ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து செம பார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம் – காரணம் இவர்தான்

Dinesh

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடருக்கான ஒருநாள் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

indian-team

அதன்படி கோலி கேப்டனாகவும், துணைக்கேப்டனாக ரோஹித்தும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக பும்ரா அணியில் இணைந்துள்ளார். மேலும், கலீலுக்கு பதிலாக சித்தார்த் கவுல் அணியில் இடம்பிடித்துள்ளார். முக்கிய மாற்றமாக நன்றாக ஆடிவந்த தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக இளம் வீரர் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்க பட்டுள்ளது. ஏற்கனவே அணியில் தோனி கீப்பராக உள்ளதால் பண்ட் பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார். மேலும், பண்ட் இளம்வீரர் என்பதால் அவருக்கு அதிகப்படியான வாய்ப்புகளை வழங்கும் விதமாக அனுபவ வீரரான தினேஷ் கார்த்திக் அணியில் இருந்து நீக்கப்பட்டு பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Pant

ஆனால், ரசிகர்கள் நன்றாக ஆடிவரும் தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடி நீக்கம் குறித்து இணையத்தில் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். அணியில் வேறு எந்த வீரரும் மாற்ற முடியாதா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிக்கலாமே :

ரஞ்சி போட்டியில் காமெடி : அம்பயரின் மண்டையை பதம் பார்த்த த்ரோ. வலியால் தலையை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்த அம்பயர் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்