வராஹ சரம ஸ்லோகம்

varagam-compressed

உயிர்கள் அனைத்திற்குமே அச்சம் என்கிற உணர்வு பொதுவானதாகும். அச்ச உணர்வுகள் எல்லாமே மரணத்துடன் தொடர்புடையவையாக இருக்கிறது. மரணம் பயங்கரமானதல்ல ஆனால் மரண பயம் கொடுமையானது. இளம் வயதினர் முதல் முதியவர்கள் வரை சிலருக்கு இந்த மரண பயம் பாடாய்படுத்துகிறது. பிறருக்கு ஏற்படும் துர்மரணங்களை கண்டு மேலும் பயப்படுகின்றனர். இப்படியான பயங்கள் மற்றும் கவலைகளை போக்கும் ஸ்ரீ வராகமூர்த்தி அருளிய வராக சரம ஸ்லோகம் இதோ.

varagamoorthi

வராக சரம ஸ்லோகம்

ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம்
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம்

திருமாலின் மூன்றாவது அவதாரமான ஸ்ரீ வராக மூர்த்தி பூமாதேவிக்கு கூறிய ஸ்லோகம் இது. இந்த வராக சரம ஸ்லோகத்தை எல்லா நாட்களிலும் உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாய்விட்டு படித்தோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபிக்கலாம். நாராயணனின் வழிபாட்டிற்குரிய மாத வளர்பிறை ஏகாதசி, சனிக்கிழமைகள் போன்ற தினங்களில் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை வழிபட்ட பின்பு அங்கு தியான நிலையில் அமர்ந்து இந்த ஸ்லோகத்தை மனதிற்குள்ளேயே 108 முறை ஜெபிப்பவர்களுக்கு துர்மரணம் ஏற்படாது. மரணம் குறித்த பயங்கள் நீங்கும். தேவையற்ற கவலைகளிலிருந்து மனம் விடுபடும்.

varagar

பூமியை கடலுக்குள் சென்று ஒளித்து வைத்த இரண்யாட்சகனிடமிருந்து பூமாதேவியை மீட்க திருமால் வராகமூர்த்தி அவதாரம் எடுத்து, இரண்யாட்சகனை வதம் புரிந்து பூமாதேவியை தனது தோளில் தங்கி கொண்டு திரும்பும் போது தேவியிடம் ஸ்ரீ வராகமூர்த்தி “எந்த ஒரு பக்தன் அல்லது பக்தை நித்தமும் என்னை நினைக்கின்றார்களோ, தினந்தோறும் என்னை வழிபட்டு எப்போதும் என் மீதான பக்தியுடன் இருக்கின்றார்களோ, அந்த பக்தர்களின் அனைத்து துயரங்களையும் நான் போக்குவேன், அவர்களை எல்லோரும் கைவிட்ட போதிலும் நான் அவர்களை ஒருபோதும் கைவிடேன்” என்ற பொருள் பட கூறிய ஸ்லோகமே சரம ஸ்லோகம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
சந்திர பகவான் ஸ்தோத்திரம்

இது போன்று மேலும் பல மந்திரங்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we Varaha charama slokam in Tamil. It is also called as Varaha charama slogam in Tamil or Varaha charama mantra in Tamil.