போற காரியம் 100% கட்டாயம் வெற்றியில் முடிய 2 கற்பூரம் மட்டும் போதுமே!

kuladeivam-karpooram

நாம் எங்காவது வெளியில் செல்லும் பொழுது எதற்காக செல்கிறோமோ? அந்த காரியம் 100% கட்டாயம் வெற்றி பெற நமக்கு வேண்டுதல்கள் இருக்கும். போகிற காரியம் வெற்றி அடையுமா? அடையாதா? நமக்கு தெரிய போவது இல்லை. உள்ளுக்குள் பயம் மட்டுமே இருக்கும். இது இந்தெந்த விஷயங்கள் என்றில்லை! எதற்காக வெற்றியை நோக்கி நாம் பயணம் செல்கிறோமோ? அவை ஒவ்வொன்றுமே நமக்கு முக்கியமானவை தான். ஒரு காரியம் நாம் செய்யும் பொழுது நமக்கு துணையாக வருவது நம் வீட்டின் குலதெய்வம் தான்.

kula-dheivam

மற்ற தெய்வங்களை காட்டிலும் நம் வீட்டின் குலதெய்வம், நம்முடைய வெற்றியில் அதிக அளவு பங்கு கொள்வது முற்றிலும் உண்மை. குலதெய்வம் என்பது நம் குலத்தில் வாழ்ந்த நமது முன்னோர்கள் வழிவழியாக நம்முடன் துணை நிற்பதற்கு உருவாக்கப்பட்ட தெய்வங்கள் என்கிறது சாஸ்திரம்.

நாம் ஒரு திருமணம், சடங்கு போன்ற நல்ல காரியத்திற்கு செல்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிய இதை செய்து விட்டு செல்லலாம். அது போல புதிய தொழில் தொடங்கும் பொழுது, தேர்வு எழுதும் மாணவர்கள், வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், வீடு கட்ட முயன்று கொண்டிருப்பவர்கள், பெண் பார்க்க செல்பவர்கள் இப்படியாக ஒவ்வொரு காரியங்களும், நமக்கு சாதகமாக அமைய, குலதெய்வத்தின் அருள் நமக்கு கட்டாயம் வேண்டும். அப்போது தான் நாம் எடுக்கும் முயற்சிகள் தடைகள் இன்றி சிறப்பான வெற்றியை நமக்கு தேடித்தரும்.

Agal-Vilakku

இதற்கு நமக்கு ஒரு அகல் விளக்கும், இரண்டு கற்பூரமும் இருந்தால் போதும். வேறு எதுவுமே தேவையில்லை. இன்றைய நாளில் நாம் ஒரு நல்ல விஷயத்திற்காக வெளியே செல்லுகிறோம் என்றால் காலையிலேயே எழுந்து குளித்து முடித்து, சுத்தமான ஆடை உடுத்திக் கொண்டு பூஜை அறைக்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

குல தெய்வம் படத்தின் முன்பு நின்று அல்லது குலதெய்வம் இல்லாதவர்கள் பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் கொண்டு அதை குல தெய்வமாக நினைத்து வழிபடலாம். குலதெய்வத்தின் முன்பு புதிய அகல் விளக்கு ஒன்றை வைத்து அதில் இரண்டு கற்பூரத்தை வைத்து ஏற்றி வழிபட வேண்டும். கற்பூரம் ஏற்றும் பொழுது கீழ்வரும் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

sembu-sombu

மந்திரம்:
ஓம் குலதேவதா நம::
ஓம் சம் நம::

இந்த மந்திரத்தை 9 முறை உச்சரித்து விட்டு, உங்கள் காரியம் வெற்றி அடைய குலதெய்வத்திடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டிக் கொள்வதால் உங்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்வி எல்லாம் எழவே எழாது. நாம் செய்கின்ற காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்கிற உற்சாகத்துடன் புறப்படுவீர்கள். அதுதான் இந்த மந்திரத்தின் சக்தி. மிகவும் எளிதான மந்திரம் தான். நம்முடைய குல தெய்வத்திற்கு உரிய மகத்துவமான இந்த மந்திரத்தை உச்சரித்து கற்பூரம் ஏற்றி வேண்டிக் கொண்டு வெளியே புறப்பட்டு சென்றால், செல்லும் காரியம் தோல்வியை தழுவாது என்பது நம்பிக்கை.

karpooram

நாம் செல்லும் காரியம் அப்படி தோல்வியில் முடிந்தால்! அதனால் நமக்கு வர இருந்த பிரச்சினைகள் தீர்ந்து விட்டதாக எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு வரன் பார்க்க செல்கிறோம் என்று வைத்துக் கொண்டால், அந்த வரன் கைகூடி வரவில்லை என்றால், அது நமக்கு ஏற்ற இடம் அல்ல என்பது தான் உண்மை. நீங்கள் குலதெய்வத்திடம் வேண்டிக் கொண்டு செல்வதால் உங்களுக்கு வர இருக்கும் பிரச்சினைகள் முன்கூட்டியே தீர்ந்துவிடும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த ஒரு வழிபாடாக இந்த எளிய வழிபாடு உங்களுக்கு அமையும். எப்பொழுதும் நல்ல காரியத்திற்காக நாம் செல்லும் பொழுது ஏதேனும் கோவில்களில் நின்று கற்பூரம் ஏற்றி வைத்து வழிபட்டு செல்வது சாதாரணமாக நமக்கு வெற்றியை தேடி தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்லப்பட வேண்டிய மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்கள் மொத்தமாக இதோ உங்களுக்காக!

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.