காப்பு / கருப்பு கயிறை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவது அவசியம் தெரியுமா ?

kapu-kayiru
- Advertisement -

இந்துக்கள் பலர் விஷேஷம் நிறைந்த கோவில்களுக்கு செல்கையில் அங்கு கருப்பு நிறத்திலோ, சிகப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ நிறைய கயிறு வாங்கி வந்து குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை கட்டிவிடுவது வழக்கம். அப்படி கட்டப்படும் கயிருக்க எத்தனை நாட்கள் சக்தி இருக்கும், அதன் மகிமை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

kaapu kayiru

பொதுவாக நாம் கையில் கட்டிக்கொள்ளும் காப்பு கயிருக்கு பின்பு ஒரு அறிவியல் ஒளிந்துள்ளது. பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் காப்பு கயிறாக திரித்த உடன் அது மந்திர அலைகளை ஈர்க்கும் சக்தி பெறுகிறது. ஆகையால் நாம் தினம் தோறும் உச்சரிக்கும் மந்திர அலைகளில் இருந்து எழும் நேர்மறை ஆற்றல், கோவில்களுக்கு செல்கையில் அங்கு உச்சரிக்கப்படும் மந்திர அலைகளில் இருந்து எழும் நேர்மறை ஆற்றல் போற்றவற்றை இந்த கயிறானது தன் வசம் ஈர்த்து அதை நம் உடல் முழுக்க பரவ செய்து ஒரு கவசம் போல நம்மை காக்கிறது. அதனாலேயே இதை நாம் காப்பு கயிறு என்று அழைக்கிறோம்.

- Advertisement -

ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் கட்டகூடிய இந்த காப்பு கயிருக்கு அதிகபட்சம் 48 நாட்கள் மட்டுமே முழு சக்தி உண்டு. அதன் பிறகு அதன் சக்தி படிப்படியாக குறைந்து கொண்டு போகும். ஆகையில் 48 நாட்களுக்கு ஒரு முறை நாம் கையில் அணிந்திருக்கும் காப்பு கயிறை மாற்றுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
முருகனின் 125 தமிழ் பெயர்கள்

நவகாரங்களின் கதிர் வீச்சை ஈர்க்கவல்ல இந்த காப்புக்கயிறை 48 நாட்களும் ஒருமுறை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருவதால் நவகிரக பாதிப்பில் இருந்து ஓர் அளவிற்கு தப்பிக்கலாம். நமது கையில் இருந்து கழற்றப்படும் பழைய கயிற்றினை குப்பையில் போடாமல் ஆற்றிலோ அல்லது சமுத்திரத்திலோ போடுவதே சிறந்த முறை. நாம் கையில் கட்டுவது முன்பு அந்த கயிறை எப்படி மதித்தோமோ அதே போல நாம் அதை கழற்றும்போதும் மதிப்பது மிக மிக அவசியம்.

- Advertisement -