஜலபதி எந்த நேரத்தில் தரிசனம் செய்தால் வாழ்க்கையில் கடன் தீர்ந்து செல்வாதிபதி ஆகக்கூடிய திருப்பம் நிச்சயம் வரும். அது எந்த நேரம் எப்படி வணங்குவது என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடனடைய திருப்பதி தரிசனம்

திருப்பதி செல்ல நினைத்தவர்கள் எல்லாம் உடனே செல்ல முடியாது. அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்றாலே அவரின் அருள் இருந்தால் மட்டும் தான் சாத்தியமாகும். அப்பேற்பட்ட எம்பெருமானை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் தரிசனம் செய்யும் போது நம்முடைய கடன்கள் அடைந்து வாழ்க்கையில் செல்வ வளம் பெருகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அந்த நாளானது வியாழக்கிழமை. ஆம் வியாழக்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு முப்பது மணிக்குள்ளாக திருப்பதி நாதனை தரிசனம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த தரிசனத்திற்கு நாம் புதன்கிழமை இரவே ஆலயத்தில் தங்கிவிட வேண்டும். அடுத்த நாள் காலை இந்த நேரத்தில் இறைவனை தரிசனம் செய்ய வேண்டும். இது போல மூன்று முறை தரிசனம் செய்ய வேண்டும்.

அதாவது ஒரு மாதத்தில் ஒரு முறையோ, இரண்டு மாதத்திற்கு ஒரு முறையும் எத்தனை விரைவில் 3 தரிசனம் உங்களால் செய்ய முடியுமோ அத்தனை விரைவில் செய்து விட வேண்டும். இப்படி தரிசனம் செய்பவருடைய வாழ்க்கையில் சகல செல்வத்தையும் பெறுவார்கள் என்று சொல்லப்படுகிறது. பொதுவாகவே திருப்பதி தரிசனத்தை மூன்று முறை பார்க்க வேண்டும் என்பது தான் ஐதீகம். அதுவும் இந்த நேரத்தில் இந்த நாளில் தரிசிப்பது மேலும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

இத்தனை நாட்கள் இருக்க இந்த நாளில் மட்டும் ஏன் அவரை தரிசனம் செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கலாம். திருப்பதி நாதனுக்கு எண்ணற்ற அபிஷேகம், ஆராதனைகள் நடந்தாலும் வியாழன் காலை அந்த நேரத்தில் நகைகள் அணியாமல் காட்சி தருவார். அலங்கார பிரியரான பெருமாளை இப்படி தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது.

அடுத்து மற்ற நாட்களில் எல்லாம் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நெற்றியில் சூட்டப்படும் நாமமானது கண்களை மறைத்தவாறு இருக்கும். அன்றைய தினத்தில் மட்டும் நாமம் சிறியதாக இருக்கும். இதனால் அவருடைய கண்கள் தெளிவாக தெரியும். இதன் கருத்து யாதெனில் மற்ற நாளில் இறைவனை நாம் தரிசிப்போம். அன்றைய தினத்தில் இறைவன் நம்மை பார்ப்பார். இந்த தரிசனத்திற்கு நேந்திர தரிசனம் என்று பெயர்.

- Advertisement -

இவை அனைத்திலும் விட வியாழக்கிழமை காலை இந்த நேரமானது குரு ஹோரை. இந்த நேரத்தில் இவரை தரிசிப்பது மேலும் சிறப்பானதாக கருதப்படுகிறது. வியாழக்கிழமை காலை இந்த நேரத்தில் நாம் செய்யும் இந்த தரிசனம் இத்தனை சிறப்புகள் வாய்ந்ததாக இருக்கிறது. அதிக கடன் துன்பத்தில் இருப்பவர்கள், வாழ்க்கையில் வறுமையில் இருந்து மீள முடியாத பிரச்சனையில் இருப்பவர்கள் எல்லாம் இந்த தரிசனத்தை மேற் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: குழந்தை பாக்கியம் பெற கார்த்திகை தீப வழிபாடு

இதனால் நிச்சயம் வாழ்க்கையில் அவர்களின் நிலை மாறி பொருளாதார நிலையில் மேம்பட்டு நல்ல நிலையில் வாழக் கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த முறையில் தரிசனம் செய்ய முயற்சி செய்யலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -