காஞ்சிபுரம் இட்லியை நல்லா புஸ்சுன்னு இப்படி மணக்க மணக்க செஞ்சு பாருங்க. காஞ்சிபுரத்துக்கே போனா கூட இப்படி ஒரு இட்லி சாப்பிட்டு இருக்க முடியாதுன்னு நினைப்பீங்க.

Kanchipuram Idly Recipe
- Advertisement -

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு ஊரின் பெயரை சொல்லும். இட்லியை பொறுத்த வரையில் எல்லா ஊரிலும் தான் செய்வார்கள். அதையும் பல வகையில் செய்வார்கள். ஆனால் காஞ்சிபுரத்தில் செய்யப்படும் இந்த இட்லி ரொம்பவே ஸ்பெஷலான ஒரு உணவு. இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவில் அப்படி ஒரு ஸ்பெஷலான இட்லியை எப்படி நம் வீட்டில் கொஞ்சம் கூட அதன் சுவை மாறாமல் செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

இந்த இட்லி செய்ய முதலில் 1 கப் இட்லி அரிசி, 1 கப் பச்சரிசி அல்லது சாதா புழுங்கல் அரிசி இத்துடன் 1/4 டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து இரண்டு முறை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்த பிறகு ஐந்து மணி நேரம் தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதே போல் 1 கப் உளுந்தை சுத்தம் செய்த பிறகு அதையும் தண்ணீர் ஊற்றி ஐந்து மணி நேரம் ஊற வைத்த பிறகு இட்லிக்கு மாவு அரைப்பது போல முதலில் உளுந்தை சேர்த்து அரைத்த உடன், அரிசியும் அரைத்து இரண்டையும் 1/2 ஸ்பூன் உப்பு போட்டு கரைத்து எட்டு மணி நேரம் அப்படியே புளிக்க வைத்து விடுங்கள்.

மாவு புளித்து இட்லி ஊற்றும் முன் அதில் ஒரு தாளிப்பை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்து சூடானவுடன் 2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் 1 டேபிள் ஸ்பூன் கடுகு, 1/2 டேபிள் ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்தவுடன் 10 முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

- Advertisement -

பிறகு 1டேபிள் ஸ்பூன் உளுந்து சேர்த்து வேறுபட்டவுடன் அடுப்பை லோ பிளேமில் வைத்து 1/2 டீஸ்பூன் சுக்கு பொடி, 1 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்,1 ஸ்பூன் சீரகம், 1/4 ஸ்பூன் பெருங்காயம், 1 கொத்து கருவேப்பிலை இவை அனைத்தையும் நெய்யில் வறுத்து பிறகு அதை மாவில் கலந்து விடுங்கள்.

அடுத்ததாக இந்த இட்லி ஊற்றுவதற்கு வாழை இலையை அடுப்பை பற்ற வைத்து அதன் தனலில் லேசாக வாட்டி எடுத்துக் அந்த இலையை சின்னதாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக நான்கு டம்ளரில் நறுக்கி வைத்த வாலை இலையை வைத்து அதன் பிறகு அதில் மாவை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன், ஒரு தட்டு வைத்து அதன் மேல் இந்த மாவு ஊற்றிய டம்ளர் வைத்து 15 நிமிடம் வேக வைத்து அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சாமை கூட்டாஞ்சோறு

இதன் சூடு ஆறியவுடன் டம்பளரில் இருந்து வாழை இலையை மெதுவாக எடுத்தால் மிருதுவான காஞ்சிபுரம் இட்லி சுடச்சுட தயார். இது போல மீதம் இருக்கும் மாவையும் இட்லி ஊற்றி கொள்ளுங்கள். இதற்க்கு காரா சட்னி தேங்காய் சட்னி இவற்றுடன் பரிமாறினால் மிகவும் அருமையாக இருக்கும்.

- Advertisement -