இந்தக் கருப்பு எண்ணெயை தலையில் தடவி வந்தால், தாத்தா பாட்டி ஆனாலும் தலைமுடி கருகருன்னு தான் இருக்கும். வெள்ளை முடி எட்டி கூட பார்க்காது.

- Advertisement -

தாத்தா பாட்டியான பிறகு கூட தலையில் இருக்கும் முடி கருப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பது கொஞ்சம் பேராசையான விஷயம் தான். இருப்பினும் ஓரளவுக்கு 40, 45 வயதை கடப்பதற்கு உள்ளாகவே சில பேருக்கு தலை முழுக்க நரைத்து போய் இருக்கும். சில பேருக்கு சிறுவயதிலேயே திருமணத்திற்கு முன்பாகவே இளநரை வந்துவிடும். இப்படிப்பட்ட இளநரை பிரச்சினையை தடுக்கவும், இளநரையை தள்ளிப் போடவும் ஒரு சூப்பரான எண்ணெயை நம் கையாலேயே வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த எண்ணெய்க்கு நாம் முக்கியமாக பயன்படுத்தப் போகும் பொருள் கார்போக அரிசி. நிறைய கடைகளில் இப்போது இந்த அரிசி கிடைக்கின்றது. இது கருப்பு நிறத்தில் இருக்கக்கூடிய ஒரு அரிசி. அந்த காலத்திலேயே நம்முடைய முன்னோர்கள் நரைமுடியை கருப்பாக மாற்றவும், முடியை அடர்த்தியாக வளர செய்யவும் இந்த கார்போக அரிசியை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரிசியில் முடி வளர்ச்சியை தூண்டக்கூடிய மினரல் சத்தும், மெலனின் சத்தும் நிறைந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இந்த எண்ணெயை தயார் செய்ய கார்போக அரிசி – 50 கிராம், கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு, நெல்லிமுள்ளி – 50 கிராம், தேங்காய் எண்ணெய் – 1/2 லிட்டர், மரச்செக்கு தேங்காய் எண்ணெயாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். நெல்லி முள்ளி மற்றும் கார்போக அரிசி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் சுலபமாக கிடைக்கும்.

கார்போக அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு லேசாக கொரகொரப்பாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு அகலமான இரும்பு கடாயில் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெயை ஊற்றி அடுப்பில் வைத்து விடுங்கள். இந்த எண்ணெயில் பொடித்து வைத்திருக்கும் கார்போக அரிசி, கருவேப்பிலை, நெல்லி முள்ளி இந்த மூன்று பொருட்களையும் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெயை 10 நிமிடம் போல சூடு செய்ய வேண்டும்.

- Advertisement -

நாம் சேர்த்து இருக்கக்கூடிய பொருட்களில் உள்ள சத்துக்கள் அனைத்தும் அந்த எண்ணெயில் இறங்க வேண்டும். எண்ணெயின் நிறம் மாறும். அப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான்.‌ இந்த எண்ணெயை இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள். பகலில் இந்த எண்ணெயை காய்ச்சினால் 8 மணி நேரம் இந்த எண்ணெய் அப்படியே கடாயில் இருக்கும் பொருட்களில் ஊரட்டும். அதன் பின்பு ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி எண்ணெயை மட்டும் தனியாக பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டால் மூன்று மாதம் வரை கெட்டுப் போகாது.

தினமும் தலைக்கு வைக்கும் தேங்காய் எண்ணெய் போலவே இதை தலையில் வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. ஆனால் வெளியே செல்ல வேண்டும் இவ்வளவு எண்ணெய் தலையில் பிசுபிசுப்பாக வைக்க முடியாது என்பவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை தலையில் வைத்து நன்றாக மசாஜ் செய்து அதன் பின்பு தலைக்கு குளிக்கலாம். முடிந்தால் இரவு முழுவதும் இந்த எண்ணெய் தலையில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். மறுநாள் காலை எழுந்து தலைக்கு குளிப்பது இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும்.

- Advertisement -