வெள்ளை காராமணி சேர்த்த, புரத சத்து அதிகமாக உள்ள சுவையான தோசை! கஷ்டப்பட்டெல்லாம் மாவு அரைக்க வேண்டாம்.

karamani-dosai1

தோசை என்றாலே அதற்கு அரிசி ஊற வைத்து, மாவு அரைத்து தான் செய்யவேண்டும். ஆனால் இந்த தோசைக்கு அப்படி எந்த அவசியமும் இல்லை. உடலுக்கு மிகவும் சத்து தரக்கூடிய தானியத்தை வைத்து, புதுவிதமான சுவையான தோசை ஒன்றை இப்போது எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது என்று சொல்லுவதை விட உடலுக்கு மிக மிக ஆரோக்கியமானது.

white-karamani

வெள்ளை காராமணி தோசை செய்ய தேவையான பொருட்கள்:
வெள்ளை காராமணி – 1 கப்
வடித்த சாதம் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2, இஞ்சி – சிறிதளவு தோல் சீவியது, சோம்பு – 1 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 6, தயிர் – 2 டேபிள் ஸ்பூன், மல்லித்தழை – சிறிதளவு பொடியாக நறுக்கியது. தேவையான அளவு உப்பு.

நீங்கள் எதில் காராமணியை அளந்து எடுக்கிறீர்களா, அதே அளவில் பாதி அளவு, வேக வைத்த சாதத்தையும் எடுத்துக் கொள்ளுங்கள். 150 கிராம் காராமணியை எடுத்துக் கொண்டால் மேல் குறிப்பிட்டுள்ள அளவுகள் சரியாக இருக்கும். மறுநாள் காலை காராமணி தோசை செய்ய வேண்டும் என்றால், முதல் நாள் இரவே காராமணியை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரில் போட்டு ஊற வைத்து விட வேண்டும்.

karanamani-dosai

மறுநாள் காலை ஒரு மிக்ஸி ஜாரில், வேகவைத்த சாதம், பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, தயிர், சின்ன வெங்காயம், மல்லித்தழை இவைகளை முதலில் போட்டு, ஒரு ஓட்டு ஓட்டி விட்டு, அதன் பின்பாக ஊற வைத்திருக்கும் காராமணியை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதை மிக்ஸியில் இருந்து அகலமான பாத்திரத்தில் மாற்றி வைத்து, மாவு மிகவும் கெட்டியான பதத்தில் இருந்தால், கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைத்து தோசை கல்லில், தோசை போல் வார்த்து சாப்பிட வேண்டியது தான். இது மொறு மொறுவென்று இருக்காது.

karamani-dosai

மொறு மொறுவென்று தோசை வேண்டும் என்று நினைப்பவர்கள், சிறிதளவு அரிசி மாவை தண்ணீரில் கரைத்து, தோசை மாவில் சேர்த்தும், சுட்டு சாப்பிடலாம். இந்த தோசை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த தோசை செய்து தருவது புரதச் சத்தை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
உங்க வீட்ல பிரட் இருந்தா போதும். 5 நிமிஷத்துல இந்த பிரட் கட்லட் செஞ்சிடலாம்!

இது போன்ற மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Karamani dosai in Tamil. Karamani dos.a Karamani dosa recipe. Karamani dosai. How to cook karamani dosai.