அட! கரப்பான் பூச்சியை இவ்வளவு சிம்பிளா இதை வெச்சி விரட்டலாம்ன்னு இது வரைக்கும் தெரியாம போச்சே. இதுக்கு அப்புறம் ஒரு கரப்பான் பூச்சி கூட நீங்க இருக்க ஏரியா பக்கம் கூட வராது.

Cocaroch Cake
- Advertisement -

வீட்டை நாம் என்ன தான் சுத்தமாக பராமரித்து வைத்தாலும் கூட இந்த கரப்பான் பூச்சி எப்படியாவது வந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்து விடும். ஒரு முறை இவையெல்லாம் வீட்டிற்குள் வந்து விட்டால் இவற்றை விரட்டி அடிப்பது பெரும் சிரமமான காரியம் ஆகி விடும். நாம் மூடி வைத்து பரிமாறினாலும் கூட இது அனைத்து இடத்திலும் அமர்ந்து இருப்பதை பார்த்ததும் அருவருப்பாக இருக்கும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் இது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். இவ்வளவு பெரிய சிக்கலை கொடுக்கக் கூடிய கரப்பான் பூச்சியை மிகவும் எளிமையாக எப்படி விரட்டுவது பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

இந்த கரப்பான் பூச்சிகளை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முதலில் இரவு படுக்க செல்லும் முன்பு நம் வீட்டின் சமையலறையில் அழுக்கு பாத்திரங்கள், சமைத்த பொருட்களளைஅப்படியே வைக்காமல் சுத்தப்படுத்தி வைப்பது மிகவும் முக்கியம். அது மட்டும் இன்றி குடிக்கும் தண்ணீரிலிருந்து சமைக்கும் பொருள் வரை அனைத்தையும் மூடி வைத்து பயன்படுத்துவது இவையெல்லாம் கரப்பான்பூச்சி தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்ள சிறந்த வழி.

- Advertisement -

கரப்பான் பூச்சி தொல்லையிலிருந்து தப்பிக்க:
இதற்கு முதல் வழிமுறையாக இதை கடைபிடிக்கலாம். தினமும் இரவில் நீங்கள் சமையல் அறையில் மேடை ஸ்டவ் போன்றவற்றை சுத்தம் செய்யும் போது அந்த தண்ணீரில் துணி துவைக்கும் பவுடரை மட்டும் நன்றாக கலந்த பிறகு ஒரு துணி வைத்து நனைத்து எடுத்து அதை வைத்து அப்படியே துடைத்து விடுங்கள். அதன் பிறகு வேறு தண்ணீர் ஊற்றி துடைக்க கூடாது. சோப்பு தண்ணீரை ஊற்றி துடைத்தால் போதும். இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி வராது.

அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் கால் டீஸ்பூன் ஷாம்பு இதற்கு நீங்கள் பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் பரவாயில்லை. இத்துடன் நாலு ஸ்பூன் தண்ணீர், இரண்டு ஸ்பூன் வினிகர் இவை அனைத்தையும் நன்றாக கலந்து ஒரு சின்ன ஸ்ப்ரே பாட்டில் ஊற்றி உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சி வரும் இடங்களில் எல்லாம் லேசாக ஸ்பேரே செய்து விட்டால் போதும். இந்த வாடைக்கு கரப்பான் பூச்சி வராது. ஒரு முறை வந்து இந்த வாடையை நுகர்ந்து விட்டால் மறுமுறை நீங்கள் இருக்கும் திசை பக்கம் கூட வராது.

- Advertisement -

இந்த முறை கரப்பான் பூச்சியை ஒழித்து கட்டு சிறந்த வழி தான். ஆனால் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இதை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதற்கு கப் கேக், பிரட், பன் போன்ற எதையாவது ஒன்றை எடுத்து நல்ல பவுடர் போல நுணுக்கி கொள்ளுங்கள். அதில் சிறிதளவு டிடர்ஜென்ட் பவுடரை கலந்து கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சின்ன சின்ன பால் போல செய்து கரப்பான் பூச்சி வரும் இடங்களில் எல்லாம் வைத்து விட்டால் போதும். இதை சாப்பிட்ட கரப்பான் பூச்சி வெளியில் சென்று இறந்து விடும்.

முடிந்த வரையில் கரப்பான் பூச்சி நம் வீட்டில் வராமல் இருப்பதற்கான குறிப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு வேளை அதிகப்படியான கரப்பான் பூச்சி இருக்கிறது வேறு வழி இல்லை எனும் பட்சத்தில் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால் இதை செய்தவுடன் நம் கைகளை சுத்தமாக கழுவி விட வேண்டும். அதே நேரத்தில் இது மீந்து விட்டால் வெளியில் போட்டு விடக் கூடாது. கொஞ்சம் கவனமாக கையாள வேண்டிய குறிப்பு.

இதையும் படிக்கலாமே: கற்பூரம் தானே என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். இந்த கற்பூரத்தை வைத்து என்னென்ன செய்யலாம் என்று தெரிந்தால் நீங்கள் வாயடைத்து போவீர்கள்.

கரப்பான் பூச்சியை ஒழித்துக்கட்ட மிகவும் சுலபமான வழிமுறைகளை இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த முறைகளை கவனமாக கையாண்டு கரப்பான் பூச்சி தொல்லை இல்லாமல் நிம்மதியாக இருங்கள்.

- Advertisement -