புராணங்களில் சொல்லப்படும் சத்தியவான் சாவித்திரி கதை நாம் எல்லோருக்கும் தெரியும். சத்தியவானின் மனைவி சாவித்திரி. மீனாட்சி சுந்தரேஸ்வரர், லட்சுமி குபேரர், லட்சுமி நாராயணர், என்று பெண் தெய்வத்தின் பெயர் தான் முதலில் வரும். ஆனால் சத்தியவான் சாவித்திரி, இவர்களுடைய பெயரில் கணவருடைய பெயர் தான் முதலில் வரும்.
தன் கணவர் உயிரை எமன் பறித்துக் கொண்டு சென்ற போது, எமன் பின்னாலேயே சென்று போராடி தன்னுடைய கணவரின் உயிரை மீட்டுக் கொண்டு வந்த சாவித்திரி மேற்கொண்ட விரதம் தான் இந்த காரடையான் நோன்பு விரதம். இந்த விரதத்தை நாம் மேற்கொள்ளும் போது நம்முடைய கணவரின் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை. அந்த வகையில் (14-03-2025) பெரும்பாலானோர் வீட்டில் இன்று காலை நேரத்திலேயே இந்த காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொண்டிருப்பீர்கள்.
நீங்கள் இந்த காரடையான் நோன்பு விரதத்தை மேற்கொண்டாலும் சரி, அல்லது சூழ்நிலை காரணமாக நோன்பு எடுக்கவில்லை என்றாலும் சரி, சில வீட்டில் இந்த நோன்பு எடுக்கக் கூடிய வழக்கம் இருக்காது. அப்படி இருந்தாலும் சரி, சுமங்கலி பெண்களாக நீங்கள் இருந்தால் உங்களுடைய கணவரின் ஆயுள் நீடிக்கவும், கணவருடைய செல்வ செழிப்பு உயர்ந்து அவர் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தோடு வாழ வேண்டும் என்றும், அம்பாளை வேண்டிக் கொண்டு இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லி, ஒரு மஞ்சள் கயிறை உங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம்.
இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கூட அம்பிகை முன்பு பிரார்த்தனை செய்து இந்த மந்திரத்தை சொல்லி வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்களுக்கு திருமணம் ஆகவில்லையா. நல்ல கணவர் கிடைக்க வேண்டும் என்றும் சாவித்திரி தேவியை இன்று நீங்கள் வழிபாடு செய்யலாம்.
சத்தியமாமன் சாமி தெரியும் மிகவும் செல்வ செழிப்போடு வளர்ந்தவர்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு, விதியின் பயனால், சத்தியவான் சாவித்திரியும் காட்டில் தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், சாவித்திரி எமனிடமிருந்து தன் கணவர் உயிரை மீட்டு வந்த பிறகு, சத்தியவான், மீண்டும் உயிர் பெற்ற பிறகு, சாவித்திரி இந்த நோன்பை எடுத்து இறைவனுக்கு நன்றி தெரிவித்த பிறகு, இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையை ராஜபோகத்தோடு வாழ துவங்கினர்.
சாவித்திரி இந்த விரதத்தை மேற்கொண்ட பிறகு தான், இழந்த நாடு இழந்த செல்வம் இழந்த பட்டம் பதவி பொன் பொருள் எல்லாம் இவர்களுக்கு திருப்பி கிடைத்தது. ஆகவே இந்த விரதம் இருந்தால் கணவர் ஆயுள் அதிகரிப்பதோடு சேர்த்து, கணவருடைய செல்வ செழிப்பும் உயரும். கணவருடைய முன்னேற்றத்திற்கும் இந்த விரதம் கைகொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சரி இன்று மாலை பூஜை அறையில் விளக்கு ஏற்றி வையுங்கள். அம்பிகைக்கு முன்பாக ஒரு மஞ்சள் சரடு வைத்துவிடுங்கள். வெள்ளை நூலில் மஞ்சள் தடவி அதில் ஒரு பூவை கட்டி அம்பாள் பாதத்தில் வைத்து விடுங்கள்.
காரடையான் நோன்பு மந்திரம்.
உருகாத வெண்ணெயும், ஓரடையும் நான் தருவேன்; ஒருக்காலும் என் கணவர் என்னைப் பிரியாதிருக்க வேண்டும்.
என்று இந்த நான்கு வரி மந்திரத்தை ஒரே ஒருமுறை சொல்லிவிட்டு, அந்த சரடை எடுத்து நீங்கள் கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். உங்களுடைய கணவர் இருந்தால் உங்கள் கணவரின் கையால் அந்த சரடை எடுத்து உங்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. உங்களுடைய வேண்டுதலை மன நிறைவோடு அம்பாளிடம் சொல்லுங்கள்.
சில பேர் வீடுகளில் கணவனும் மனைவியும் நீண்ட நாள் பிரிந்து இருப்பார்கள். சில பேர் வீடுகளில் சண்டை போட்டு இந்த பிரிவு உண்டாகி இருக்கும். சில பேர் வீடுகளில் சூழ்நிலை காரணமாக கணவர் வெளிநாட்டில் இருக்க வேண்டிய நிலைமை. மனைவி வெளியூரில் இருக்க வேண்டிய சூழ்நிலை என்று பிரிந்து இருப்பார்கள்.
இதையும் படிக்கலாமே: மார்ச் மாத சோடசக் கலை நேரம்
அப்படிப்பட்டவர்களும் இன்று மனம் உருகி சாவித்திரி தேவியை, அம்பாளை வேண்டி வணங்கினாலே போதும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர நல்ல வாய்ப்புகளை, அந்த அம்பாள் உண்டாக்கி கொடுப்பாள். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இன்றைய தினம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை உங்கள் வீட்டு பூஜை அறையில் மேற்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.