வாழ்வில் பலருக்கும் ஒரு சில காரியங்களை செய்வதற்கு பல தடைகள் வந்து கொண்டே இருக்கும். அவ்வாறு திருமணத்திற்கு தடை, குழந்தைப்பேறு கிடைப்பதில் தடை, பணி உயர்வு தடை, உத்தியோக தடை, சொத்து சம்பந்தமான வழக்குகள் நிலுவையில் இருப்பது, தொழில் முன்னேற்றம் இல்லாமல் இருப்பது இவ்வாறு ஒவ்வொரு வகையான தடைகள் மனிதனின் வாழ்க்கையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இந்த தடைகளை தகர்த்து வாழ்வில் வெற்றிபெற விஜயதசமி திருநாள் அன்று இந்த பரிகாரத்தை தவறாமல் செய்துவிடுங்கள். வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

வன்னி மரம்:
வன்னி மரம் பல சிறப்புகளை உடையது மருத்துவத்தில் பல நூறு பலன்களை தரவல்லது அதுமட்டுமல்லாமல் பல புராண கதைகளை இதன் சிறப்பு பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. வன்னி மரத்தின் காற்றை சுவாசிப்பதன் மூலம் சுவாச பிரச்சனைகள் தீர்ந்துவிடும். தீராத பல நோய்களுக்கு இதன் இலை முதல் வேர் வரை அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படுகின்றன.
புராணங்களில் பல முக்கியமான தருணங்களில் இந்த வன்னி மரம் இடம்பெற்றுள்ளது. அவ்வாறு ராமபிரான் ராவணனை எதிர்த்து போர் செய்ய செல்வதற்கு முன்பு இந்த வன்னி மரத்தை தொட்டு வணங்கி அதன்பிறகுதான் போர் புரிய சென்றிருக்கிறார். அவ்வாறு இந்த மரம் வெற்றியை அளிக்கக்கூடிய சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்கள் துறவறம் மேற் கொள்வதற்கு முன்பு தங்களது அணிகலன்களையும் ஆயுதங்களையும் மூட்டையாக கட்டி இந்த வன்னி மரத்திற்கு அடியில் வைத்து விட்டு சென்றனர். அவ்வாறு இந்த மரம் சத்தியத்திற்கு கட்டுப்பட்ட மரமாகும்.
அதுமட்டுமல்லாமல் விருதாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் ஆலயத்தில் பழமை வாய்ந்த வன்னி மரம் ஒன்று இருக்கிறது. இந்த வன்னி மரத்தின் இலைகளை வைத்து தான் அந்த காலத்தில் இந்த கோவிலை கட்டினார்கள் என்றும் கூறப்படுகிறது. பலரும் இன்று வரை இந்த வன்னிமரத்தை சுற்றி வந்து தங்களது வேண்டுதல்களை சொல்லி பலனடைகிறார்கள்.

இவ்வாறு இங்கு வாழ்ந்து வந்த மகா முனிவர் ஒருவர் அங்கு பணிபுரியும் வேலையாட்களுக்கு உத்யோகமாக வன்னி மரத்தின் இலைகளை கொடுப்பாராம். நன்றாக வேலை செய்தவர்களுக்கு வன்னி இலை தங்கமாக மாறிவிடுமாம். சரியாக வேலை செய்யாதவர்களுக்கு இந்த இலை அப்படியே இருக்குமாம். இவ்வாறு சிறப்புகள் வாய்ந்த வன்னி மரம்.

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வன்னி மரத்தை வெற்றிகளை தரும் விஜயதசமி நாளன்று பூஜிப்பதன் மூலம் சிறந்த பலனை பெற முடியும். அவ்வாறு வீட்டிற்கு அருகிலோ அல்லது கோவிலிலோ இருக்கும் வன்னிமரத்தை இருபத்தி ஓரு சுற்றுகள் சுற்றி அதன் இலைகளைக் கொண்டு வந்து வீட்டில் பூஜை அறையில் இருக்கும் சிவபெருமானின் படத்திற்க்கு அபிஷேகம் செய்து நமது வேண்டுதலை வேண்டிக்கொண்டால் தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் விரைவில் நடந்து முடியும்.