பொல்லாத கண்திருஷ்டியை பொடிப்பொடியாக்க இந்த 2 பொருட்களை சேர்த்து இப்படி சாப்பிட்டாலே போதும். அந்தக் கண் திருஷ்டி உங்களை கண்டாலே கருகிப் போய்விடும்.

jeeragam

ஓஹோ என்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்களையும் ஒன்றுமே இல்லாமல் ஆக்க கூடிய சக்தி இந்த கண்திருஷ்டிக்கு உண்டு. ஒருவருடைய மனதில் எழக்கூடிய எண்ணத்தை, வெளிப்பாடு செய்யும் கருவி தான் நம்முடைய இரண்டு கண்கள். நம்முடைய எண்ணம் நல்ல எண்ணமாக இருந்தால், நம் கண்களில் இருந்து வெளிவரக் கூடிய ஆற்றல், நேர்மறை ஆற்றல் ஆக இருக்கும். நம்முடைய எண்ணம் எதிர்மறை எண்ணமாக இருந்து, பொறாமை குணத்தை பெற்றிருந்தால், கண்களில் இருந்து வெளிவரக் கூடிய ஆற்றல் எதிர்மறை ஆற்றல் ஆக இருக்கும். இந்த எதிர்மறை ஆற்றல் ஒருவரை வாழவிடாமல் அழிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்த ஒன்று.

thristi

ஜாதக கட்டத்தில் கிரகங்கள் சரியான இடத்தில் இருந்தும் ஒருவருடைய வாழ்க்கையில் சரிவு ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் இந்த கண் திருஷ்டி தான். கண்திருஷ்டியால் உடலளவில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதை தடுக்க நம்முடைய முன்னோர்கள் பல வழிகளை நமக்கு சொல்லி விட்டுச் சென்றுள்ளார்கள். அந்த வழிமுறைகளில் ஒரு சுலபமான முறையை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த கண் திருஷ்டியை நம் உடலிலிருந்து முழுமையாக நீக்க, நம் வீட்டிற்கு வந்தவர்கள், நம் மீது வைத்த கண் திருஷ்டியை வெளியே எடுக்க இதை மட்டும் செய்தாலே போதும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவேண்டும். 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வையுங்கள். ஜீரகம் தண்ணீரில் நன்றாக வெந்தவுடன் தேவையான அளவு கருப்பட்டி அல்லது வெல்லத்தை சேர்த்து நன்றாக கரைத்து, வடிகட்டி அந்த தண்ணீரை உங்கள் வீட்டுக்கு, கெட்ட எண்ணத்தோடு வருபவர்களுக்கு தரவேண்டும். கருப்பட்டி டீ, பிளாக் டீ என்று சொல்லி கொடுத்து விடுங்கள். இதன் ருசி நன்றாக இருக்கும். உடலுக்கும் நன்மை தரக்கூடியதுதான். (சீரகத் தண்ணீரில் வெல்லம் சேர்த்து கலந்து, வடிகட்டி குடிக்க வேண்டும்.)

jeeragam water 2

ஒரு டம்ளர் இந்த பானத்தை உங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கும் கொடுக்க வேண்டும். நீங்களும் அந்த தண்ணீரை 1 டம்ளர் பருகி விட வேண்டும். கட்டாயமாக எல்லோரது வீட்டிலும் ஒரு நபர் இருப்பார்கள். அந்த நபர் நம் வீட்டிற்கு வந்து சென்றாலே, தேவையற்ற பிரச்சனைகள் நம் வீட்டில் வரத் தொடங்கிவிடும். அப்படிப்பட்டவர்களுக்கு ஒருமுறை இந்த பானத்தை கொடுத்து விட்டாலெ போதும். அவருடைய வயிற்றெரிச்சல் நம்மை எதுவுமே செய்யாது.

- Advertisement -

சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருப்பார்களை பார்த்து, யாரேனும் ஒருவர் கண் திருஷ்டியை வைத்துவிட்டால் போதும். அவர்களுக்கு உடனடியாக காலில் அடிபட்டு விடும். அழகாக சிரித்துக் கொண்டே இருக்கும் குழந்தையை பார்த்து, ‘எவ்வளவு அழகாகச் இருக்கின்றது’ என்று கேட்பார்கள். அவ்வளவுதான் அன்றிலிருந்து அந்த குழந்தை அழுது கொண்டே இருக்கும்.

vellam

இதற்காக அடுத்தவர்கள் நன்றாக இருப்பதை பார்த்து, கண் திருஷ்டி வைப்பவர்கள் எல்லாம் கெட்டவர்கள் என்று சொல்லிவிட முடியாது. மனதிற்குள் இருக்கக்கூடிய அந்த ஏக்கம் என்பது வெளிப்படும்போது, எதிர்மறையாக மாறுமே தவிர, அவர்களும் நல்லவராக தான் இருப்பார்கள். நமக்கு கிடைக்காத ஒன்று மற்றவர்களுக்கு கிடைக்கும்போது அதன் மீது ஒரு ஏக்கம் அவ்வளவுதான்.

vellam

அந்த ஏக்கத்தின் வெளிப்பாடுதான் கண் திருஷ்டி. கண் திருஷ்டியை கண்டு பயப்படவும் வேண்டாம். அதேசமயம் அலட்சியமாக இருக்கவும் வேண்டாம். உங்களுக்கு கண் திருஷ்டி உள்ளது என்பதை நீங்கள் உணர்ந்தால், 1 டம்ளர் இந்த பானத்தை பருகுங்கள் போதும். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.