இந்த உலகத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் கர்ம வினைகள் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த கர்ம வினைகளை நீக்கி நல்லதொரு வாழ்க்கையை அருளக்கூடியவராக தான் சிவபெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் அனுதினமும் வணங்க வேண்டும். அனுதினமும் வணங்க இயலாவிட்டாலும் அவருக்கு உகந்த திங்கட்கிழமை அன்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகளை நீக்கி நம்முடைய தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றுவார். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தலையெழுத்தை மாற்றும் வழிபாடு
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சூழ்நிலையிலாவது நம்முடைய தலையெழுத்தை நினைத்து நொந்து கொள்வோம். என்ன தலையெழுத்து இது? எந்த நேரத்தில் அந்த இறைவன் எழுதினானோ தெரியவில்லையே என்று புலம்புவோம். அந்த மோசமான தலையெழுத்தையும் மாற்றி நல்ல தலையெழுத்தாக வேண்டும் என்றால் நம்முடைய கர்ம வினைகள் குறைய வேண்டும். அப்படிப்பட்ட கர்ம வினைகளை குறைப்பதற்கு உதவக்கூடிய தெய்வமாகத்தான் சிவபெருமான் திகழ்கிறார். சிவபெருமானை நாம் தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கர்ம வினைகளை அவர் அழித்து நமக்கு நல்லதொரு வாழ்க்கையை அருள்வார்.
இந்த வழிபாட்டை சோமவாரம் என்று சொல்லக்கூடிய திங்கட்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அன்று காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது சிவபெருமானுக்கே உரித்தான வில்வ இலைகளையும் ஒரு தேங்காயையும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். இந்த வில்வ இலைகளை வாங்கும் பொழுது அது ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது நீங்களே 21, 15, 51 என்ற எண்ணிக்கையில் எண்ணி எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.
இந்த வில்வ இலைகளை சிவபெருமானுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு தேங்காயை உடைக்க சொல்லுங்கள். பிறகு சிவபெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து விட்டு அங்கேயே குறைந்தது ஐந்து நிமிடமாவது அமர்ந்து தியானம் செய்வதாக இருந்தாலும் செய்யலாம் அல்லது சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறுவதாக இருந்தாலும் கூறலாம். இப்படி செய்து முடித்த பிறகு நாம் கொடுத்த வில்வ இலைகளில் இருந்து சிறிதளவு மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் தேங்காயில் ஒரு மூடியை மட்டும் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.
வாங்கிய இந்த இரண்டு பொருட்களையும் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அந்த தேங்காயை பயன்படுத்திக் கொள்ளலாம். வில்வ இலையை நம்முடைய வீட்டு பீரோவிலோ பணம் வைக்கும் இடத்திலோ வைத்து விட வேண்டும். இந்த முறையில் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் திங்கட்கிழமைதோறும் சென்று சிவபெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய தீய வினைகளும் கர்ம வினைகளும் நீங்கும். அதன் மூலம் இதுவரை இருந்து வந்த மோசமான தலையெழுத்தும் நல்ல தலையெழுத்தாக மாறும்.
இதையும் படிக்கலாமே:2025 ல் உற்சாகம் தரும் மந்திர வார்த்தை
முழுமனதோடு யார் ஒருவர் சிவபெருமானை அனுதினமும் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு இருக்கக்கூடிய கர்ம வினைகள் நீங்கும் என்பது நிதர்சனமான உண்மை. மேல் சொன்ன இந்த வழிமுறைப்படி திங்கட்கிழமை தோறும் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய தலையெழுத்து நல்ல விதமாக மாறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.