இன்று ஞாயிற்றுக்கிழமை. 22-6-2025 ஆம் தேதி, மதியம் 4 மணிக்குப் பிறகு கிருத்திகை நட்சத்திரமானது பிறக்கவிருக்கிறது. இந்த கிருத்திகை நட்சத்திரம் நாளைய தினம் 23ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 2:18 மணி வரை இருக்கிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் கட்டாயம் முருகர் வழிபாட்டை செய்ய வேண்டும். முருகர் பரிபூரண அருள் நமக்கு கிடைத்துவிட்டால், நாள்பட்ட கஷ்டங்கள் எல்லாம் நசுங்கி நொடிந்து காணாமல் போய்விடும். நீங்களும் உங்கள் கஷ்டத்தில் இருந்து விடுபட வேண்டுமா இன்று படிக்க வேண்டிய கந்தர் அனுபூதி பாடலில் இருந்து ஒரு நான்கு வரி உங்களுக்காக.
இந்த கிருத்திகை நன்னாளில் கந்தர் அனுபூதியில் இருந்து எடுக்கப்பட்ட எளிமையான நான்கு வரிகளைப் படித்தாலே போதும் துன்பங்கள் நம்மை விட்டு விலக துவங்கும். இந்த கிருத்திகை நட்சத்திரம் பிறந்த பிறகு, நாளை மதியம் வரை இந்த வழிபாட்டை நீங்கள் எந்த நேரத்தில் செய்தாலும் சரிதான்.
முருகன் கோவிலுக்கு சென்று விளக்கு போட்டு இந்த மந்திரத்தை படித்தாலும் சரி, வீட்டிலேயே முருகர் வழிபாடு செய்து முருகருக்கு செவ்வரளி பூக்களை சாத்தி, விளக்கி ஏற்றி முருகர் முன்பு அமர்ந்து இந்த வரிகளை படித்தாலும் சரி. உங்கள் வாழ்நாளில் இருக்கும் நாள்பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு காலம் கிடைக்கும். முதலில் இன்று நாம் படிக்க வேண்டிய அந்த பாடல் வரிகளை பார்த்து விடுவோம்.
கந்தர் அனுபூதி ஏழாம் பாடல்
கெடுவாய் மனனே, கதி கேள், கரவாது
இடுவாய், வடிவேல் இறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடு வேதனை தூள்படவே
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.
நம்முடைய மனமானது எப்போதுமே கெட்ட எண்ணங்கள் இருக்கக் கூடாது. தனக்கு தனக்கு என்று எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளாமல், பிறருக்கு தானம் செய்ய வேண்டும். பிறருக்கு தானம் கொடுக்கும்போது நல்ல வார்த்தைகளை மட்டுமே பேச வேண்டும். பிறருக்கு தானம் கொடுக்கும் போது முருகனின் பாதத்தை வணங்கி, இதெல்லாம் என்னால் கொடுக்கப்படும் தானங்கள் அல்ல, முருகா, உன்னால் மட்டுமே இதெல்லாம் சாத்தியம் என்று முருகனின் பாதங்களை வணங்கி, தான தர்மங்களை வழங்க வேண்டும்.
எவர் ஒருவர் முருகனின் பெயரைச் சொல்லி தானம் கொடுக்கின்றாரோ, அவர்கள் கர்ம வினைகள் குறையும். கஷ்டங்கள் நீங்கும் நாள்பட்ட துன்பத்திலிருந்து வெளிவரலாம் என்று சொல்கிறது இந்த பாடல் வரிகள்.
முருகன் குடியிருக்கும் மனம் எப்போதுமே பூந்தொட்டி போல, பூத்துக் குலுங்கும் பூக்கள் போல, அழகாகத்தான் இருக்கும். உங்கள் மனதில் முருகப்பெருமாள் குடியிருந்தால், இந்த பாடலை இன்று படிக்கக் கூடிய பாக்கியம் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும். அடுத்தவர்களோடு பேசும்போது, முகம் மலர்ச்சியோடு பேசுங்கள். நன்றி சொல்லுங்கள்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்த பரிகாரம்
தானம் என்றால் பொன் பொருளை கொடுப்பது மட்டும் தானம் கிடையாது. நம் வாய்த்திலிருந்து வரக்கூடிய நல்ல வார்த்தைகளும், ஆறுதலும், அடுத்தவர்களுக்கு உடலை வருத்திக் கொண்டு செய்யக்கூடிய உதவி கூட ஒரு விதத்தில் தானம் தான். முருகனுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திரத்தன்று இந்த பாடலை உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மனநிறைவுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை நிறைவு செய்து கொள்வோம்.