கந்த புராணத்தோடு தொடர்புடைய நார்வே, பின்லாந்து நாட்டு மக்கள் பற்றி தெரியுமா ?

Murugan-compressed

உலகத்தில் பல நாடுகள் உள்ளன ஒவ்வொரு நாட்டிலும், அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கேற்ற புவியியல், தட்பவெட்பம், பண்பாட்டுக்கேற்றவாறு அந்த நாட்டிற்குள்ளேயே பல வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் முற்காலத்தில் இந்த உலகம் முழுதும் இருந்த மக்களில் பெரும்பாலானோர் ஒரே மாதிரியான பண்பாடு மற்றும் வாழ்வியல் முறைகளை கொண்டிருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்து வருகின்ற. சிலவற்றிற்கு நம்பகமான ஆதாரங்கள் இல்லையென்றாலும், அதை சற்று விரிவாக ஆராயும் போது நமக்கு பல ஆச்சரியங்களை தருகின்றன. அப்படிப்பட்ட ஒரு விடயம் தான் இது.

Murugan

இன்று பூமியின் வட துருவ பகுதிக்கு அருகில் இருக்கும் நாடுகளான “நார்வே, ஸ்வீடன், பின்லாந்து,” போன்ற நாடுகள் இருக்கும் பகுதியை பூகோள ரீதியாக “ஸ்காண்டிநேவியா” பகுதி என்றழைக்கின்றனர். ஆனால் நமது நாட்டின் சில புராண ஆய்வாளர்கள் கூற்றுப்படி ஸ்காண்டிநேவியா என்ற பெயர் “ஸ்கந்தநவம்” என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்ததாக கூறுகிறார்கள்.

“கந்த புராணத்தில்” முருகப் பெருமான் சூரபத்மனுக்கெதிராக புரிந்த போரில் முருகனின் படைத்தளபதியாக செயலாற்றிய “வீரபாகுவும்” மற்ற எட்டு
தளபதிகளுடன் சேர்ந்து போரிட்டு, சூரபத்மனை வீழ்த்தினர். பின்பு இந்த ஒன்பது தளபதிகளும் வட திசையை நோக்கி சென்று, அங்கிருந்த மக்களுக்கு போர்கலைகளை கற்றுத்தந்திருக்க இடமுண்டு என இந்த புராண ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். எனவே முருகனின் மற்றொரு பெயரான ஸ்கந்தனின் நவ தளபதிகள் இவர்கள் என்பதால் “ஸ்கந்தநவம்” பிற்காலத்தில் “ஸ்கேண்டிநேவியா” ஆகியிருக்கலாம் என கருதுகிறார்கள்.

Lord Murugan

இந்த ஸ்காண்டிநேவிய பகுதியில் இருந்த மக்கள் 8 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரை வட ஐரோப்பிய நாடுகளை தங்களின் போர்த்திறனால் நடுங்க வைத்த “வைகிங்” இன மக்கள் நமது பண்டைய தமிழர்களை போலவே சிறந்த கடலோடிகளாகவும், போர்க்குணம் கொண்டவர்களாக இருந்ததை அவர்களின் வரலாற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் இந்த வைகிங் இனத்தினர் பின்பற்றிய இறந்தோர்களின் ஈமைக்கிரியைகள் சில பண்டைய தமிழர்கள் பின்பற்றிய முறைகளை ஒத்திருக்கிறது. இதிலிருந்து அக்காலத்திலேயே பிற நாகரீக மக்களுக்கும் தங்களது ஆன்மீகம் மற்றும் இன்ன பிற கலைகளையும் நம்மவர்கள் கற்றுத்தந்திருப்பதை அறிய முடிகிறது.

இதையும் படிக்கலாமே:
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோவில் பற்றி இதெல்லாம் தெரியுமா ?

இது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் கடவுளின் அற்புதங்கள் பலவற்றை அறிய எங்களோடு இணைந்திருங்கள்