- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி அகல, எதிரிகளின் தொல்லை நீங்க இந்த செடியை உங்கள் வீட்டில் எந்த திசையில்...

கண் திருஷ்டி அகல, எதிரிகளின் தொல்லை நீங்க இந்த செடியை உங்கள் வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்று தெரியுமா

- Advertisement -

இறைவனை நம்பாதவர்கள் கூட தங்கள் கையிலோ அல்லது காலிலோ ஒரு கருப்பு நிற கயிறை கட்டி கொண்டிருப்பதை பார்க்க முடியும். கருப்பு நிற கயிறு கட்டிக் கொள்வது எதற்காக என்றால் கண்திருஷ்டியினால் தாங்கள் எந்த வகையிலும் பாதிக்காமல் இருப்பதற்காக தான். இவ்வாறு கண் திருஷ்டியினால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஒருவர் நம்மை பொறாமையோடு பார்ப்பதும், ஏக்கத்தோடு பார்ப்பதும் கண்திருஷ்டியாக மாறுகிறது. இவ்வாறான எதிரிகளின் தொல்லை நீங்கவும், கண் திருஷ்டி அகலவும் செம்பருத்தி செடியை நமது வீட்டில் வைத்து வளர்த்திட்டால் போதும். இந்தச் செடியை நமது வீட்டில் எந்த திசையில் வைத்து வளர்த்தால் தகுந்த பலன் கிடைக்கும் என்பதை பற்றிதான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

black-rope-karuppu-kayiru

இந்த நவீன உலகத்தில் எண்ணமுடியாத நட்சத்திரத்தின் எண்ணிக்கையைக் கூட அறிந்து விடலாம். ஆனால் இவ்வுலகில் எவ்வளவு விதமான பூக்கள் இருக்கிறது என்பதை எவராலும் துல்லியமாக கணக்கிட முடியாது. அந்த அளவிற்கு இந்தப் பிரபஞ்சத்தில் பூக்கள் பரவி காணப்படுகின்றன. அவ்வாறு கணக்கிலடங்கா பூக்களிலெல்லாம் மிகவும் முதன்மையானது இந்த செம்பருத்தி மலராகும். மல்லிகைப்பூவை விடவும் மிகவும் மகத்தானது இந்த செம்பரத்தி மலர்.

- Advertisement -

செம்பருத்தி மலரைக் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்து நமக்கு என்ன வேண்டுமோ அதை வேண்டிக் கொண்டால் நிச்சயம் அதற்கான அருள் கிடைத்து விடும் அவ்வாறு செம்பருத்தி மலருக்கு இறைவனையே தன்வசப்படுத்தும் நேர்மறை சக்தி இருக்கிறது.

sembaruthi

ஒரு சில வீடுகளில் மல்லிகை அரளி இதைப் போன்ற மலர்கள் இல்லாத சமயங்களில் மட்டுமே செம்பருத்தி பூவை வைத்து இறைவனை வழிபடுவார்கள். அவ்வாறு ஒவ்வொரு கடவுளுக்கும் ஒருவித தனிப்பட்ட மலர்களை வைத்து பூஜை செய்வோம்.

- Advertisement -

ஆனால் அனைத்து கடவுள்களுக்கும் உகந்த ஒரே மலர் இந்த செம்பருத்தி பூ தான். சிவப்பு வண்ணத்திற்க்கென்று பொதுவாகவே மற்றவர்களை ஈர்க்கும் திறன் அதிகமாக இருக்கும். கூட்டத்தில் எவரேனும் ஒருவர் சிவப்பு உடை அணிந்திருந்தால் முதலில் நமது கண் அவரை நோக்கி தான் இருக்கும். அது போல இந்த சிவப்பு வண்ண மலருக்கு இறை சக்தியை தன்னிடம் ஈர்க்கும் திறன் இருக்கிறது.

sembaruthi

எனவே எந்த வீட்டில் செம்பருத்தி செடி இருக்கிறதோ அந்த வீட்டில் எப்போதும் தெய்வ கடாட்சம் நிறைந்து காணப்படும். அதுமட்டுமல்லாமல் தெய்வ கடாட்சம் நிறைந்துள்ள வீட்டில் எதிரிகளின் எவ்வித தீய செயலும் வீட்டில் உள்ளவர்களை பாதிக்காது. எந்த ஒரு கண் திருஷ்டியும் இவர்களின் முன்னேற்றத்தை தடுக்காது.

mahalakshmi

எனவே செம்பருத்தி செடியை வீட்டில் கட்டாயம் வளர்த்திட வேண்டும். அதிலும் முக்கியமாக தெற்கு அல்லது மேற்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். இந்த திசையில் செம்பருத்தி செடி இருந்தது என்றால் வீட்டிற்க்கு மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அவ்வாறு இல்லையென்றாலும் வீட்டின் முன்பக்கம் வைத்து வளர்க்க வேண்டும். நமது வீட்டிற்க்கு வருபவர்களின் கண்பார்வை இந்த செம்பருத்தி செடி மீது விழும்படி வைத்திருக்க வேண்டும்.

சற்று முன்