காரடையான் நோன்பின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

amman thali
- Advertisement -

நாளைய தினம் வியாழக்கிழமை பங்குனி மாதத்தின் முதல் நாள். இந்நாளில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. கணவனின் உயிரை மீட்டுக் கொண்டு வந்த சாவித்திரி தேவி வழிபட்ட விரதமான இந்த கௌரி நோன்பை தான் காரடையான் நோன்பாக கொண்டாடுகிறோம். இப்படியான இந்த நாளில் அம்பிகையை நினைத்து நாம் வழிபாடு செய்ய வேண்டும்.

இதன் மூலம் கணவரின் ஆயுள் அதிகரித்து கணவன் மனைவி அந்தோனியமாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி திருமணமாகாதவர்களுக்கும் திருமண யோகம் கைகூடவும் இந்த வழிபாடு முறை அமையும் என்று சொல்லப்படுகிறது. அந்த வழிபாட்டிற்கென சில வழிமுறைகளும் கால நேரமும் உண்டு.

- Advertisement -

அதை பற்றியும் அந்த வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய மந்திரம் நெய்வேத்தியம் பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் எளிமையாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.

காரடையான் நோன்பின் போது சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த விரத வழிபாட்டை நாளை காலை 6: 30 மணிக்கு மேல் துவங்கி மதியம் 12:30 மணிக்குள் செய்துவிட வேண்டும். இன்றைய தினத்தில் பலரும் உண்ணாமல் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள் அப்படியானவர்கள் செய்யலாம் விரதம் இருந்து வழிபாடு செய்ய முடியாதவர்கள் எளிமையாகவும் இந்த இந்த வழிபாட்டை செய்யலாம்.

- Advertisement -

இந்த வழிபாட்டிற்கு உங்கள் வீட்டில் இருக்கும் அம்பிகை படத்தை மலர்கள் சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு முக்கிய நெய்வேத்தியமான கார அடை, வெல்ல அடை செய்து வைக்க வேண்டும். இந்த நோன்பின் பெயரே காரடையான் நோன்பு தான். ஆகையால் இந்த நெய்வேதியம் தான் மிகவும் முக்கியம். அதற்கு அடுத்து உருகாத வெண்ணெய் வைக்க வேண்டும்.

இன்றைய தினத்தில் பெண்கள் புதிதாக தாலி சரடு மாற்றுவார்கள் அப்படியானவர்கள் அந்த சரடை வையுங்கள். சிலர் நோன்பு கயிறு கட்டுவார்கள். அதற்கு ஒரு வெள்ளை நிற நூலில் மஞ்சள் தடவி பூ வைத்து கட்டி நோன்பு கயிறாக கட்டுவார்கள். அது உங்கள் பழக்கத்தை பொறுத்து. இந்த நெய்வேத்தியத்தையும் கயிறையும் வைத்து படைக்கும் நேரம் நாளை மதியம் 11:00 மணியிலிருந்து
12:30 மணிக்குள்ளாக செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த வழிபாடு செய்யும் நேரத்தில் அம்பிகையை மனதார நினைத்து ஒரு நெய் தீபத்தை முதலில் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு நெய்வேத்தியங்களை படைத்து வெற்றிலை பாக்கு பழம் ஊதுபத்தி போன்றவற்றையெல்லாம் வைத்து வணங்க வேண்டும். அந்த நேரத்தில் அம்பிகையை இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்.

உருகாத வெண்ணெய்யும்,
ஓரடையும் நான் செய்தேன்,
ஒருகாலும் என் கணவர்
என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும்….
என்ற மந்திரத்தை சொல்லி அன்னையை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு கயிறு மாற்றுபவர்கள் மாட்டிக்கொள்ள நோன்பு கயிறு கட்டுபவர்கள் கட்டிக் கொள்ளலாம் இதை கணவர் கையால் கட்டுவது சிறப்பு.

இதையும் படிக்கலாமே: பணத்தடை நீங்க புத பகவான் பரிகாரம்

வேலைக்கு செல்பவர்கள் மதியத்தில் இந்த பூஜை செய்ய முடியாது என்பவர்கள் காலை ஏழு முப்பது மணிக்கு மேல் பூஜையை முடித்த பிறகு செல்லலாம். வாய்ப்பு இருந்தால் கயிறை மட்டும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மாற்றுங்கள் இல்லை என்றால் காலையிலே மாற்றிக் கொள்ளலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -