சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையான தக்காளி தொக்கை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். மிகவும் அருமையான சுவையில் இருக்கும்

thakalli-thokku
- Advertisement -

பெரும்பாலான வீடுகளில் குழம்பு வைக்க நேரம் இல்லாத பொழுது சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட இந்த தக்காளி தொக்கை அடிக்கடி செய்வது வழக்கம் தான். அப்படி அனைவரும் செய்கின்ற இந்த தக்காளி தொக்கை கொஞ்சம் வித்தியாசமாக செய்யும் பொழுது இதன் சுவையும் மாறுபடுகிறது. ஒரு சிலர் தக்காளி தொக்கை குழம்பு பதத்திற்கு செய்வர். ஒரு சிலர் இதனை மிகவும் கெட்டியாக செய்வர். ஒரு சிலர் எண்ணெய் அதிகமாக ஊற்றி செய்வார்கள். ஒரு சிலர் எண்ணெய் குறைவாக ஊற்றி செய்வார்கள்.

இப்படி ஒவ்வொருவரும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி இதனை செய்வதுண்டு. அதே போல் தான் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகும் தக்காளி தொக்கும் சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 5, தக்காளி – 4, பூண்டு – 10 பல், பச்சைமிளகாய் – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், இஞ்சி சிறிய துண்டு – 1, எண்ணெய் – 8 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

செய்முறை:
முதலில் நான்கு வெங்காயத்தை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும், பிறகு தக்காளியையும் தண்ணீரில் நன்றாக கழுவி கொண்டு நான்கு துண்டுகளாக அரிந்து வைக்க வேண்டும். பிறகு இரண்டு பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் 10 பல் பூண்டை தோலுரித்து வைக்க வேண்டும். பிறகு சிறிய துண்டு இஞ்சியுடன் சிறிதளவு கொத்தமல்லி தழையை எடுத்து சிறிய உரலில் வைத்து நன்றாக இடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தக்காளியை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, என்னை ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு வெங்காயத்துடன் பூண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விட்டு பின்னர், இடித்து வைத்துள்ள இஞ்சி கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பின்னர், ஒன்றரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து, எண்ணெயில் சிறிது நேரம் நன்றாக வதக்கி விட்டு, ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவேண்டும். சிறிது நேரம் இவை நன்றாக கொதித்து மிளகாய் தூள் வாசனை போனதும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

- Advertisement -