பெண் பிள்ளையை பெற்றால் 21 தலைமுறையினர் பலன் பெறுவர் தெரியுமா ?

kanyathanam

அன்னதானம், ஆடை தானம் என பல தானங்கள் இந்த உலகத்தில் உள்ளன. ஆனால் அக்கனியை சாட்சியாக வைத்து மந்திரங்கள் ஓத செய்யப்படும் ஒரு மிக சிறந்த தானமே கன்யா தானம்.

mangalyam

தந்தையும் தாயும் ஒரு பெண்ணை பெற்று பல வருடங்கள் இமை போல பாதுகாத்து மற்றொரு குடும்பத்தின் வளர்ச்சிக்காகவும், அந்தத் குடும்பம் தழைத்தோங்கவும் ஒரு ஆண் மகனிற்கு அப்பெண்ணை தானமாக கொடுக்கும் கன்னிகாதானத்திற்கு மிகப்பெரிய சிறப்பு உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கன்னிகாதானத்தின்போது பொதுவாக கீழே உள்ள மந்திரத்தை உச்சரிப்பதுண்டு.
மந்திரம்:
தசானாம்பூர்வேஷாம், தசானாம்பரேஷாம்,
மம ஆத்மனஸ்ச ஏகவிம்சதிகுல உத்தாரண…

என்று நீளும் அதன் மந்திரத்தின் பொருள் யாதெனில், “கின்யாதானம் செய்பவரின் முன்னாள் உள்ள பத்து தலைமுறையும், பின்னால் வரப்போகும் பத்து தலைமுறையும், கன்யாதானம் செய்பவராது தலைமுறையும் சேர்த்து மொத்தம் 21 தலைமுறையினர் உயர்வு பெறுவர்” என்பதே அந்த மந்திரத்தின் விளக்கம்.

Thirumanam

மற்றொரு குடும்பத்தின் வம்சத்தை தழைக்கச்செய்யும் இந்த கன்னிகாதானமே உலகின் மிக சிறந்த தனமாகவும் கருதப்படுகிறது. அதோடு இந்த தானம் மூலம் 21 தலைமுறையினர் உயர்வு பெறுவார்கள் என்றால் பெண் குழந்தையை பெறுபவர்கள் உண்மையில் எவ்வளவு புண்ணியத்தை செய்திருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

Thirumanam

இதையும் படிக்கலாமே:
இறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா ?

இது போன்ற மேலும் பல தகவல்கள், ஆன்மிக மற்றும் ஜோதிடம் சார்ந்த தகவல்களை ஒரே இடத்தில் பெற தெய்வீகம் மொபைல் APP ஐ டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்.