இறைவனை வீட்டில் வழிபடுபவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடுவது அவசியமா ?

Sivan God
- Advertisement -

பலரது மனத்திலும் இறைவனை எங்கு சென்று வழிபடுவது சிறந்தது என்ற ஒரு கேள்வி இருக்கும். நான் தினமும் வீட்டில் பூஜை செய்கிறேன் அப்படி இருக்க கோயிலிற்கு ஏன் செல்ல வேண்டும்? வீட்டிலேயே சிறந்த முறையில் வழிபடலாமே என்று சிலர் நினைப்பர். அதே போல நான் தினமும் கோயிலிற்கு செல்வதால் வீட்டு வழிபாட்டில் எதற்கு பெரிதாக அக்கறை செலுத்த வேண்டும் என்றும் சிலர் நினைப்பதுண்டு.

Sivan God

எங்கும் நிறைந்த இறைவனை உண்மையில் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். இறைவனை எங்கு வழிபடுவது சிறந்தது என்ற ஆராய்ச்சியை நாம் மேற்கொண்டோமானால், மனதில் இறைவனை நிலை நிறுத்தி வழிபடுவதே சிறந்தது என்ற முடிவை நமக்கு அந்த ஆய்வு உணர்த்தும். ஆனால் உண்மையில் அது தான் சிறந்த வழிபாடா என்றால் அதுவும் சந்தேகம் தான்.

- Advertisement -

எல்லாம் வல்ல இறைவனை நம் மனதில் நிலை நிறுத்தும் பக்குவத்தை நாம் பெற்றுவிட்டோம் என்பதையே தியான வழிபாடு நமக்கு உணர்த்துகிறது. அதுவும் வழிபாட்டில் ஒரு வகை தானே தவிர அப்படி தான் இறைவனை வழிபட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நமது முன்னோர்கள் இறைவனை வழிபட நமக்கு பல வழிமுறைகளை கற்பித்து சென்றுள்ளார் அதில் எதை வேண்டுமானாலும் நாம் கடைபிடிக்கலாம் அதில் தவறில்லை.

perumal

வீட்டில் இறைவனை வழிபட சரியான இடம் இல்லை, அதற்கான சூழல் இல்லை என்று நினைப்பவர்கள் கோயிலிற்கு சென்று வழிபடலாம். அந்த காலத்தில் கோவில் என்பது வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமே இல்லமால் கலை வளர்க்கும் இடமாகவும், கல்வி கற்கும் இடமாகவும், ஊரின் முக்கிய முடிவுகளை எடுக்கும் இடமாகவும் இருந்தது. தற்காலத்தில் தான் கோவில் வெறும் வழிபாட்டு தலமாக மட்டுமே மாறியுள்ளது.

- Advertisement -

murugan

இதையும் படிக்கலாமே:
கோவில் முன் தன் தலையை தானே அறுத்து பலிகொடுத்த தமிழன் – கல்வெட்டில் கிடைத்த ஆதாரம்

ஆகா, இறைவனை எங்கு வழிபட வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அங்கு தாராளமாக வழிபடலாம். அதில் எந்த தவறும் இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை நினைவில் கொண்டு நாம் அவனை எந்த இடத்தில் இருந்து வேடனுமானாலும் வழிபடலாம்.

- Advertisement -