- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதங்கம் சேர பங்குனி பௌர்ணமி பரிகாரம்

தங்கம் சேர பங்குனி பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நம்முடைய வருமானத்தையும், தங்கம் விற்கும் விலையையும் பார்த்தால், ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாது என்று நீங்கள் சிந்திப்பது நன்றாகவே புரிகிறது. ஆனால் வேறு வழி கிடையாது. சில சுபகாரியங்களுக்கு தங்கம் மிக மிக அவசியம். அது மட்டும் அல்லாமல் வீடு என்று இருந்தால் அந்த இடத்தில் கொஞ்சம் தங்கம் இருக்க வேண்டும். பெண்களுக்கு ஐஸ்வர்ய கடாட்சத்தை கொடுக்கக்கூடிய தங்கம் கட்டாயம் தேவை.

இந்த தங்கத்தை மேலும் மேலும் சேர்க்க ஒரு சுலபமான வழி இருக்கிறது. தங்கம் சேரும் பரிகாரத்தை, இந்த பௌர்ணமி நாளில் செய்யும்போது, நமக்கு அபரிவிதமான பணம் கிடைக்கும். உங்களிடம் இருக்கும் சின்ன குண்டுமணி தங்கம் கூட, பல பவுன் தங்கமாக மாறுவதற்கு அந்த இறைவன் ஆசீர்வாதத்தை நிலவின் ரூபத்தில் உங்களுக்கு வழங்குவான். பரிகாரத்தை இன்று இரவு நிலவு வெளிச்சத்தில் எப்படி செய்வது பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

மிக மிக எளிமையான பரிகாரம்தான். இந்த பரிகாரம் செய்ய வெறும் பச்சரிசி போதும். உங்களுடைய வீட்டில் சமையல் அறையில் இருக்கும் பச்சரிசியை ஒரு சின்ன கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்த பச்சரிசிக்கு மேலே உங்களிடம் இருக்கும் தங்கத்தை வைக்க வேண்டும். மோதிரம் மூக்குத்தி கம்பல் இப்படி மிகக் குறைந்த அளவில் சின்ன தங்கம் இருந்தால் கூட அதை நன்றாக சுத்தம் செய்துவிட்டு, துடைத்துவிட்டு இந்த பச்சரிசி மேலே வைத்து விடுங்கள்.

நிலவு உதயமான பிறகு வெட்ட வெளியான இடத்திற்கு சென்று சந்திர பகவானை பார்த்து, கையில் இந்த கிண்ணத்தை வைத்துக் கொள்ளவும். கிண்ணத்திற்கு மேலே பச்சரிசி, பச்சரிசிக்கு மேலே தங்கம் இருக்கிறது. இதோடு வேண்டுதல் வைக்க வேண்டும். இரண்டு கைகளையும் ஏந்திய படி வைத்துக்கொண்டு அதற்கு நடுவே இந்த கிண்ணத்தை வைத்து கொண்டு, சந்திர பகவான், குலதெய்வத்தை மனமுருக வேண்டி, எனக்கு ஐஸ்வர்ய கடாட்சம் அதிகமாக கிடைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் இன்னும் நிறைய தங்கம் சேர வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அடமானத்தில் ஏதாவது நகை வைத்திருந்தால் அந்த அடமானம் சீக்கிரம் மீட்கப்பட வேண்டும் என்று வேண்டுதல் வைக்கலாம். இந்த பிரார்த்தனையை வீட்டில் இருக்கும் பெண்கள் வைப்பது சிறப்பு. அந்த நேரத்தில் பெண்கள் மகாலட்சுமி ஸ்வரூபத்தில் இருக்க வேண்டும். மேக்கப் எல்லாம் போட வேண்டாம்.

சுத்த பத்தமாக குளித்துவிட்டு, வாசனை திரவியம் ஏதாவது மேலே பூசிக்கொண்டு, மல்லிகை பூ சூடிக்கொண்டு, அழகான சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு, இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். நைட்டி அணிந்து கொண்டு பரிகாரம் செய்யக்கூடாது. சுடிதார் அல்லது புடவை உங்கள் வசதிக்கேற்ப இந்த மாதிரி உள்ள ஆடைகளை அணிந்து கொண்டு பரிகாரத்தை செய்தால் பலன் அபரிவிதமாக கிடைக்கும்.

- Advertisement -

உங்கள் கையில் இருக்கும் இந்த தங்கம் இன்னும் அதிகமான தங்கத்தை ஈர்த்துக் கொண்டு வந்து உங்களுடைய வீட்டில் சேர்க்கும். வேண்டுதலை 10 நிமிடம், 15 நிமிடம் ஆத்மார்த்தமாக செய்யுங்கள். கடமைக்காக செய்தால் பலன் கட்டாயம் கிடைக்காது. வேண்டுதலை நிறைவு செய்து கொண்டு பிறகு இந்த பச்சரிசியையும், தங்கத்தையும் அப்படியே கொண்டு போய் வீட்டு பீரோவில் வைத்து விட வேண்டும்.

நேர்மறை ஆற்றல், பாசிட்டிவ் எனர்ஜி அப்படியே உங்கள் பீரோவை வந்து சேரும். நிச்சயம் உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி மேலும் மேலும் தங்கம் சேர இந்த பரிகாரம் உதவி புரியும். அடுத்த பௌர்ணமிக்கு பழைய பச்சரிசியை எடுத்து காக்கை குருவிகளுக்கு இறையாக போடலாம் அல்லது பசு மாட்டிற்கு போட்டுவிட்டு, தங்கத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: 12.4.2025 பௌர்ணமி நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

நாளை அதிகாலை 4:30 மணி வரை இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். அதாவது இந்த பௌர்ணமி நிலவு வானத்தில் இருக்கும் வரை பரிகாரம் செய்ய உங்களுக்கு நேரம் இருக்கிறது. அடுத்த பௌர்ணமிக்கும் இதேபோல பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர உங்களுடைய வாழ்க்கையில் தங்கம் அதிகம் சேருவதை கண்கூடாக பார்ப்பீர்கள் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்