கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்து முதல் நாள் விரதத்தை நிறைவாக பூர்த்தி செய்திருப்போம். இரண்டாவது நாள் அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் பலனை பற்றி தெரிந்து கொண்டு செய்யும் பொழுது அதற்குரிய பலன் நமக்கு அதிக அளவில் கிடைக்கும் என்றே கூறலாம். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாளாக அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமை திகழ்கிறது. அன்றைய நாளில் பணப்பிரச்சினை முற்றிலும் தீர்வதற்காக முருகப்பெருமானை எந்த முறையில் வழிபாடு செய்ய வேண்டும் எந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.
கந்த சஷ்டி இரண்டாம் நாள் வழிபாடு
அக்டோபர் மாதம் 22ஆம் தேதி புதன்கிழமை அன்று கந்த சஷ்டி விரதம் ஆரம்பித்தது. முதல் நாள் சிறப்பான முறையில் பலரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்திருப்போம். ஒரு சிலர் விரதம் இருக்காமல் வழிபாட்டை மட்டும் செய்திருப்பார்கள். வழிபாட்டை செய்வதன் மூலம் ஏற்படக்கூடிய பலனையும் நாம் அறிந்திருப்போம் அந்த வகையில் கந்தசஷ்டி இரண்டாம் நாள் அன்று வழிபாடு செய்யும் முறையைப் பற்றியும் அந்த வழிபாட்டால் ஏற்படக்கூடிய பலனை பற்றியும் தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாட்டை அக்டோபர் மாதம் 23ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலையில் 7:30 மணியிலிருந்து 11 :40 மணிக்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்யலாம். விரதம் இருப்பவர்களாக இருந்தாலும் சரி வழிபாட்டை மட்டும் செய்பவர்களாக இருந்தாலும் சரி பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து “ஓம் சரவணபவ” என்னும் மந்திரத்தை 18 முறை கூற வேண்டும்.
வழிபாடு செய்யக்கூடிய நேரத்தில் முருகப்பெருமானின் சிலை அல்லது வேல் இருக்கும் பட்சத்தில் அதற்கு விபூதி அபிஷேகம் செய்ய வேண்டும். முதல் நாள் வழிப்பாட்டிற்கு சற்கோண கோலம் போட்டிருப்போம் அல்லவா? அந்த சற்கோண கோலத்தில் ச ர என்ற இரண்டு எழுத்திற்கு மேலே இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு கிழக்கு திசை பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு வாசனை மிகுந்த மலர்களை பயன்படுத்தி “ஓம் க்லீம் சரவணபவ ஓம்” என்னும் மந்திரத்தை 308 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.
கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் அன்று கந்த சஷ்டி கவசத்தை இரண்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை செய்யும் பொழுது முருகப்பெருமானுக்கு பருப்பு பாயாசம் மற்றும் காய்ச்சிய பாலை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இந்த முறையில் முருகப் பெருமானை கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே: சஷ்டி இரண்டாம் நாள் வழிபாடு
கந்த சஷ்டி விரதத்தின் இரண்டாம் நாள் அன்று முருகப்பெருமானை இந்த முறையில் முழுமனதோடு வழிபாடு செய்பவர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.