பல நூறு ஆண்டுகளாக காற்றில் மிதந்த கோவில் சிலைகள் – இன்றுவரை நீங்காத மர்மம்

koil

மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றிலும் ஏதேனும் ஒரு அதிசயத்தை நாம் காணத்தான் செய்கிறோம். அந்த வகையில் கோவிலின் சிலைகள் காற்றில் மிதக்கும்படி வடிவமைத்து அதை பலநூறு ஆண்டுகள் பாதுகாத்து வந்தார் ஒரு மன்னர். அந்த சிலைகள் இப்போது என்ன ஆனது ? அந்த கோவில் எங்கு உள்ளது ? வாருங்கள் பார்ப்போம்.

konark suriyan kovil

ஒடிசா மாநிலம், கொனார்க் என்ற ஊரில் அமைந்துள்ளது கொனார்க் சூரியக் கோவில். 12 ஆம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னனால் கட்டப்பட்ட இந்த கோவிலில் பல அபூர்வ சிற்பங்கள் உள்ளன. கடற்கரையை ஒட்டியே இந்த கோவில் கட்டப்பட்டது. ஆனால் கடல் உள்வாங்கியதால் இப்பது இது கடலில் இருந்து சற்று தொலைவில் உள்ளது.

இந்த கோவிலின் பிரமிக்கத்தக்க அதிசயமாக கூறப்படுவது மிதக்கும் சிலைகளே. சூரியனுக்காக கட்டப்பட்டன இந்த கோவிலின் பிரதான தெய்வம் சூரியன் தான். இந்த கோவிலை கட்டும் சமயத்தில் ஒவ்வொரு இரண்டு கற்களுக்கும் நடுவில் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல கோவிலின் மேற் கூரையில் சுமார் 52 டன் எடை கொண்ட மிகப்பெரிய காந்தம் ஒன்று பொறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

konark suriyan kovil

இந்த கோவிலில் உள்ள சூரியன் சிலையிலும் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. கச்சிதமான இரும்பு மற்றும் காந்த கலவையால் சூரியன் சிலையானது பல நூறு ஆண்டுகள் காற்றில் மிதந்தபடியே இருந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கோவிலின் சில பகுதிகள் இடுத்துவிட்டதோடு சிலைகளும் காற்றில் மிதக்கவில்லை.

- Advertisement -

konark suriyan kovil

கோவில் இடிந்ததற்கு முக்கிய காரணம் போர்திக்கீஸின் கப்பற்படை வீரர்களே என்று கூறப்படுகிறது. அந்த காலத்தில் இந்த பகுதியில் துறைமுகம் இருந்துள்ளது. கோவிலும் கடலுக்கு மிக அருகில் இருந்ததால் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய காந்தத்தின் சக்தியால் கப்பல்கள் துறைமுகத்திற்கு வந்து செல்ல சற்று இடையூறாக இருந்துள்ளது.

konark suriyan kovil

காந்த சக்தியால் சிறு கப்பல்கள் கவிழ நேரிடுமோ என்று அச்சம் கொண்ட போர்திக்கீஸ் வீரர்கள் அந்த காந்தத்தை தகர்த்தெறிய திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. பின் தங்கள் திட்டத்தின் படியே காந்தத்தை தகர்த்தெறிந்ததாகவும் இந்த காரணமாக தான் கோவிலின் சில பகுதிகள் சிதலமடைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் இவை செவி வழி செய்திகளே தவிர இதற்கு எழுத்து பூர்வமான ஆதாரம் இல்லை.

konark suriyan kovil

இதையும் படிக்கலாமே :
குகையில் தானாய் தோன்றிய சிவன் வடிவம்.. குகை முழுக்க மர்மங்கள் ! எங்கு தெரியுமா ?

இன்று வரை அந்த காந்தம் என்ன ஆனது இப்போது எங்கு உள்ளது போன்ற தகவல்கள் யாருக்கும் தெரியவில்லை. ஒரு சிலர் அங்கு காந்தமே இருந்ததில்லை என்றும் கூறுகிறார்கள். ஆனால் இந்த கோவிலை சுற்றிக்காட்டுபவர்கள்(guide) பலரும் மிதக்கும் சிலை குறித்தும் காந்தம் குறித்தும் பல தகவல்களை கூறுகின்றனர்.