சமையலறையில் இருக்கும் இந்த 1 பொருளை வாயில் போட்டு கொண்டு வெளியில் சென்றால் செல்லும் காரியம் அமோக வெற்றிதான்!

gasagasa-vinayagar

நாம் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுது காரிய வெற்றி உண்டாக விநாயகரை வழிபட வேண்டும். முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபடும் பொழுது காரிய சித்தி உண்டாகும் என்பது நியதி. எந்த ஒரு புதிய விஷயத்தையும் நீங்கள் ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு துவங்குவது ஜெயம் உண்டாக செய்யும். அதுபோல இந்த ஒரு பொருளை வாயில் போட்டு மென்று கொண்டு வெளியில் சென்றால் செல்லும் காரியம் ஜெயமாகும். அது என்ன பொருள்? என்பதை இனி இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

praying god

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்காக பிரார்த்தனைகளை வைப்பது உண்டு. திருமண காரியங்களுக்காக வெளியில் செல்பவர்கள் நல்ல வரன் அமையவும், அமைந்த வரன் நல்லபடியாக முடியவும் வீட்டில் பிரார்த்தனை செய்து கொண்டு வெளியில் புறப்படுவார்கள். அப்போது தான் செல்லும் காரியம் தடையில்லாமல் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை.

எப்பொழுதும் நல்ல விஷயத்திற்காக நாம் வீட்டிலிருந்து வெளியில் புறப்படும் பொழுது வீட்டில் இருக்கும் கடவுள்களை வணங்கி விட்டுச் செல்வது உத்தமம். ஒரு ஐந்து நிமிடம் காமாட்சி அம்மன் விளக்கை நெய் ஊற்றி எரிய விட்டு பின்னர் அமர்த்தி விட்டு செல்லலாம். அதுபோல நேர்முகத்தேர்வுக்கு செல்பவர்கள் அல்லது போட்டித் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு ராசியான நபர்களிடமிருந்து ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி கொண்டு செல்லுங்கள்.

one rupee

உங்களின் ராசியானவர்கள் கைகளின் மூலம் நீங்கள் வாங்கும் நாணயம் மிகுந்த அதிர்ஷ்டம் உடையது. ஒரு ரூபாயை தவிர வேறு நாணயங்களை வாங்க வேண்டாம். மொய் எழுதும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து எழுதுவது உண்டு. வேறு நாணயங்களை மொய் எழுதும் பொழுது வைக்க மாட்டார்கள். ஏனெனில் ஒரு ரூபாய் நாணயம் என்பது மற்ற நாணயங்களில் விட சற்று விசேஷமானது. ஒன்று என்பதற்கு எல்லா தெய்வங்களையும் ஒன்றாக பார்ப்பதற்கு சமமாகும். எனவே நீங்கள் வெளியில் செல்லும் பொழுது ஒரு ரூபாய் நாணயத்தை வாங்கி பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுங்கள்.

- Advertisement -

அதுபோல் காரிய வெற்றிக்கு நம் வீட்டு சமையல் அறையில் இருக்கும் ஒரு பொருள் நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும். அந்த பொருளுக்கு ‘கசகசா’ என்று பெயர். கசகசாவில் மருத்துவ குணங்களும் ஏராளமான அளவில் அடங்கியிருக்கின்றன. தினமும் வெதுவெதுப்பான பாலில் சிறிதளவு கசகசாவை அரைத்து குடித்தால் போதும்! எப்படிப்பட்ட தூக்கமின்மை பிரச்சினையும், விரைவாக நீங்கும். இரவில் ஆழ்ந்த தூக்கம், நிம்மதியான தூக்கம் வரும்.

gasagasa

கசகசாவை ஊற வைக்காமல் அரைக்க முடியாது எனவே அதனுடன் சிறிதளவு வெங்காயம், சிறிதளவு பட்டை, சிறிதளவு பொட்டுக்கடலை சேர்த்து லேசாக வாணலியில் வறுத்து பின்னர் பொடியாக்கி ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் போதும்! சமையலின் பொழுது இவற்றைத் தூவி சமையலை ருசியாக மாற்றிவிட முடியும். இத்தகைய சிறப்புகள் வாய்ந்த கசகசா ஆன்மிகத்திலும் பயன்படும் தெரியுமா?

gasagasa1

நீங்கள் வெளியில் செல்லும் பொழுது சிறிதளவு கசகசாவை வாயில் போட்டு மென்று கொண்டே செல்லுங்கள். நீங்கள் எந்த காரியத்திற்காக சென்றாலும் அந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும். நீங்கள் நல்ல விஷயத்திற்காக வெளியில் செல்லும் பொழுது தடங்கல்கள் ஏற்படும் பொழுது சிறிது நேரம் அமர்ந்து தண்ணீர் குடித்து விட்டு பின்னர் இதேபோல கசகசாவை வாயில் போட்டுக் கொண்டு சென்றால் தடைகள் விலகி விடும்.