காரடையான் நோன்பு அன்று வாங்க வேண்டிய பொருட்கள்

poojai1
- Advertisement -

சத்தியவான் சாவித்திரி கதையைப் பற்றி நாம் எல்லோருக்கும் தெரியும். தன்னுடைய கணவரின் உயிரை மீட்டெடுப்பதற்காக எமதர்மனிடம் போராடிய பத்தினி தேவியாக இவளை நாம் வழிபாடு செய்கின்றோம். விதியின் பயனால் சத்தியவான் தன்னுடைய உயிரை விட வேண்டிய சூழ்நிலை. எமதர்மன் வந்து பாசக்கயிரை வீசி சத்தியவானை எமலோகத்துக்கு அழைத்துச் செல்கின்றார்.

ஆனால் சாவித்திரி தேவி எமனின் பின்னாலேயே சென்று, போராடி தன்னுடைய கணவர் சத்தியவானை திரும்பவும் மீட்டெடுத்தாள். சாவித்திரி ஒரு சிவபக்தை. சிவனை வழிபாடு செய்ததால் தான் எமனோடு போராடக்கூடிய அளவுக்கு சக்தி சாவித்திரிக்கு இருந்தது. தன்னுடைய கணவனை உயிரோடு மீட்டு தந்ததற்காக சாவித்திரி, சிவபெருமானை நினைத்து பூஜித்த நாளை தான் காரடையான் நோன்பாக நாம் கொண்டாடி வருகின்றோம்.

- Advertisement -

இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் சிவபெருமானையும் பார்வதி தேவியையும் நினைத்து வீட்டில் வழிபாடு செய்து மஞ்சள் சரடை கழுத்தில் கட்டிக் கொண்டால் கணவனுக்கு ஆயுள் கூடும் என்ற நம்பிக்கை நம்மிடத்தில் இருந்து வருகிறது. 14.3.2024 ஆம் தேதி மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் தொடங்கக்கூடிய இந்த நாளில் காரடையான் நோன்பு கொண்டாடப்பட இருக்கின்றது. அது மட்டும் நாளைய தினம் சிறப்பு அல்ல.

நாளைய தினம் சதுர்த்தி திதி, பஞ்சமி திதி, சஷ்டி திதி, மூன்று திதிகளும் சேர்ந்து வந்திருப்பதால் இந்த நாள் ரொம்ப ரொம்பவும் சிறப்பு வாய்ந்த நாளாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் செய்ய வேண்டிய எளிமையான ஒரு வழிபாட்டு முறையைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

காரடையான் நோன்பு வழிபாடு செய்யும் முறை

இந்த காடையான் நோன்பை திருமணமான சுமங்கலி பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணமாகாத கன்னிப்பெண்களும் மேற்கொள்ளலாம். திருமணம் ஆன பெண்களுக்கு சுமங்கலி வரம் கிடைக்கவும், திருமணம் ஆகாத பெண்களுக்கு எதிர்காலத்தில் நல்ல கணவன் அமையவும், இந்த விரோதத்தை மேற்கொள்ளலாம்.

நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே பெண்கள் சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த விரதத்தை தொடங்குங்கள். குறிப்பாக பெண்கள் இந்த விரதத்தை எதுவும் சாப்பிடாமல் இருந்து மேற்கொள்வது தான் முறை. ஆனால் இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் கருதி, உங்கள் உடல் சூழ்நிலையை பொறுத்து, விரதத்தை மேற்கொள்ளுங்கள். சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை.

- Advertisement -

நாளைய தினம் நல்ல நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, வெற்றிலை பாக்கு பூ பழம் வைத்து, காராமணியால் செய்யப்பட்ட கார அடை, இனிப்பு அடை, வெண்ணெயை இறைவனுக்கு நிவேதியம் வைத்து, மஞ்சள் சரடை வைத்து சிவபெருமானையும் பார்வதி தேவையும் மனதார நினைத்து வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

சாவித்திரி தேவி சிவபெருமானை வழிபாடு செய்யும்போது இந்த பொருட்களை தான் நெய்வேதியமாக வைத்து வழிபட்டால் என்பது புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. வழிபாட்டை முடித்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் அந்த சரடை கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காரடையான் நோன்பு அன்று வாங்க வேண்டிய மங்களப் பொருட்கள்

இதோடு சேர்த்து நாளைய தினம் சுமங்கலிப் பெண்களின் கையால் விரலி மஞ்சள், குங்குமம், ஒரு குங்குமச்சிமிழ் இந்த மூன்று பொருட்களையும் வாங்கி பூஜையறையில் வைத்து வழிபாடு செய்து, இந்த பொருட்களை தினமும் பயன்படுத்தி வரும்போது கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: காரடையான் நோன்பின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

குடும்பத்தில் மங்கலம் உருவாகும் என்றதொரு நம்பிக்கையும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. வாங்கிய குங்குமச்சிமிழில் குங்குமத்தை போட்டு பூஜை அறையில் அம்பாளுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் பிறகு அந்த குங்குமத்தை தினமும் உங்கள் கணவரின் நன்மைக்காக நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள் நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -