வெளுத்து எடுத்த நியூசி இந்த மேட்சும் போச்சா. இமாலய இலக்கினை நிர்ணயித்த நியூசி. சாதிக்குமா ரோஹித்தின் படை

Newzealand

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டன் செடன் பார்க் மைதானத்தில் இன்று துவங்கியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

Team

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய துவங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். முன்ரோ 72 ரன்களும் மற்றும் செபர்ட் 43 குவித்தனர். அதன் பின் வந்த வீரர்களும் அதிரடியாக விளையாடினர்.

வில்லியம்சன் 21 பந்துகளுக்கு 27 ரன்கள் , கிராண்ட்ஹோம் 16 பந்துகளுக்கு 30 ரன்கள் , மிச்சேல் 19 மற்றும் ராஸ் டெய்லர் 7 பந்துகளுக்கு 14 ரன்கள் என அதிரடியாக ஆடி 212 குவித்தனர். இதனால் 213 ரன்கள் என்ற இமாலய இலக்கினை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளனர்.

Tim seifert

ரோஹித் தலைமையிலான இந்த படை இவ்வளவு பெரிய டார்கெட்டை எதிர்த்து வெற்றி பெறுமா என்று பொறுத்திருந்து பார்த்தால் தெரியும். நம்பிக்கையுடன் காத்திருப்போம்.

இதையும் படிக்கலாமே :

எத்தனை முறை தான் இதை செய்விங்க தல. மீண்டும் இன்று மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்திய தோனி – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்