கண் கலங்கும் கஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் கண் திருஷ்டியை ஒரு நொடிப் பொழுதில் கழிப்பது எப்படி?

neruppu1
- Advertisement -

வாழ்க்கை என்றாலே அதில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சில சமயம் வெற்றி இருக்கும். சில சமயம் தோல்வியும் வரும். சில சமயம் வருமானம் அதிகம் இருக்கும். சில சமயம் வருமானம் குறைவாக இருக்கும். வருமானம் அதிகமாக இருக்கும் போது, வந்த சந்தோஷத்தை விட, குறைவான வருமானம் கிடைக்கும் போது நிறைய சந்தோஷம் இருப்பதைக் கூட நாம் உணர்ந்திருப்போம். இப்படி ஏற்ற இறக்கங்கள் என்பது வாழ்க்கையில் எல்லோருக்கும் சகஜமாக இருப்பது தான். திகைக்க திகைக்க நமக்கு இன்பத்தை கொடுக்கும் ஆண்டவன், அதே அளவு துன்பத்தையும் கொடுக்காவிட்டால் இன்பத்தில் இருக்கக்கூடிய சந்தோஷம் என்ன என்பதை நம்மால் உணர முடியாது.

இதனால் தான் நம்முடைய வாழ்க்கையில் எப்போதுமே எல்லா விஷயங்களுமே இரண்டு வகையில் அமைகிறது. நிழலின் அருமை வெயிலுக்கு சென்றால்தான் தெரியும். ஆனால் சில பேருக்கு வாழ்க்கையில் சந்தோஷம் என்பது எட்டி கூட பார்க்காது. ஏதோ ஒரு சில காரணத்தினால் வாழ்க்கையில் பெரிய கஷ்டத்தை சுமந்து கொண்டு வாழ்ந்திருப்பார்கள். காரணம் அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்த போது அவர்களுக்கு பட்ட கண் அடி. (ஒரு காலத்தில் ஓஹோ என வாழ்ந்தவர்கள், ஒரு சில நாட்களுக்குப் பிறகு ஒன்றுமே இல்லாமல் வாழக்கூடிய சூழ்நிலை கூட வந்திருக்கும்.)

- Advertisement -

நன்றாக வாழ்ந்த சமயத்தில், ஆடம்பரமாக இருந்த சமயத்தில் ஊர் கண்ணே அவர்கள் மீது பட்டிருக்கும். கண் திருஷ்டியின் மூலம் அவர் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டிருப்பார். ஆனால் நமக்கு இவ்வளவு துன்பங்கள் வந்தது இந்த கண் திருஷ்டியால்தான் என்பது அவர்களுக்கே புரியாது. ஏனென்றால் சில பேருக்கு கண் திருஷ்டியின் மேல் நம்பிக்கை இல்லை. உங்களுடைய வாழ்க்கையிலும் நீங்கள் பெரும் கஷ்டத்தை அனுபவித்து வருகிறீர்களா. இருந்ததையும் இழந்து கஷ்டப்படுபவர்களுக்கு, ஒரு சுலபமான பரிகாரம் இந்த பதிவின் மூலம் சொல்லப்பட்டுள்ளது.

அம்மாவாசை, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்யலாம். மாதத்தில் ஏதாவது ஒரு நாள் செய்தால் போதும். மூன்று கண் உள்ள கொட்டாங்குச்சியை பரிகாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேங்காய் துருவி விட்டு கொட்டாங்குச்சி கிடைக்கும் அல்லவா. அது தான். அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து வாங்கி வைத்துக் கொண்டால் கூட சரி.

- Advertisement -

ஒரு சிறிய வெள்ளைத் துணியில் ஒரு கைப்பிடி கல் உப்பு, வரமிளகாய் 3, ஒரு கைப்பிடி வெண்கடுகு, கட்டி கற்பூரம், வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை அப்படியே உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களுடைய தலையை சுற்றி திருஷ்டி கழிக்க வேண்டும். உங்கள் வீட்டில் இருப்பவர்களை, கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து விட்டு, யாராவது ஒருவர் இந்த திருஷ்டியை கழிக்கலாம். வலது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். இடது பக்கம் மூன்று முறை சுற்ற வேண்டும். ஏற்ற இறக்கமாக மூன்று முறை சுற்ற வேண்டும். இப்படி சுற்றிய இந்த வெள்ளை முடிச்சை அப்படியே கொண்டு போய் நெருப்பில் போட வேண்டும்.

எடுத்து வைத்திருக்கும் கொட்டாங்குச்சியில் ஒரு கற்பூரத்தை வைத்து தீ மூட்டி விடுங்கள். அது நன்றாக பற்றி எரிந்து தீ பிடித்துக் கொள்ளும். அந்த நெருப்பில் கொண்டு போய் இந்த திருஷ்டி கழித்த பொருட்களை போட்டு எரிக்க வேண்டும். இதை நிலை வாசலுக்கு வெளியில் தான் வைத்து எரிக்க வேண்டும். இரவு 9 மணிக்கு மேல் இந்த பரிகாரத்தை செய்வது மிகவும் சிறப்பு‌. வாழ்நாளில் இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்துவிட்டால் போதாது.

மாதம் ஒரு நாள் கட்டாயமாக இந்த பரிகாரத்தை செய்து வர உங்கள் குடும்பத்தை பிடித்த கண் திருஷ்டி அனைத்தும் அந்த நெருப்பில் பொசுங்கிவிடும். இழந்த நல்ல வாழ்க்கை ஒரு சில நாட்களில் உங்களுக்கு மீண்டும் கிடைக்கும். தனக்குத்தானே திருஷ்டியை கழித்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் கூட, இந்த முடிச்சை தனக்குத்தானே சுற்றி நெருப்பில் போட்டுக் கொள்ளலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவில் நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -