செவ்வாய்க்கிழமை தோறும் இந்த பூஜையை செய்து வந்தாலே போதும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

husbund-and-wife

அடிக்கடி கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் வந்துகொண்டே இருந்தால், நிச்சயமாக வீட்டில் நிம்மதி இருக்காது. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து, சுமூகமான வாழ்க்கையை நடத்தினாலே அது நமக்கு மன நிறைவை, மன மகிழ்ச்சியை கொடுக்கும். ஆனால், இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, திருமணம் நடந்த சில மாதங்களிலேயே பிரியக் கூடிய சூழ்நிலை கூட வந்துவிடுகிறது. இதற்கான முதல் காரணம், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, மனப்பக்குவம், ஆண்கள் பெண்கள், இரு பிரிவினருக்கும் ஒரு துளி அளவும் இருப்பது கிடையாது. முன்கோபம் அதிகரித்துவிட்டது.

fight2

சரி, ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய கணவன் மனைவிக்குள் அடிக்கடி பிரச்சினை வந்து கொண்டே இருக்கின்றது. ஒற்றுமை இல்லை என்றால் ஆன்மீக ரீதியாக என்ன வழிபாடு செய்யலாம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சுயநலம் பார்க்காமல், நம்முடைய குடும்பத்திற்காக, நம் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதார, இந்த பூஜையை தொடங்கிய நாள் முதலில் இருந்தே உங்களுடைய வீட்டில் சண்டை சச்சரவுகள் குறைய ஆரம்பித்துவிடும். ஒற்றுமை அதிகரிக்கும்.

இந்த பூஜையை வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டும். உங்களுடைய வீடு சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையை சுத்தம் செய்துவிட்டு, முருகனின் திரு உருவ படத்தை வாசனை மிகுந்த பூக்களால் அலங்காரம் செய்துவிட்டு, உங்களால் முடிந்த தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்து விட வேண்டும்.

murugan

இந்த பூஜைக்கு ஒரு மா இலை, ஒரு மண் அகல் விளக்கு, நல்லெண்ணெய், முடிந்தால் மஞ்சள் நிற திரியில் தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் திரியிலேயே தீபம் ஏற்றுக் கொள்ளலாம். உங்கள் வீட்டு பூஜை அறையில் மா இலையை வைத்து, அதன் மேலே ஒரு மண் அகல் வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றவேண்டும். தீபத்துக்கு பக்கத்தில் ஒரு பூவை வைத்துவிடுங்கள். இந்த தீபத்தை முருகப்பெருமானை முழுக்க முழுக்க மனதில் நினைத்துக் கொண்டு, குடும்ப ஒற்றுமைக்காக ஏற்ற வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கும், உங்கள் கணவருக்கும் கருத்து வேறுபாடும் சண்டையுப் வரக்கூடாது என்ற வேண்டுதலை அந்த முருகப்பெருமானிடம் வையுங்கள். அப்படியே சண்டை சச்சரவுகள் வாக்குவாதம் வந்தாலும், உங்களுடைய குடும்பத்திற்காக, ‘உங்களுக்கு விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை வர வேண்டும் என்று முருகனிடம் மனமுருகி வேண்டுதலை வையுங்கள்.’

Maavilai

இந்த பூஜையை தொடர்ந்து உங்களுடைய வீட்டில் செய்துவரும் ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி உங்களையே அறியாமல் உங்களுடைய மனப்பக்குவம் மாறி, விட்டுக் கொடுக்கும் தன்மை ஏற்பட்டு, கிரக சூழ்நிலைகள் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் கூட அது சரியாகி கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும்.

navagragam-mantra

வாரம் தோறும் வரும் செவ்வாய்க்கிழமைகளில் மா இலையை மட்டும் புதிதாக மாற்றிக் கொள்ளுங்கள். இப்படியாக உங்களுக்கு பிரச்சினை தீரும் வரை அல்லது வாழ்நாள் முழுவதும் கூட உங்கள் வீட்டு பூஜை அறையில், செவ்வாய்க் கிழமைகளில் இப்படி வழிபாடு செய்து வருபவர்களுக்கு குடும்பத்தில் பிரச்சனை வந்தால் கூட, அது பிரிவை உண்டாக்கும் அளவிற்கு பெரியதாக செல்வதற்கு ஒரு துளி அளவும் வாய்ப்பு இல்லை.

praying-god

பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்றுசேர வேண்டும் என்று நினைப்பவர்களும் இந்த பரிகாரத்தை அவரவர் வீட்டுப் பூஜை அறையில் செய்யலாம். கணவன் மனைவி பிரச்சனையை தவிர்த்து குடும்பத்தில் இருக்கும் வேறு உறவுகளுக்குள் பிரச்சனை இருந்தாலும், அது சரியாக இந்த வேண்டுதலை செவ்வாய்க்கிழமைகளில் செய்யலாம். நிச்சயம் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரிவு என்ற வார்த்தை இல்லாமல், ஒற்றுமையாக இருக்க இந்த வழிபாடு உங்களுக்கு கைமேல் பலனை கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இப்படி இருக்கும் கண்ணாடியில், தினமும் உங்களது முகத்தை பார்த்து வந்தால் தரித்திரம் தான் பிடிக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.