தினம் தினம் உங்களுடைய கர்மாக்கள் படிப்படியாக குறைய இப்படி ஒரு வழி இருப்பதை இதுவரை யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள். இப்போதும் அறிந்து கொள்ள தவறி விடாதீர்கள்.

ragukethu
- Advertisement -

கர்மாக்களை கழிப்பதற்கு உலகத்தில் எத்தனையோ வழிபாட்டு முறைகள், பரிகார முறைகள் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகும் இந்த வழி, மிகவும் புதியதொரு வழி. அது என்ன என்பதை தெரிந்து கொண்டு முகம் சுழிக்காமல் அன்றாட வேலையில் இதுவும் ஒன்று என்று நினைத்துக்கொண்டு, இந்த வேலையை செய்யும்போது, இந்த கடவுள்களுக்கு மனதார நன்றியை தெரிவிக்கும் போது கர்மாக்கள் படிப்படியாக குறையும். அது என்ன வேலை. அது என்ன பரிகாரம். நாமும் தெரிந்து கொள்வோமா.

kethu

முதலில் கர்மாக்கள் என்றால் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்நாளில் முன்ஜென்மத்தில் அல்லது இந்த ஜென்மத்தில் நாம் செய்த பாவ புண்ணிய கணக்குகளே, நம்முடைய கர்ம வினைகள் ஆக கருதப்படுகிறது. நம்முடைய கர்மவினைகளை நிர்ணயிப்பது ஜாதக கட்டத்தில் இருக்கும் ராகுவும் கேதுவும் என்று சொல்லப்படும் இரண்டு கிரகங்கள்தான்.

- Advertisement -

நம்முடைய உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் இயங்குவதற்கு ஒவ்வொரு கிரகங்கள் காரணமாக இருக்கின்றன. அந்த வரிசையில் நம்முடைய உடலில் இருக்கும் கெட்ட கழிவுகளை வெளியேற்றக் கூடிய வேலையை செய்வது இந்த ராகு கேது கிரகங்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நம்முடைய ஜாதக கட்டத்தில் இருக்கும் கெடுபலன்களை, கெட்டதை குறைக்கவும் இவர்களால் தான் முடியும்.

ragukethu1

ஆக, தினமும் நீங்கள் உங்களுடைய காலை கடனை முடிக்கும்போது, காலைக்கடனை முடித்துவிட்டு, ஒரு முறை ராகு பகவான் கேது பகவானுக்கு மனதார நன்றிகளை தெரிவிக்க வேண்டும். நம்முடைய உடலின் ஒவ்வொரு அணுவும் அசைவது அந்த ஆண்டவனால் தான். அந்த நவகிரகங்களில்னால் தான். இந்த விஷயத்திற்கெல்லாம் கடவுளைக் கும்பிடுவதா, என்று நினைக்காதீர்கள். நம்முடைய உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற வில்லை என்றால் நம்முடைய உடல் என்ன ஆகும்.

- Advertisement -

கர்ம வினைகளால் உண்டாக்கப்படும் பாதிப்புகளை விட கழிவுகள் வெளியேற்றப்படாமல் இருந்தால் உடல் ரீதியாக இருக்கக்கூடிய பாதிப்புக்கள் அதிகமாகிவிடும். ஆரோக்கிய ரீதியாக நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும், நம்முடைய உடலில் இருந்து வெளியேற்ற படக்கூடிய கழிவுகளோடு நம்முடைய கர்ம வினைகளும் கரைந்து போக வேண்டும் என்றாலும், தினமும் காலை கடன்களை முடித்தவுடன் ராகு கேதுவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

toilet

எதற்கு எதை முடிச்சு போடுவது என்று நினைக்காதீர்கள். கழிவுகள் வெளியேற்றப்படுவது போல நம் கர்மாக்களும் வெளியேற்றப்பட வேண்டிய ஒரு விஷயம்தான். கழிவுகளை வெளியேற்றுவதற்கு நமக்கு உறுதுணையாக இருக்கும் இந்த ராகு-கேது வினை மறவாமல் நினைத்து நன்றி சொல்லிக் கொண்டே வரும் பட்சத்தில், நிச்சயமாக அவர்கள் மனம் இறங்கி, நம் செலுத்தக் கூடிய நன்றி கணக்கு, நம் கர்மவினைகளை கட்டாயம் குறைத்து விடுவார்கள்.

navagragam

இதை மட்டும் நீங்கள் செய்து பாருங்கள். உங்களுடைய கர்மா படிப்படியாக குறையும். கஷ்டங்கள் படிப்படியாக தீரும். வாழ்க்கையில் முன்னேற்ற பாதைக்கு செல்வதற்கு நிறைய நல்ல விஷயங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -