உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம் மாறி, தடுமாறி போகாமல் இருக்க, பிள்ளையாரை 7 நாட்கள் இப்படி வழிபாடு செய்தால் போதுமே! பெற்றோர் சொன்ன பேச்சை பிள்ளைகள் நிச்சயம் கேட்பார்கள்.

vinayagar3

எந்த வீட்டிலும் பிள்ளைகள் பெற்றோர் சொல்லும் பேச்சை நிச்சயம் கேட்க மாட்டார்கள். காரணம் அவர்களுடைய வயசு அப்படி. நாமும் சிறிய குழந்தைகளாக இருக்கும் போது, நம்முடைய பெற்றோர் பேச்சை நிச்சயம் கேட்காமல் தான் இருந்திருப்போம். அப்படியே கேட்டிருந்தாலும், வேறு வழியே இல்லாமல் தலையை ஆட்டி இருக்க வேண்டிய சூழ்நிலை. ஆனால் என்றைக்கு நாம் அம்மா அப்பா ஸ்தாணத்தை அடைந்தோமோ அன்றைக்குத்தான், நம்மை பெற்றவர்கள் பட்ட கஷ்டம் நமக்கு புரிந்திருக்கும் அல்லவா? இப்படியிருக்க நம்முடைய பிள்ளைகளை குறை சொல்லிக் கொண்டே இருப்பதில் எந்த அர்த்தமும் கிடையாது.

சரி, அதற்காக தவறு செய்யும் பிள்ளைகளைக் கூட, தட்டிக்கேட்கும் உரிமை பெற்றோர்களுக்கு கிடையாதா? என்று கேட்பவர்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீக ரீதியான பதிவு தான் இது. உங்களுடைய பிள்ளைகள் வாழ்க்கையில் தடம்மாறி போகக்கூடாது. தீயவழியில் செல்லக்கூடாது.  பிள்ளைகளை நினைத்து கவலைப்படும் பெற்றோர்கள் துயர் துடைக்க ஒரு சிறிய பரிகாரம். எல்லா பெற்றோர்களும் தங்களுடைய பிள்ளைகளின் துயர் தீர்க்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் அதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

விக்னங்களை தீர்க்கும் விநாயகரின்  திருவடி பாதங்களைப் பற்றிக் கொண்டால், நம் துயரங்கள் கரைந்து போகும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த விநாயகப் பெருமானுக்கு தொடர்ந்து 7 நாட்கள் இப்படி தீபம் ஏற்றுங்கள் உங்களுடைய வீட்டில் இருந்தபடியே.

arasa-ilai

நிச்சயம் எல்லோரது வீட்டிலும் விநாயகரின் திருவுருவ படம் இருக்கும் அல்லவா? அந்த படத்தை சுத்தமாக துடைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு விட்டு, அறுகம்புலால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். திருவுருவப்படத்திற்கு அருகிலேயோ அல்லது பூஜை மாடத்திலியோ 3 அரச இலைகளை வைத்து, அதன்மேல் 2 வேப்ப இலை இனுக்குகளை வைத்து, அதன் மேல் ஒரு மண் அகல் தீபத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, திரி போட்டு தீபம் ஏற்றி வையுங்கள். அந்த தீபத்திற்கு பக்கத்திலேயே கொஞ்சமாக கல்கண்டு வைக்கவேண்டும். கல்கண்டை தட்டில் வைக்கக்கூடாது. (அரசியலை அதன் மேல் வேப்ப இலை, அதன் மேல் கல்கண்டு தான் வைக்கப்பட வேண்டும்.) கல்கண்டையும் தீபத்தையும் இலையில் மேல் இருக்கும்படி வைத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்.

- Advertisement -

குறிப்பாக கல்கண்டிற்க்கும் தீபத்திற்கும் நடு பகுதியில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்கு ஒரு குங்குமப்பொட்டு வைக்க வேண்டும். ஒரு பூ வைக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த வழிபாட்டை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வரலாம். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் தொடங்குங்கள். அது உங்களுடைய சவுகரியம் வெள்ளிக்கிழமை அன்று தொடங்கினால் மங்களகரமாக இருக்கும். (தரையில் அரசியலை, அரசுக்கு மேல் பக்கத்தில் வேப்ப இலை, இலைகளுக்கு மேல், உங்களுக்கு இடதுபுறம் ஒரு அகல் தீபம், வலதுபுறம் கொஞ்சம் கற்கண்டு, நடுப்பகுதியில் மஞ்சள் பிள்ளையார்.)

Neem

ஏழு நாட்களுக்கும் உங்களுக்கு வேப்ப இலை அரசிலை கிடைத்தால் அதை புதியதாக மாற்றலாம். இலைகள் கிடைக்காதவர்கள் ஒரு இலையை ஏழு நாட்களுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது. தினம் தோறும் கற்கண்டை எடுத்து எரும்பு காக்கை குருவிகளுக்கு போட்டுவிட்டு, தினமும் புதிய கல்கண்டை விநாயகருக்கு நைவேத்தியமாக வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

dymond-karkandu

ஏழு நாள் பூஜை நிறைவடைந்தவுடன் இலைகளை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மஞ்சள் பிள்ளையாரை ஏரி குளங்களில் உங்களது கைகளாலேயே, உங்களுக்கு பிள்ளைகளுக்கு இருக்கும் கஷ்டம் கரைந்து போக வேண்டும். அவர்கள் நேர்வழியில் செல்ல வேண்டும். வீட்டில் பெரியவர்கள் சொன்ன பேச்சை கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே கரைத்துவிட்டால் போதும்.

manjal-pillaiyar

உங்களுடைய வீட்டின் அருகில் ஆறு ஏரி குளம் எதுவுமே இல்லை என்றாலும் பரவாயில்லை. சுத்தமான அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் அந்த மஞ்சள் பிள்ளையாரை கரைத்துவிடலாம். அந்த தண்ணீரை கால் படாத இடங்களில் அல்லது உங்களுடைய வீட்டின் அருகில் துளசி செடி, மாமரம் அப்படி ஏதாவது செடிகள், மரங்கள் இருந்தாலும் அதில் ஊற்றி விடலாம். கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இப்படி ஏழு நாட்கள் விநாயகப் பெருமானை நினைத்து உங்களுடைய பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நிச்சயம் உங்களது பிள்ளைகள் தடுமாறி, தடுமாறி போகவே மாட்டார்கள் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
மருதாணி இலை நல்லதுன்னு எல்லாருக்கும் தெரியும்! ஆனால் வியக்கும் அளவிற்கு இவ்வளவு நல்லதுன்னு நமக்கு தெரியாம போச்சே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.