2500 ஆண்டுகளாய் சிலை இல்லாத முருகன் கோவில் – தரிசித்தால் நிச்சய் பலன்

murugan

“குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்” என்பது போல, “தமிழர்கள்” இருக்கும் இடமெல்லாம் முருகன் கோவில் கொண்டிருப்பான் என்றும் கூறலாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் வாணிபத்தில் உலகின் பல இன மக்கள் ஈடுபட்டிருந்த காலத்திலேயே அவர்களுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தமிழர்கள். அப்படி தமிழர்களும் வியாபார நிமித்தமாக பல நாடுகளுக்கு கடல் கடந்து சென்ற போது, தங்கள் செல்வங்களை மட்டுமில்லாமல் தங்களின் பண்பாடு மற்றும் தெய்வ வழிபாடு முறைகளையும் கொண்டு சென்றனர். அங்கு சென்ற பின்பு தங்களின் தெய்வங்களுக்கு கோவில்களும் எழுப்பினர். அவ்வாறான கோவில்களில் பெரும்பாலானவை முருகப்பெருமானுக்குரியதாகத் தான் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு கோவில் தான் “கண்டிக் கதிர்காம முருகன்” கோவில்.

Lord Murugan

“கந்த புராணத்தின்” படி முருகப்பெருமான் வேடுவ குலப் பெண்ணான “ஸ்ரீ வள்ளியை” இங்கு தான் முதலில் சந்தித்ததாக கூறப்படுகிறது. அடர்ந்த காட்டிற்குள்ளே இருந்த இக்கோவிலுக்கு,15 ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வாழ்ந்துவரும், முருகனின் பெருமை கூறும் ‘திருப்புகழ்” என்ற நூலை இயற்றியவருமான “அருணகிரிநாதர்” வருகை தந்தார். அவர் இக்கோவிலை முருகனின் புனித தளங்களிலில் ஒன்று என அறிவித்தார். அதனால் அன்று முதல் இன்று வரை இக்கோவிலுக்கு, தமிழர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபாடு செய்கின்றனர்.

பொதுவாக ஒரு கோவிலென்றால் அக்கோவிலின் கருவறையில் கல்லாலான “மூலவர்” சிலையோ, உலோகத்தாலான “உற்சவர்” சிலையோ இருக்கும். ஆனால் இக்கோவிலில் இவை இரண்டும் இல்லாமல் தெய்வமான முருகன்,வள்ளி,தெய்வானை உருவம் வரையப்பட்ட துணியாலான “திரைசீலை” மட்டுமே இருக்கிறது. இத்திரைசீலையையே தெய்வமாக பாவித்து பூஜைகளும், வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.

பௌத்தர்களும், இக்கோவிலை “புத்தர் வந்து சென்ற இடம்” என்று கருதி இங்கு வழிபாடுகள் செய்கின்றனர். இப்படிப்பட்ட விசித்திரமான இந்த முருகன் கோவில் இலங்கையின் தென்பகுதியில், உவ மாகாணத்திலிருக்கும் “கண்டி” என்ற ஊரில் அமைந்துள்ளது.” 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலில் மன்னர்கள் நேர்த்திக்கடன் செலுத்தியதற்கான குறிப்புகள் மகாவம்சம் என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோயிலிற்கு இலங்கையையை சார்ந்த பல முக்கிய பிரமுகர்கள் இன்று சென்று முருகனை தரிசித்து வருகின்றனர்.