அம்மை என்று சிவனால் அழைக்கப்பட்ட தமிழ் பெண் பற்றி தெரியுமா ?

Sivan and Karaikal ammayar

மிகப்பெரும் இந்த உலகத்தில் எண்ணற்ற வகையிலான தாவரங்கள் இருக்கின்றன. அதில் பெரும்பாலானவை மனிதர்கள் மற்றும் பிற உயிர்கள் உண்ணுவதற்கு ஏற்ற வகையிலான காய்கள் மற்றும் பழங்களை கொடுக்கின்றன. அந்த வகையில் இந்திய நாட்டின் பூர்வீகம் கொண்ட மாமரத்தின் “மாம்பழம்” மிகவும் சுவையுடைய ஒரு பழமாகும். எனவே தான் பண்டைய தமிழர்கள் முக்கனிகளில் மாம்பழத்திற்கும் ஒரு முக்கிய இடம் தந்தனர். இந்த மாம்பழம் தெய்வீகத்தன்மை கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையையே மாற்றியமைத்த நிகழ்வைப் பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Mango“காரைக்காலில்” “புனிதவதி” என்ற தெய்வப் பெண்மணி அவரது கணவன் பரமதத்தனுடன் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் பரமதத்தன் தனக்கு கிடைத்த சுவை மிகுந்த இரண்டு மாம்பழங்களை புனிதவதியிடம் தந்து, அதை தான் மதிய உணவிற்கு பின் உண்ணப்போவதாக கூறி வெளியே சென்றார். அவர் சென்ற பின் சிவ பெருமானே ஒரு யாசகர் வடிவில் புனிதவாதியிடம் உணவு கேட்டு வந்தார். அப்போது தனது கணவர் தந்த இரண்டு மாம்பழங்களில் ஒன்றை அவருக்கு கொடுத்து விட்டார் புனிதவதி.

இப்போது மதிய உணவிற்கு வீட்டிற்கு திரும்பிய கணவர் பரமதத்தன், உணவு உண்ட பின்பு அவர் தந்த மாம்பழத்தில் ஒன்றை உண்ண தருமாறு புனிதவதியிடம் கேட்டு, பெற்று உண்ட பின் மற்றொரு மாம்பழத்தையும் கேட்டார். இப்போது அந்த இரண்டாவது மாம்பழத்தை தான் ஒரு யாசகருக்கு தந்து விட்டதை தனது கணவரிடம் கூறத் தயங்கி, தனியாகச் சென்று சிவபெருமானிடம் வேண்ட, அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. அதைக்கொண்டு வந்து பரமதத்தன் உண்ணக்கொடுத்தார் புனிதவதி.

Karaikal ammaiyar
Karaikal ammaiyar

அதை சாப்பிட்ட பரமதத்தன் இந்தப்பழத்தின் சுவை தனித்தன்மையாக இருப்பதற்கான காரணத்தைக் கேட்டான். அப்போது நடந்த விஷயங்கள் அனைத்தையும் தனது கணவரிடம் கூறிய புனிதவதி, இறைவனிடம் வேண்டி தனது கையில் மற்றொரு மாம்பழத்தை தோன்றச் செய்தார். இதைக்கண்டு அதிசயித்த பரமதத்தன், புனிதவதி போன்ற ஒரு பெண்ணுக்கு தான் கணவனாக இருப்பது முறையாகாது என்று எண்ணி, அவரிடமிருந்து பிரிந்து வேறு ஒரு ஊர்சென்று அங்கேயே ஒரு பெண்ணை திருமணம் செய்து, ஒரு பெண் குழந்தையைப் பெற்று அக்குழந்தைக்கு புனிதவதி என்று பெயர்சூட்டி வாழலானான்.

Karaikal ammayar
Karaikal ammayar

இதைகேள்விப்பட்டு வாழ்க்கையில் விரக்தியடைந்த புனிதவதி, தனக்கிருந்த இளமை தோற்றத்தை போக்கி தனக்கு “பேய்” உருவைத் தருமாறு சிவனிடம் வேண்டிப்பெற்றாள். பிறகு அந்த சிவபெருமானை தரிசிக்க “கயிலாயம்” சென்றபோது அந்த மலையில் தனது கால்படுவதைப் பாவமென்று கருதி, தனது தலையால் அந்த மலையில் ஏறிய புனிதவதியின் பக்தியில் மனம் குளிர்ந்த சிவபெருமான், அவளை “அம்மை” என்றழைத்தார்.

Sivan

புனிதவதி காரைக்காலில் வாழ்ந்ததாலும், சிவபெருமான் அவரை அம்மை என்றழைத்ததாலும் அன்று முதல் “காரைக்கால் அம்மையார்” என்றழைக்கப்பட்டு “63 நாயன்மார்களில்” ஒரே பெண் நாயன்மாராக இடம்பெற்றிருக்கிறார். அவரை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் காரைக்காலில் “மாங்கனி திருவிழா” கொண்டாடப்படுகிறது அன்று அந்த காரைக்கால் அம்மையாரை அனைவரும் வணங்கி அவரின் அருளை பெறுகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
தாய்லாந்தில் கால் பதித்த சோழர்கள் பற்றி தெரியுமா ?

English Overview:
Here we have described Karaikal ammaiyar history. i.e karaikal ammaiyar varalaru in Tamil shortly and also we said about why we are celebrating Mangani thiruvizha.