- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகண் திருஷ்டி கழிய ஆடி அமாவாசை நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

கண் திருஷ்டி கழிய ஆடி அமாவாசை நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

- Advertisement -

குடும்பத்தில் இருப்பவர்களுடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தடையாக இருப்பது அடுத்தவர்களுடைய கண் திருஷ்டியும், அடுத்தவர்களுடைய பொறாமை குணமும் தான். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட்டாலே போதும். நம்முடைய குடும்பம் சீக்கிரம் முன்னேறி விடும். நாளைய தினம் ஆடி அமாவாசை.

அதுவும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து இந்த அமாவாசை திதி வந்திருப்பது ரொம்ப ரொம்ப சிறப்பு. கண் திருஷ்டி கழிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான பரிகாரத்தை தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவு மூலம் நான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

நாளை காலை எழுந்து வாசல் தெளித்து விடுங்கள். நாளைய தினம் அமாவாசை திதி என்பதால் கோலம் போடக்கூடாது. ஆனால் சில பேர் கோலம் போடக்கூடிய வழக்கத்தை வைத்திருப்பார்கள். அந்த ஒரு பிரிவினர் மட்டும், பளிச்சன கோலம் போடாமல் செம்மண்னில் சின்னதாக கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து இரண்டாக அறுத்து, குலதெய்வத்தை வேண்டி ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தில் மஞ்சளையும், ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தில் குங்குமத்தையும் தடவி நிலை வாசல் படியில் வைத்து விடுங்கள். அவ்வளவுதான். இந்த எலுமிச்சம் பழம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை எல்லாம் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும்.

- Advertisement -

வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை சக்திகளையும் தடுத்து நிறுத்தும். காலையில் இந்த பரிகாரத்தை செய்யவும். இந்த எலுமிச்சம் பழம் வாடும்வரை நிலை வாசல் படியிலேயே இருக்கலாம். வாடிய பின்பு எடுத்து குப்பை தொட்டியில் போட்டால் போதும்.

நாளை மாலை 6:00 மணிக்கு மேலாக குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் கிழக்கு பார்க்கவாரு அமர வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு மூத்தவர்களாக இருப்பவர்கள் ஒரு எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துக் கொள்ளவும். அதை நான்கு பாகங்களாக வெட்டிக் கொள்ளுங்கள். நான்கு துண்டுகளாக கையில் பிரித்து விடக்கூடாது. எலுமிச்சம் பழத்தை முக்கால் பாகம் வெட்டி இருக்க வேண்டும். அது நான்காக பிரிந்து இருக்க வேண்டும்.

- Advertisement -

அதன் நடுவே கொஞ்சமாக கல் உப்பு, 2 சிட்டிகை குங்குமம், அதன் மேலே 3 மிளகு மட்டும் வைத்து இந்த எலுமிச்சம்பழத்தை குடும்ப உறுப்பினர்களை சுற்றி ஒரு பேப்பரில் வைத்து மடித்து குப்பை தொட்டியில் அல்லது ஊருக்கு ஒதுக்குப்புறமாக போட்டு விட வேண்டும். குப்பைத்தொட்டியில் போட்டு குப்பை தொட்டியை வீட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளக் கூடாது. எதிர்மறை ஆற்றல் வீட்டுக்குள்ளேயே சுற்றும். ஆகவே குப்பை கூடையை எடுத்து வெளியில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடன் கரைய ஆடி அமாவாசை பரிகாரம்

நிலை வாசல் படிக்கு வெளிப்பக்கம் அந்த குப்பை கூடையை இரவே எடுத்து வைத்து விடவும். நாளைய தினம் எளிமையான இந்த முறைப்படி கண்திருஷ்டி கழித்தாலே உங்கள் குடும்பத்தை பிடித்த கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை அமாவாசை தினத்தில் கண் திருஷ்டி கழிக்க கூடிய இந்த இரண்டு எளிய பரிகாரங்களும் உங்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இன்றைய ஆன்மீகம் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்