நாளை(14/3/2021) ‘காரடையான் நோன்பு’ முறையாக விரதம் இருப்பது எப்படி? என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

mangalyam-karadaiyan
- Advertisement -

சாவித்திரி விரதம் என்று அழைக்கப்படும் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் தங்களுடைய கணவன்மார்கள் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், ஆரோக்கியத்துடன் இருக்கவும் வேண்டி வழிபடுவது ஆகும். இதனை கௌரி விரதம், காமாட்சி நோன்பு என்றும் கூறுவது உண்டு. மாங்கல்ய பலம் நீடிக்க வழிபடும் விரதங்களில் முதன்மையான விரதம் இந்த சாவித்திரி விரதமாகும். இந்த விரதத்தை முறையாக எப்படி மேற்கொள்வது? காரடையான் நோன்பு என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sathyavan-savithiri

ஆயுள் குறைந்த சத்தியவானுக்கு மனைவியாக இருந்தவள் சாவித்திரி. தன் தவ வலிமையால் தன் கணவனை எப்படி மீட்டெடுத்தார் என்பதற்கு புராண வரலாறு உண்டு. இந்த வரலாற்றின் அடிப்படையில் தான் இந்நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. கணவனை மட்டுமே நினைத்துக் கொண்டு பத்தினியாக வாழும் மனைவிகளுக்கு எமனும் மனமிரங்கி அருள் புரிவார் என்று இக்கதை உலகிற்கு தெரியப்படுத்தியது. காரடையான் நோன்பு அன்று சத்தியவான் சாவித்திரி சரிதம் படிப்பவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.

- Advertisement -

தன் கணவன் உயிரை திருப்பி கொடுத்த எமனுக்கு சாவித்திரி தன் பக்தியை நிரூபிக்க உருகாத எண்ணெய் அதாவது வெண்ணெய் கொண்டு செய்யப்பட்ட கார அடையை செய்து காணிக்கையாக படைத்தாள் என்று கூறப்படுகிறது. அந்த வனாந்தரத்தில் கிடைத்த பழங்களையும், துவரை, காராமணி போன்றவற்றையும் வைத்து அடை செய்து வழிபட்டார். இதனை கொண்டாடும் விதமாக காரடையான் நோன்பு என்ற பெயரும் ஏற்பட்டது. இந்நாளில் கார அடை செய்து நைவேத்தியம் படைப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

yeman

மேலும் காரடையான் என்கிற பெயர் வருவதற்கு இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. கார் என்றால் கருமை என்ற பொருள் உண்டு. அடையான் என்றால் அடைந்தவன் ஆவான். கருமையான இருள் சூழ்ந்த யம லோகத்தை அடையாதவன் என்கிற காரணத்தாலும் காரடையான் நோன்பு என்கிற பெயர் ஏற்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு நீண்ட ஆயுள் கொண்ட மனதிற்கு பிடித்த நல்ல கணவர்கள் அமையவும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

- Advertisement -

காரடையான் நோன்பு அனுஷ்டிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து மஞ்சள் மற்றும் வேப்பிலை கலந்த புனித தண்ணீரில் நீராடி விட்டு, வாசலில் காவிக் கொண்டு கோலம் இட வேண்டும். பூஜை அறையிலும் மாக்கோலமிட்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். நிலை வாசலில் மாவிலை தோரணம் காட்டிக் கொள்ள வேண்டும். அன்னை பராசக்தியை நினைத்து இந்த நோன்பை அனுஷ்டிப்பது வழக்கம். நாளை(14/3/2021) பிற்பகல் 3.45 மணியிலிருந்து 4.14 மணிக்குள் தாலி சரடை புதிதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

mangalyam1

மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் துவங்குவதால் விசேஷமான பலன்கள் உண்டு. கணவனின் கையால் புதிய சரடை மாற்றிக் கொள்வதும், பின் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்குவதும் முறையாகும். தங்கத்தால் தாலி சரடு அணிபவர்கள் அதில் சிறிது மஞ்சள் கயிற்றையும் கோர்த்து அணிந்து கொள்வது கணவனின் ஆயுள் நீடிக்க செய்யும். வசதி இருப்பவர்கள் தங்கத்தால் தாலிக்கு செய்து சரடு கொண்டாலும் அதில் சிறிதாவது மஞ்சள் கயிறு அணிந்து கொள்வது தான் மிகவும் நல்லது. அதற்கு தினமும் மஞ்சள் தடவி வரும் பொழுது அதற்குரிய சக்திகளும், பலன்களும் அளப்பரியது.

mangalyam1

‘மாசி சரடு பாசி படியும்’ என்பார்கள். மாசி மாதத்தில் அணியும் உங்களுடைய மாங்கல்ய சரடு பாசி படியும் வரை அதாவது எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அப்படியே இருந்து தீர்க்க சுமங்கலி வரம் அருளும் என்பது கூற்றாகும். எனவே இந்நாளில் உமையவளுக்கு விரதமிருந்து, கார அடை படைத்து பெண்கள் தங்களுடைய கணவன்மார்களுக்கு நீண்ட ஆயுள் வேண்டி விரதம் இருந்தால் எண்ணிய எண்ணம் எல்லாம் பலிக்கும்.

- Advertisement -