இந்த ஒரு தானத்தை மட்டும் தொடர்ந்து செய்தால் போதும். உங்கள் குடும்பம் பல தலைமுறைகளுக்கு தலைதூக்கி நிற்கும்.

women
- Advertisement -

இன்று நாம் செய்யக்கூடிய தான தர்மம் தான் நம்முடைய குடும்பத்தின் தலைகாக்கும் என்று சொல்லுவார்கள். அந்த வரிசையில் உங்களால் இயன்ற அளவு உங்களைவிட வசதி குறைவாக உள்ளவர்களுக்கு, தான தர்மங்களை செய்து கொண்டே இருங்கள். நீங்கள் மனதார செய்யக்கூடிய தானதர்மம் நிச்சயமாக உங்களுடைய குடும்பத்தின் தலை காக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. சில வீடுகளில் தொடர்ந்து சில கஷ்டங்கள் தொல்லை கொடுத்து வரும்.

indian-family

சில வீடுகளில் குழந்தைகளால் பெரிய பெரிய கஷ்டங்கள் சங்கடங்கள் இருக்கும். குழந்தைகளுக்கு தீராத நோய்நொடி பிரச்சனை இருக்கலாம். அவர்கள் சொல் பேச்சு கேட்காமல் படிக்காமல் வாழ்க்கையை தடுமாறி தவறான பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை இருக்கலாம். சில குழந்தைகளுக்கு திருமணமாகாமல் இருக்கலாம்.

- Advertisement -

பல பிரச்சினைகள் சூழ்ந்து வீட்டில் இருக்கும் குடும்ப தலைவருக்கும் தலைவிக்கும் மன நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். பண கஷ்டம் இருக்கும். மன கஷ்டம் இருக்கும். தீராத கடன் இருக்கும். சொல்லப்போனால் அந்த குடும்பம் கடந்த வந்த பாதையும் ரொம்ப கடினமான பாதையாக இருக்கும். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையும் மிக மிக கடினமானதாக இருந்துவரும்.

family fight

அதாவது முந்தைய தலைமுறையில் வாழ்ந்தவர்களும் சரி, தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் நிறையவே கஷ்டப்பட்டு வருவார்கள். தங்களுடைய குடும்ப சொத்துக்களை கூட விற்று சாப்பிடும் நிலை சில குடும்பத்தில் இருக்கும். சொத்து விற்று வந்த பணமும் வீண் விரயமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டுமென்றால் இவர்கள் செய்ய வேண்டிய தானம் என்ன.

- Advertisement -

மாதத்தில் 1 நாள் கட்டாயம் இந்த தானத்தை செய்துவிட வேண்டும். 3 கன்னிப்பெண்களுக்கு இந்த தானம் போய் சேர வேண்டும். திருமணம் ஆகாமல் வயதுக்கு வந்த கன்னிப்பெண்கள் இருப்பார்கள் அல்லவா. அவர்களில் யாரேனும் 3 பேருக்கு இந்த தானத்தை கொடுக்கலாம். ஒரு மஞ்சள் நிற ரவிக்கைத் துணி, வெற்றிலை 2, பாக்கு 2, விரலிமஞ்சள் 2, 11 ரூபாய், உங்களால் முடிந்த இனிப்பு, இந்த எல்லா பொருட்களையும் அந்த மஞ்சள் ரவிக்கை துணியின் மீது வைத்து கன்னிப் பெண்ணுக்கு தானமாகக் கொடுத்து விடுங்கள்.

thambulam-1

இந்த பொருட்களை எல்லாம் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை இந்த இரு தினங்களில் தானம் கொடுப்பது மிக மிக சிறப்பானது. ஏதாவது கோவிலுக்கு சென்றால் கூட அங்கு வரும் கன்னிப் பெண்களுக்கு நீங்கள் இந்த பொருட்களை தானமாக கொடுப்பது மிக மிக நல்லது.

temple-wedding

உங்களுடைய குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். உங்கள் குடும்பத்திற்கு இருந்து வரும் கஷ்டங்கள் படிப்படியாக குறைய வேண்டும். உங்கள் குடும்பம் தலை தூக்க வேண்டும், அடுத்து வரக்கூடிய தலைமுறைகளாவது கஷ்டம் இல்லாமல் வாழ வேண்டும் என்று கன்னி தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு இந்த தானத்தை தொடர்ந்து, உங்கள் ஆயுசுக்கும் செய்து வரவேண்டும். இப்படி மனதில் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டு இந்த தானத்தை கொடுக்க தொடங்குங்கள். உங்களுக்குப் பிறகு உங்கள் பிள்ளைகளிடம் சொல்லி, இந்த தானத்தை நிறுத்தாமல் செய்யச் சொல்லுங்கள். உங்கள் கஷ்டங்கள் அனைத்தும் படிப்படியாக குறைவதை கண்கூடாக காணலாம். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயமாக இதில் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -