இந்த நாளில் மிளகாயை இப்படி செய்து விடுங்கள்? நீங்கள் செய்த பாவங்களும், கர்ம வினைகளும் நெருப்பில் கரைந்து போய்விடும்!

chilli-temple

ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்நாளில் கர்ம வினைகளை சேர்ந்து அனுபவித்துக் கொண்டு இருப்பான் என்பது ஜோதிட விதியாகும். அதாவது போன ஜென்மத்தில் செய்த கர்மம் செயல்கள், அதற்குரிய பலன்கள் இந்த ஜென்மத்திலும் தொடரும். அது நல்லது செய்திருந்தாலும் சரி, பாவம் செய்திருந்தாலும் சரி. கர்மம் என்பது செயலை குறிப்பது ஆகும். நீங்கள் செய்த செயல்களுக்கு ஏற்ப பலன்களும் உங்களைப் பின்தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். அப்படி நல்லது, கெட்டது என மாறி மாறி வரும் பலன்களில் நிகழ்கால வாழ்க்கை தொடரும்.

praying god

நீங்கள் செய்த புண்ணியங்களுக்கு ஏற்ப நல்லவைகளும், பாவங்களுக்கு ஏற்ப கெட்டவைகளும் நடக்கும். கெட்டது நடக்கும் பொழுது தீராத துன்பத்தால் அவதிப்படுவீர்கள். அப்போது இறைவனை நாடி செல்வோம். செய்த பாவங்களுக்கு விமோசனம் தேடி அலைவோம். எப்பொழுதும் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதற்குரிய விமோசனம் தேடும் பொழுது கெடு பலன்கள் குறைய ஆரம்பிக்கும். அது தான் இறைவன் நம்மீது செலுத்தும் கருணையாகும். செய்த பாவத்திற்கு விமோசனம் தேடுவது என்பது தான் நிகழ்கால வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை நீக்குவதற்கான ஒரே வழியாகும். அதை எப்படி எளிதாக நீக்குவது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

பாவத்தை செய்து விட்டு தண்டனையிலிருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணுவது தவறு. ஆனால் செய்த பாவத்திற்கான தண்டனையை குறைத்துக் கொள்ள பாவ நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதுவும் நீங்கள் மனமார அந்த பாவத்திற்காக வருந்தி ஏற்றுக் கொள்ளும் பொழுது தான் விமோசனமும் கிடைக்கும்.

virudhalacham-temple

முன்ஜென்ம கர்மங்கள் எல்லாம் என்னவென்றே தெரியாமல் அனுபவித்துக் கொண்டிருப்போம். இதற்காகத்தான் அடிக்கடி கோவில்களுக்கு சென்று நவகிரக சந்நிதிகளை வலம் வருவதும், மற்ற தெய்வங்களுக்கு வழிபாடுகள் செய்வதும் வழக்கமாக இருந்து வருகிறது. கோவிலில் இருக்கும் அதிர்வலைகள் எந்த அளவிற்கு நாம் வாங்கிக் கொள்கிறோமோ அந்த அளவிற்கு நம் கர்மங்கள் நீங்கும்.

இதில் சிவபெருமானுக்கு மிகுந்த விசேஷமான பிரதோஷம் அன்று இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு செய்த பாவங்களுக்கான கெடுபலன்கள் குறைய ஆரம்பிக்கும் என்பது கண்கூடான நம்பிக்கை ஆகும். பிரதோஷ நாட்களில் சிவாலயங்களுக்கு செல்லும் பொழுது கைகளில் 9 காய்ந்த மிளகாய்களை எடுத்து கொண்டு செல்லுங்கள். மிளகாய் திருஷ்டியை போக்கும் ஆற்றல் பெற்றுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

red-chilli

சிவாலயத்தில் அமர்ந்து சிவதரிசனம் செய்து முடித்ததும் கையில் இருக்கும் மிளகாய்களை ஒரு பையில் அல்லது துணியில் போட்டு மூட்டை கட்டி தயாராக வைத்துக் கொள்ளவும். அமைதியாக தியான நிலையில் ஓரிடத்தில் அமர்ந்து கையில் இருக்கும் மிளகாய்களை தலைப்பகுதியின் உச்சியில் வைத்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு ஒரு 5 லிருந்து 10 நிமிடம் வரை வைத்திருங்கள் போதும். பின்னர் அதனை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து ஒரு பேப்பரில் வைத்து மடித்து அதனுடன் பச்சை கற்பூரம் அல்லது சாதாரண கற்பூரம் ஏதாவது ஒன்றை சேர்த்து நெருப்பிலிட்டு கொளுத்தி விடுங்கள். மிளகாய் வெடிக்கும் சத்தத்தில் உங்களுடைய அத்தனை பாவங்களும், கர்மங்களும் நீங்கிவிடும் என்பது நியதி. மேலும் உங்களை சுற்றி இருக்கும் திருஷ்டிகளும் நீங்கி எல்லா பிரச்சினைகளும் அகன்று விடும்.