ரஞ்சி போட்டியில் காமெடி : அம்பயரின் மண்டையை பதம் பார்த்த த்ரோ. வலியால் தலையை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்த அம்பயர் – வைரல் வீடியோ

ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தற்போது ரஞ்சி போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ரெஸ்ட் ஆப் இந்திய அணியின் வீரர்களான விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்சின் இன்று நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிவந்தனர்.

throw

அப்போது விஹாரி 148 ரன்கள் அடித்து இருந்தபோது ஒரு ரன்னை அடித்துவிட்டு ஓடினார். எல்லை கோட்டின் அருகே சென்ற அந்த பந்தை பிடித்த பீல்டர் விரைவாக பந்துவீச்சாளரை நோக்கி எறிந்தார். ஆனால், பீல்டர் பந்து இருந்ததை பவுலர் பார்க்கவில்லை.

கடைசியில் பந்து நேராக அம்பயரின் பின்தலையில் பலமாக தாக்கியது. இதனால் அம்பயர் உனடியாக வலி தாங்க முடியாமல் கீழே அமர்ந்தார். அதன் பிறகு மருத்துவ உதவியாளர்கள் வந்து அம்பயர் நந்தனை அழைத்து சென்றனர். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ :

அம்பயர்களுக்கு எவ்வளவு பாதுகாப்பு சாதனங்கள் இருந்தும் அவர்களுக்கு இதுபோன்று தற்செயலாக ஏற்படும் அடியானது நகைச்சுவையை உண்டாக்குகிறது.

இதையும் படிக்கலாமே :

பவுலர்களை பாதுகாக்க இதனை கிரிக்கெட் நிர்வாகங்கள் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் – அஸ்வின் கோபம்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்