வெற்றிகரமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் அனைவரும் ஆசைப்படுவோம். யாருக்குமே தோல்வி என்பது பிடிக்காது. அதிலும் ஒரு காரியத்தில் வெற்றி அடையும் பொழுது தடையாக இருக்கக்கூடிய சில விஷயங்களை பார்க்கும் பொழுது கோவம் தான் ஏற்படும். அந்த தடைகளை தகர்த்தெறிவதற்குரிய விஷயங்களை கண்டறிந்து அதை மேற்கொள்வோம்.
இது அனைத்து செயல்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்று தான். இதே போல் ஒரு சில காரியங்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரு சிலரின் அனுமதியோ, உதவியோ தேவைப்படும். இது தொழில் ரீதியாக பலரும் பல வகைகளில் அனுபவபூர்வமாக உணர்ந்திருப்பார்கள்.
அப்படி யாராவது ஒருவரால் நம்முடைய காரியம் நடைபெற வேண்டும் என்றாலோ அவர்கள் நினைத்தால் நமக்கு தேவையானவற்றை செய்ய முடியும் என்றாலோ அவர்களின் பரிபூரணமான இணக்கத்தை பெறுவதற்கு அருகம்புல்லை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
காரியம் வெற்றி அடைய பரிகாரம்
விக்ணங்களை நீக்கக் கூடியவராக விநாயகப் பெருமான் திகழ்கிறார். விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் விலகும் என்றும் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிபாடு செய்கிறோமோ அந்த காரியம் வெற்றிகரமாக நடைபெறும் என்றும் பலரும் பல விதங்களில் விநாயகப் பெருமானின் அருளைப் பற்றி கூறியிருப்பார்கள்.
அதை நாம் செய்து பார்த்து வெற்றியும் அடைந்திருப்போம். அந்த வகையில் ஒருவரால் ஏற்படக்கூடிய நன்மைகள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு விநாயகப் பெருமான் எந்த அளவுக்கு உதவி புரிவார் என்று பார்ப்போம். விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்த பொருளாக திகழ்வதுதான் அருகம்புல்.
ஒரு காரியத்தை செய்வதற்காக ஒருவரை பார்க்கச் செல்கிறோம் என்றால் அந்த நாள் சந்திராஷ்டமம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். நம்முடைய ராசிப்படி நமக்கு என்றைக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதோ அன்றைய தினத்தில் நாம் எந்த ஒரு நல்ல செயலையும் செய்யக் கூடாது மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறி கேள்விப்பட்டிருப்போம். பலரும் சந்திராஷ்டமம் இருக்கும் நாட்களில் பிறரிடம் பேசுவதையே தவிர்த்து விடுவார்கள்.
அன்றைய தினம் காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்து விட்டு வீட்டில் இருக்கும் விநாயகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி அருகம்புல் மாலை சாற்றி உங்களுக்கு தெரிந்த விநாயகரின் நாமத்தை கூறி விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு யாரை பார்க்க செல்கிறீர்களோ அவர்களால் உங்களுக்கு என்ன காரியம் நடைபெற வேண்டும், அந்த காரியம் நடைபெற்றால் உங்களுடைய வாழ்க்கையில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை ஒரு நண்பரிடம் கூறுவதுபோல் விநாயகப் பெருமானிடம் மனதார கூற வேண்டும்.
இப்படி கூறி முடித்த பிறகு அவருக்கு அர்ச்சனை செய்த அருகம்புல்லில் இருந்து ஒரு அருகம்புல்லை மட்டும் எடுத்து அதனுடன் ஒரு ரூபாயும் சேர்த்து எடுத்துக்கொண்டு அந்த காரியத்திற்கு செல்ல வேண்டும். நீங்கள் யாரை பார்க்க இருக்கிறீர்களோ அவர்களை பார்த்தவுடன் அவர்களிடம் இந்த அருகம்புல்லையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் விநாயகரின் பிரசாதம் என்று கூறி கொடுக்க வேண்டும்.
இப்படி கொடுத்து விட்டு நீங்கள் எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசினாலும் அந்த விஷயம் வெற்றிகரமாக நடைபெறும். அதற்கு விநாயகப் பெருமான் பரிபூரண அருளை தருவார். யாரும் பிரசாதத்தை வேண்டாம் என்று கூறவே மாட்டார்கள். விருப்பம் இல்லாவிட்டாலும் கொடுத்து விட்டார்களே என்பதற்காகவாவது வாங்கி வைப்பார்கள். அதனால் இந்த பரிகாரத்தை செய்வதில் எந்தவித தயக்கமும் வேண்டாம்.
இதையும் படிக்கலாமே: பணம் சம்பாதிக்கும் தகுதி பெற வழிபாடு
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை விநாயகப் பெருமானை முழு நம்பிக்கையுடன் நம்பி செய்ய காரியத்தில் வெற்றிகள் உண்டாகும்.