- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகாரிய தடை விலக 7 கிராம்பு பரிகாரம்

காரிய தடை விலக 7 கிராம்பு பரிகாரம்

- Advertisement -

காரிய தடை நீக்கி மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக இந்த புத்தம் புது பரிகாரம். சில பேர், ஒரு விஷயத்தை பலமுறை முயற்சி செய்தாலும், அந்த விஷயத்தில் ஜெயிக்க மாட்டார்கள். வேலைக்கு போக 10 முறை இன்டர்வியூக்கு போயிருப்பாங்க. ஒருமுறை கூட நல்ல வேலை கிடைத்திருக்காது. இவர்களுக்கு திறமை இருக்கும்.

அந்த வேலைக்கு தேவையான எல்லா தகுதியும் இருக்கும். ஆனாலும் இவர்களை வேலைக்கு எடுக்க மாட்டாங்க. அப்ப ஏதோ ஒரு துரதிஷ்டம் இவர்களுக்கு பின்னால் வருகிறது. அதனால் தான் இவர்களுக்கு நல்லது நடக்க மாட்டேங்குது, அப்படின்னு சொல்வோம் அல்லவா. அந்த துரதிருஷ்டத்தை துரத்தி, காரிய தடையை நீக்கக்கூடிய பரிகாரம் தான் இது. நீங்கள் இந்த பரிகாரத்தை எந்த காரியத்தடை சரியாக வேண்டும் என்று நினைத்தாலும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

திருமணத்திற்கு வரன் பார்க்கப் போறீங்க, காலேஜில் சீட்டு கேட்க போறீங்க, பேங்கில் லோன் கேட்டு போறீங்க. இப்படி எந்த நல்ல காரியத்திற்கு போனாலும் இந்த பரிகாரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்திற்கு நமக்கு 7 கிராம்பு தேவை. அந்த கிராம்பில் மொக்கு பகுதி இருக்க வேண்டும் பார்த்துக்கோங்க.

காரிய தடை விலக 7 கிராம்பு பரிகாரம்

நாளைக்கு முக்கியமான வேலைக்கு வெளியே செல்ல வேண்டும் என்றால் இன்று இரவு தூங்க செல்வதற்கு முன்பு உங்களுடைய உள்ளங்கைகளில் 7 கிராம்பை வைத்துக்கொண்டு குலதெய்வத்தின் பெயரை 7 முறை சொல்லிவிட்டு இந்த கிராம்பை ஒரு பேப்பரில் வைத்து மடித்து கிண்ணத்தில் போட்டு பூஜையறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

மறுநாள் காலை எழுந்து குளித்துவிட்டு, சாப்பிட்டு ரெடியாயிட்டீங்க. இப்ப வீட்டில் இருந்து வெளியே செல்ல போறீங்க. முக்கியமான வேலைக்கு போகணும். வெளியில் செல்லும்போது இந்த பேப்பரில் இருக்கும் கிராம்பை உங்களுடைய வலது உள்ளங்கைகளில் எடுத்துக்கொண்டு, உள்ளங்கைகளை மூடிக்கொள்ளவும்.

உங்களுடைய இடது உள்ளங்காலில், கிராம்பு இருக்கும் வலது உள்ளங்கைகளை வைத்து, நீங்கள் செல்லும் காரியம் வெற்றி அடைய வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அவ்வளவுதான் இப்போது நீங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லலாம். செல்லக்கூடிய வழியில் இந்த 7 கிராம்புகளை ஒவ்வொரு, கிராம்பாக அப்படியே வீதியிலேயே போட்டுவிட்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

இரண்டு அடி எடுத்து வைக்கும் போது, ஒரு கிராம்பு, மீண்டும் இரண்டு அடி வைத்து எடுத்து வைக்கும் போது ஒரு கிராம்பு என்று போட்டுக் கொண்டே போகலாம். நடந்து சென்றாலும் சரி பைக்கில் சென்றாலும் சரி, இந்த கிராம்பை அப்படியே போகும் வழியில் போட்டு கொண்டே சென்றால், நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் சக்சஸ் ஆகும். (இரண்டு அடி என்பது சும்மா ஒரு கணக்குக்காக சொல்லப்பட்டுள்ளது. கொஞ்ச தூரம் இடைவெளி விட்டுவிட்டு போட்டுக்கொள்ளலாம். அதற்காக ஸ்கேல் வைத்து அடி கணக்கை அளக்காதீங்க).

இதையும் படிக்கலாமே: துன்பங்கள் துயரங்கள் வீட்டிலிருந்து வெளியேற விளக்கு

இப்படி செய்தால் துரதிஷ்டம் உங்களை பின்தொடராது என்பது நம்பிக்கை. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்