பூஜைக்கு மட்டும் கற்பூரத்தை பயன்படுத்துகிறீர்களா? இது தெரிஞ்சா இனி இதற்கும் பயன்படுத்துவீர்கள்!

karpooram-champhor
- Advertisement -

சாமிக்கு விளக்கேற்றும் பொழுது பூஜைக்கு கற்பூர ஆரத்தியை காண்பிப்பது வழக்கம். பூஜை அறையில் இருக்கும் சுவாமிக்கு மட்டுமல்ல சில திருஷ்டிகள் கழிக்கவும் கற்பூரத்தை பயன்படுத்துவது உண்டு. ஞாயிற்றுக்கிழமை மற்றும் அமாவாசைகளில் வீட்டையோ அல்லது வீட்டில் இருக்கும் குடும்பத்தாரையோ அமர வைத்து கற்பூரத்தை சுற்றி திருஷ்டி கழிப்பது உண்டு. மேலும் வீட்டில் இருக்கும் இந்த கற்பூரத்தை வைத்து என்னவெல்லாம் செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வீட்டில் பெரும்பாலான தீய சக்திகள் நாம் வெளியில் சென்று கால்களை கூட கழுவாமல் வீட்டிற்குள் வருவதால் நுழைகின்றன. நம் பாதம் வழியே வரக்கூடிய இந்த தீய சக்திகளை விரட்டி அடிப்பதற்கு நீங்கள் வீட்டை ‘மாப்’ போடும் பொழுது அந்த தண்ணீருடன் கொஞ்சம் கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி கல் உப்பைப் போட்டுக் கொள்ளுங்கள். கற்பூரத்தின் வாசம் வீட்டில் இருக்கும் எதிர்மறைச் சக்திகளையும், துர்தேவதைகளின் வெளியில் விரட்டும். வீட்டையும் தெய்வீக மணமுடன் வைத்திருக்க உதவும்.

- Advertisement -

விளக்கு ஏற்ற பயன்படுத்தும் திரியின் முனையானது நெருப்பை வைத்தவுடன் பற்றிக் கொள்வது இல்லை. அதற்கு ஓரிரு மணித்துளிகள் நாம் காத்திருக்க வேண்டியதாக இருக்கும். என்னதான் எண்ணெயில் தோய்த்து எடுத்தாலும் கூட, இதே நிலைமை தான்! நீங்கள் திரியைப் போட்டு வைத்திருக்கும் டப்பாவில் திரியின் முனையில் கொஞ்சம் கற்பூரத்தை நொறுக்கி அழுத்தி வைத்துக் கொள்ளுங்கள். இப்படி செய்து வைத்துக் கொண்டால் நீங்கள் விளக்கு ஏற்றும் பொழுது விரைவாக தீபம் சுடர் விட்டு எரியும்.

பூஜை அறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பின்னால் இருக்கும் அட்டை சுத்தமாக பராமரித்து வந்தாலும், கொஞ்ச காலத்தில் செல்லரிக்க ஆரம்பித்துவிடும். இப்படி செல்லரிக்காமல் இருக்கவும், பூஜை அறையில் சிறு சிறு வண்டுகள், பூச்சிகள் வராமல் இருக்கவும் நீங்கள் சுவாமி படங்களை சுத்தம் செய்யும் பொழுது கொஞ்சம் கற்பூரத்தை படத்தின் பின்னால் தேய்த்து விட வேண்டும். இதனால் பூச்சி தொந்தரவுகளும், செல்லரிக்கும் பிரச்சனையும் நீங்கும்.

- Advertisement -

வீட்டில் ஈக்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள், பழ ஈக்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிரந்தரமாக விடிவு காண கொஞ்சம் வெதுவெதுப்பான தண்ணீரில் நாலைந்து கற்பூரத்தை நொறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்கு கரைய விட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பிரச்சினைகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் லேசாக ஸ்ப்ரே செய்து விட்டால் போதும், ஒரு ஜந்துக்களும் உங்கள் வீட்டை எட்டி பார்க்காது. ஜன்னல் கம்பிகள், திரை சீலைகள் போன்றவற்றிலும் அடித்து விடலாம்.

பீரோ அலமாரிகளில் எல்லாம் பயன்படுத்தாத நாள்பட்ட துணிமணிகளின் மீது ஒருவிதமான துர்நாற்றம் வீசும். அதே போல மழைக்காலங்களில் சரியாக காயாத ஈரப்பதமுள்ள துணிகளிலும் ஒருவிதமான துர்நாற்றம் வீசும். இந்த துர்நாற்றம் வீசாமல் இருக்க பீரோ மற்றும் கப்போர்டுகளில், துணி வைக்கும் இடங்களிலெல்லாம் ஒரு டிஷ்யூ பேப்பரில் நாலைந்து கற்பூரத்தை வைத்து மடித்து ஆங்காங்கே செருகி வைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை நீங்கள் துணியை போடும் பொழுது நல்ல ஒரு வாசம் வீசும்.

சர்க்கரை, ரவை போன்றவற்றை தேடி வரும் எறும்புகளை தீர்த்துக் கட்டுவதற்கு ஆங்காங்கே சமையல் அலமாரிகளில் கற்பூரத்தை நொறுக்கி தூவி வைத்து விடுங்கள், ஒரு எறும்பு கூட அந்த பக்கம் எட்டிப் பார்க்காது. கொஞ்சம் சுத்தமான தேங்காய் எண்ணெயை மிதமாக காய வைத்து அதில் கற்பூரத்தை நொறுக்கி சேர்த்தால் கற்பூர எண்ணெய் தயாராகிவிடும். இந்த எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் சுளுக்கு, தசை பிடிப்பு, மூட்டு வலி, கால் வலி, பாத எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மேலும் இந்த எண்ணெயைக் கொஞ்சம் தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லைகள் நீங்கும். அது மட்டுமல்லாமல் மஞ்சள், குங்குமம் வைத்து இருக்கும் டப்பாக்களில் கற்பூரத்தை போட்டு வைத்தால் விரைவில் பூச்சிகள் படை எடுக்காமல் இருக்கும். இவ்வளவு விஷயத்திற்கு கற்பூரம் பயன்படும் பொழுது அதனை ஏன் வீணாக்க வேண்டும்?

- Advertisement -