கற்பூரத்தை இப்படியெல்லாம் கூட பயன்படுத்தலாமா? இல்லத்தரசிகள் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான் இது.

karpooram
- Advertisement -

கற்பூரம், இதை சுவாமிக்கு மட்டும்தான் ஏற்றி வழிபாடு செய்ய நம்முடைய வீடுகளில் பயன்படுத்துவோம் அல்லவா. ஆனால் ஆன்மீகம் தவிர மற்ற சில விஷயங்களுக்கும் இந்த கற்பூரத்தை பயன்படுத்த முடியும். கற்பூரத்தை மற்ற வீட்டு உபயோகத்திற்கு எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பதை பற்றிய சில பயனுள்ள வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். பதிவை தொடர்ந்து படித்து பாருங்கள். எந்தெந்த குறிப்புகள் உங்களுக்கு தேவையோ அதை முயற்சி செய்து பார்க்கவும்.

கற்பூரத்தின் மற்ற பயன்பாடுகள்

ஒரு சின்ன கேலண்டர் பேப்பரை எடுத்துக்கோங்க. தினசரி கிழிக்கும் கேலண்டர் பேப்பர் மெல்லிசாக இருக்கும் அல்லவா. அதை எடுத்து அதில் இரண்டு கற்பூர கட்டிகளை வைத்து மடித்து பீரோவில் ஆங்காங்கே வைத்து விட்டால், பீரோவில் இருக்கும் துணியில் மழைக்காலத்தில் கெட்ட வாடை வீசாது. அது மட்டுமல்லாமல் சின்ன சின்ன பூச்சிகள் அந்த இடத்தில் அண்டாமல் இருக்கும்.

- Advertisement -

காலண்டர் பேப்பருக்கு பதில் டிஷ்யூ பேப்பரை கூட நீங்கள் பயன்படுத்தலாம். இதே போல இந்த கற்பூர பொட்டலங்களை புத்தகம் அடுக்கி வைக்க கூடிய இடம், மற்ற பொருட்களை அடுக்கி வைத்திருக்கும் கபோர்டு, சமையலறை கபோர்ட்டில் வைத்தாலும், அந்த இடத்தில் பூச்சி பொட்டு கொசு தொல்லை இருக்காது.

ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீரை எடுத்துக்கோங்க. அதில் 2 கற்பூரத்தை நசுக்கி போட்டு கரைத்துக் கொள்ளுங்கள். இந்த கற்பூர தண்ணீரை ஒரு துணியில் தொட்டு சமையல் அறை மேடைகளை துடைத்தால் அந்த இடத்தில் எந்த பூச்சிகளும் வராது. ஈ எறும்பு தொல்லை இருக்காது. இந்த ஸ்ப்ரே தண்ணீரை அப்படியே ஜன்னல்கள் மீதும் அடித்து விடலாம். அந்த இடத்தில் கொசு ஈக்கள் வந்து மொய்க்காமல் இருக்கும்.

- Advertisement -

குழியாக இருக்கும் ஒரு தட்டாக எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றுங்கள். அதில் இரண்டு கட்டியாக இருக்கும் கற்பூரத்தை அப்படியே போடுங்க. ஒரு கட்டி கற்பூரத்தை நசுக்கி அதில் கரைத்து விடுங்கள். இந்த தட்டை ஜன்னலுக்கு பக்கத்தில் வச்சிருங்க. இந்த வாசத்திற்கு ஜன்னலின் வழியாக கொசுக்கள் வீட்டிற்குள் வராமல் இருக்கும்.

கற்பூரம் எண்ணெய் என்று கடைகளில் விற்கும் அந்த எண்ணெயை வாங்கி வலி நிவாரணையாக பயன்படுத்தலாம். ஆனால் இந்த எண்ணெய் சில பேருக்கு அலர்ஜியை கொடுக்கும். பேட்ச் டெஸ்ட் எடுத்துவிட்டு பயன்படுத்துங்கள். சில பேருக்கு மூட்டு வலி, கை கால் வலி, இருக்கும் அல்லவா. அந்த இடங்களில் இந்த எண்ணெயை தடவினால் வலி நிவாரணம் உடனடியாக கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

கற்பூர எண்ணெயை சில பேரால் வாங்க முடியாது. தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை நசுக்கி தூள் செய்து போட்டுக்கோங்க. அதை வெதுவெதுப்பாக காசினால் கற்பூர எண்ணெய் தயார். இந்த எண்ணெயை வலி உள்ள இடங்களில் தடவிக் கொள்ளலாம். அதேபோல சில பேருக்கு முகப்பருவால் வலி இருக்கும். எரிச்சல் இருக்கும். அந்த இடத்தில் இந்த எண்ணெயை தடவினாலும் முகப்பரு நீங்கும். அந்த வலி எரிச்சலும் அடங்கும்.

முடி உதிர்வை தடுக்கும் சக்தியும் இந்த கற்பூர எண்ணெய்க்கு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. வழுக்கையாக இருக்கும் ஒரே ஒரு இடத்தில் கொஞ்சமாக கற்பூர எண்ணெய்யை தடவி வாருங்கள். உங்களுக்கு அந்த இடத்தில் முடி வளர்ச்சி இருந்தால் அந்த எண்ணெயை மீண்டும் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த எண்ணெயை தேய்த்தால் தலையில் இருக்கும் பேணும் செத்துப் போகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

சில பேருக்கு குதி காலில் நிறைய வெடிப்பு இருக்கும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சமாக கற்பூரத்தை நசுக்கி போட்டு, அந்த தண்ணீரில் காலை 15 நிமிடம் வைத்து, பிறகு வெடிப்பு உள்ள இடத்தில் மாய்சரைசர், தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களை தடவி வர கால் வெடிப்பு எளிதில் குணமாகும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: இயற்கை கொசு விரட்டி புகையை வீட்டில் போடுவது எப்படி?

ஒரு விஷயம் கவனம் வச்சுக்கோங்க. சருமத்தில் கற்பூர எண்ணெயை தடவி பயன்படுத்துவதற்கு முன்பு, கற்பூரம் உங்களுக்கு அலர்ஜி தருமா, தராதா என்பதை ஒரு முறை உறுதி செய்து கொள்ளுங்கள். சில பேருக்கு கற்பூரம் சருமத்திற்கு அலர்ஜியை கொடுத்து விடும். மேலே சொல்லப்பட்டுள்ள பயனுள்ள வீட்டு குறிப்பு பிடிச்சவங்க ட்ரை பண்ணலாம்.

- Advertisement -