கணவன் மனைவி மனஸ்தாபம் நீங்க பரிகாரம்

coouple fighting
- Advertisement -

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். மேலும் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்ற கூற்றும் இருக்கிறது. அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கக்கூடிய திருமணம் பாதியிலேயே விவாகரத்து நோக்கி செல்லக்கூடிய வாய்ப்புகள் இன்றைய காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. இதற்கு ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததும், தேவையற்ற விஷயங்களுக்காக சண்டை போடுவதும் தான் மிகப்பெரிய காரணமாக திகழ்கிறது.

இதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்லாததும் ஒரு காரணமாகவே திகழ்கிறது. இப்படி எந்த காரணமாக இருந்தாலும் கணவனும் மனைவியும் தங்களுடைய மனஸ்தாபங்களை நீக்கிவிட்டு ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

கணவனும் மனைவியும் எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஒருவருக்கொருவர் அணிசரித்துக் கொண்டு வாழ வேண்டும் என்று என்பதற்கு உதாரணமாக திகழக்கூடியவர்கள் தான் ராமரும் சீதையும். இவர்களைப் போல் தான் அனைத்து தம்பதிகளும் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் அந்த சூழ்நிலையை சமாளித்து ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு அனுசரித்து செல்ல வேண்டும். அப்படி ராமனும் சீதையும் போல வாழ வேண்டும் என்று கணவனும் மனைவியும் ஆசை பட்டாலும் சரி அல்லது அவர்களை பெற்றவர்கள் ஆசைப்பட்டாலும் சரி யார் வேண்டுமானாலும் இந்த ஒரு பரிகாரத்தை செய்தால் போதும் கணவனும் மனைவியும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு இரண்டு கிழியாத நல்ல வெற்றிலைகள் வேண்டும். அதோடு சுத்தமான பசு நெய் வேண்டும். வெற்றிலையை நன்றாக கழுவி விட்டு ஈரமில்லாமல் துடைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு வெற்றிலையை எடுத்து அதில் சுண்ணாம்பு தடவுவது போல் அந்த வெற்றிலை முழுவதும் பசு நெய் தடவ வேண்டும். அடுத்ததாக ஒரு சிறிய வெள்ளை நிற பேப்பரில் கணவனின் பெயர் அவருடைய ராசி இதை எழுதி இந்த நெய் தடவிய வெற்றிலையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இதே போல் மற்றொரு வெற்றிலையும் எடுத்து அதில் நெய்யை தடவி, ஒரு சிறிய பேப்பரை எடுத்து அதில் மனைவியின் பெயரையும் ராசியும் எழுதி அதை வெற்றிலையில் வைத்துவிட்டு இந்த ரெண்டு வெற்றிலைகளையும் ஒன்றாக சேர்த்து சுருட்ட வேண்டும். பிறகு மஞ்சள் நிற நூலால் இந்த வெற்றிலையை கிழியாத அளவிற்கு பத்திரமாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சுருட்டியை இந்த வெற்றிலையை காற்று புகாத ஒரு சில்வர் டப்பாவாக எடுத்து அந்த டப்பாவிற்குள் போட வேண்டும்.

பிறகு இதனுடன் பச்சை கற்பூரம் மூன்று துண்டுகள் போட்டு அந்த டப்பாவை மூடி பூஜை அறையில் வைத்து விட வேண்டும். ஒரு மாதம் வரை இதை திறக்கவே கூடாது. ஒரு மாதம் கழித்து இதற்குள் இருக்கக்கூடிய வெற்றிலைகளை கால்படாத இடத்தில் போட்டு விட வேண்டும். இந்த ஒரு மாதத்திலேயே கணவன் மனைவி இடையே இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் அனைத்தும் நீங்க ஆரம்பித்து ஒற்றுமை ஏற்பட்டு இருக்கும். அப்படி ஏற்படாத சூழ்நிலையில் மறுபடியும் திரும்ப இதே பரிகாரத்தை செய்து வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர பிரதோஷ தின பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்தால் கண்டிப்பான முறையில் கணவனும் மனைவியும் எந்தவித சண்டை சச்சரவுகளும் இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ முடியும்.

- Advertisement -