கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு கறிவறுவலை இப்படி செய்து பாருங்க, கறிக்கும் இதுக்கும் கொஞ்சம் கூட வித்தியாசமே தெரியாது. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

- Advertisement -

சேனைக்கிழங்கு வறுவலை பல வகையில் வீட்டில் செய்திருப்போம், ஆனாலும் இந்த கல்யாண வீட்டில் கொடுக்கும் சேனைக்கிழங்கு நல்ல ருசியுடன் , கலர்ஃபுல்லாக பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இப்போது அப்படி ஒரு சேனைக்கிழங்கு ரெசிபி தான் இந்த குறிப்பில் தெரிந்து கொள்ள போகிறோம். இதை செய்த பிறகு இனி உங்கள் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை கூட இதையே செய்து கொடுக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு கறியின் சுவையிலே இது இருக்கும் வாங்க அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: சேனைக்கிழங்கு – 1/4 கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 1, தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – 2, கசகசா – 1/2 டீஸ்பூன், மிளகு – 1/4 டீஸ்பூன், சீரகம் – 1/2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் -1/2 டீஸ்பூன், தனியாத் தூள் -1/2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன், உப்பு – 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை -1 கொத்து, எண்ணெய் – 5 டேபிள் ஸ்பூன்.

- Advertisement -

இந்த சேனைக்கிழங்கு கறி வறுவலுக்கு சேனைக்கிழங்கை மீடியம் சைஸ் நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் நறுக்கிய சேனைக்கிழங்கை சேர்த்து 50 சதவீதம் வரை வெந்தவுடன் தண்ணீரில் இருந்து எடுத்து வடித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி இவைகளை நல்ல பொடியாக கொள்ளுங்கள். இந்த வறுவலுக்கு மசாலா அரைக்க தேங்காய் துருவல் மிளகு அரை ஸ்பூன், சோம்பு, கிராம்பு, பட்டை ஒன்று, கசகசா, சீரகம் இவை எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்து இதையும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சேனை கிழங்கு கறி வறுவல் செய்முறை:

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து ஐந்து டேபிள் ஸ்பூன் எண்ணெயையும் மொத்தமாக சேர்த்து விடுங்கள். இதில் தண்ணீர் வடித்து வைத்த சேனைக்கிழங்கை போட்டு நன்றாக பொரித்து தனியே எடுத்து விடுங்கள், மீதம் இருக்கும் எண்ணெயில் பட்டை, அரை ஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை இவை எல்லாம் சேர்த்து பொரித்த உடன், வெங்காயம் சேர்த்து நல்ல பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதுவும் வதங்கிய பிறகு, தக்காளி சேர்த்து அதையும் நல்ல குழைய வதக்கி விடுங்கள்.

இவையெல்லாம் வதங்கிய பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் சேர்த்த பிறகு பொரித்து வைத்து சேனைக்கிழங்கையும் சேர்த்து உப்பு சேர்த்து ஒரு முறை கலந்து கொள்ளுங்கள். அதன் பிறகு அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட்டை இதில் சேர்த்து கால் டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கலந்து போட்டு ஐந்து நிமிடம் வேக விடுங்கள். இடையிடையே கொஞ்சம் கலந்து விடுங்கள் இல்லை என்றால் அடி பிடித்து விடும்.

இதையும் படிக்கலாமே: முருங்கைக் கீரையின் சத்துக்கள் நிறைந்த இந்த பஞ்ச பாண்டவ ரசத்தை வைத்து பாருங்கள் தேவாமிர்தம் போல இருக்கும். இப்படி ஒரு சத்தான,ஆரோக்கியம் நிறைந்த ரசத்தை இதுவரை நீங்கள் சாப்பிட்டு இருக்க வாய்ப்பே இல்லை.

ஐந்து நிமிடத்திற்கு எல்லாம் மசாலாவுடன் சேனைக்கிழங்கு சேர்ந்து நன்றாக வெந்திருக்கும். இப்போது அடுப்பை மீடியம் ஃப்ளேமில் வைத்து சேனை கிழங்கை நன்றாக சிவக்க வறுத்துக் கொள்ளுங்கள். இதை கை விடாமல் ஐந்து நிமிடம் அடுப்பிலே வைத்து கிளறிக் கொண்டு இருந்தாலே, இது நல்ல ரோஸ்ட் செய்த  நிறத்திற்கு மாறி விடும். அவ்வளவு தான் சுவையான சேனைக்கிழங்கு வறுவல் ரெடி.

- Advertisement -