- Advertisement -
Homeசமையல் குறிப்புகள்5 நிமிசத்துல ரோட்டு கடை அவிச்ச கார சட்னியை ரொம்ப சிம்பிளா வீட்ல இப்படி அரைச்சு...

5 நிமிசத்துல ரோட்டு கடை அவிச்ச கார சட்னியை ரொம்ப சிம்பிளா வீட்ல இப்படி அரைச்சு பாருங்க. இட்லி கல் தோசை எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணுங்க.

- Advertisement -

ரோட்டு கடைகளில் உணவு வாங்கி சாப்பிடாதவர்களே இல்லை என்ன தான் நட்சத்திர ஓட்டலில் வாங்கி சாப்பிட்டாலுமே கூட இந்த ரோட்டு கடைகளில் கிடைக்கும் சாம்பார் சட்னி குருமா போன்றவற்றின் சுவைக்கு ஈடாகாது. ஏனெனில் பெரிய பெரிய கடைகளில் சுவைக்காக அதிகமான பொருட்களை சேர்த்து செய்வார்கள். ஆனால் ரோட்டு கடைகளை பொறுத்த வரைக்கும் சுலபமான முறையில் அதே நேரத்தில் அதிக ருசியுடன் செய்வார்கள்.

அந்த வகையில் இப்போது இந்த சமையல் குறிப்பு பதிவிலும் ரோட்டு கடைகளில் கிடைக்க கூடிய மிகவும் சுவையான அவிச்ச கார சட்னியை எப்படி செய்வது என்று தான் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

இந்த சட்னியை செய்ய முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் சூடானவுடன் மூன்று பெரிய பழுத்த தக்காளியும் ஐந்து காய்ந்த மிளகாயும் சேர்த்து இரண்டு நிமிடம் வரை வேக விட்டு எடுத்து தட்டில் வைத்து ஆற விடுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் ஆற வைத்த தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்த பிறகு ஐந்து பல் பூண்டு தோல் உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு சிறிய அளவு புளியும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் சேர்க்கும் தக்காளியின் புளிப்பு சுவை அதிகமாக இருக்கும் எனில் இதில் புளி சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள். இவையெல்லாம் சேர்த்த பிறகு இதை பையன் பேஸ்ட் ஆக அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், ஒரு ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து பொரிந்த பிறகு ஒரு கொத்து கருவேப்பிலை ஒரு காய்ந்த மிளகாயை கிள்ளி சேர்த்த பிறகு அரைத்து வைத்த இந்த தக்காளி விழுதை அதில் சேர்த்து கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் உப்பு சேர்த்து லேசாக கொதிக்க விட்டு இறக்கி விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: குட்டீஸ்களுக்கு பிடித்த ஆரோக்கியமான இனிப்பு போண்டா எளிதாக வீட்டில் தயாரிப்பது எப்படி? இப்படி செஞ்சு கொடுங்க ஒரு போண்டா கூட மீதம் ஆகாது!

சுடச்சுட இட்லி, கல் தோசை இவற்றுடன் எல்லாம் இந்த சட்னியை வைத்து சாப்பிட்டு பாருங்க ரொம்பவே பிரமாதமா சூப்பரா இருக்கும். ஒரு முறை இந்த மாதிரி சட்னியை அரைச்சு சாப்பிட்டீங்கன்னா திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவீங்க. அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் பிரமாதமா இருக்கும்.

சற்று முன்