நாளை 4/12/2021 சனிக்கிழமை கார்த்திகை அமாவாசை! சக்தி வாய்ந்த இந்த அமாவாசையில் தவறாமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன தெரியுமா?

food-amavasai
- Advertisement -

நாளை பிலவ வருடம் கார்த்திகை மாதம் சனிக்கிழமையில் சக்தி வாய்ந்த அமாவாசை திதி நிகழ இருக்கிறது. இந்த அமாவாசையை தவறவிடாமல் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன? அதனால் உண்டாகும் பலன்கள் என்ன? பொதுவாக அமாவாசை அன்று பித்ருக்களை வழிபடுவது வழக்கம். மேலும் அமாவாசை தினம் எந்தெந்த தெய்வ வழிபாடுகளுக்கு சிறந்த தினமாக இருக்கிறது? என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

amavasai1

அமாவாசையில் பித்ருக்களை வழிபடுவது மரபு! அதே போல இந்த கார்த்திகை அமாவாசையிலும் பித்ருக்களுக்கு எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பலன்களை கொடுக்கும். குடும்பத்தில் இருக்கும் பெரும்பாலான பிரச்சினையைத் தீர்க்க வல்ல இந்த பித்ரு வழிபாட்டை நாளைய கார்த்திகை அமாவாசையில் செய்ய எல்லா நலன்களும் உண்டாகும்.

- Advertisement -

மேலும் கார்த்திகை அமாவாசையில் மட்டுமல்லாமல் எல்லா அமாவாசையிலும் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வது இன்னும் சிறப்பான பலன்களைக் கொடுக்கும். குலதெய்வத்தை வழிபடுவதற்கு சிறந்த திதியாக அமாவாசை திதி திகழ்கிறது. இந்த திதியில் குலதெய்வ வழிபாட்டை படையலோடு நிறைவு செய்த பின்பு குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளலாம். கலசத்தில் தண்ணீரை வைத்து குலதெய்வத்தை ஆவாகனம் செய்து குலதெய்வம் மந்திரங்களை உச்சரித்து உங்கள் பிரார்த்தனைகளை வைக்கலாம். இதனால் நீங்கள் வேண்டிய வேண்டுதல்கள் தடையில்லாமல் பலிக்கும் என்பது நம்பிக்கை.

Ayyanar3

மேலும் காவல் தெய்வங்களாக விளங்கும் முனீஸ்வரர், கருப்பசாமி, அய்யனார் போன்ற சக்தி வாய்ந்த தெய்வங்களையும் வழிபடுவதற்கு கார்த்திகை அமாவாசை சிறந்த நாளாக இருக்கிறது. இவர்களை குலதெய்வமாக கொண்டவர்களும், இஷ்ட தெய்வமாக வழிபடுபவர்களும் நாளைய நாளில் இவர்களுக்கு படையலிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொண்டால் எத்தகைய தீராத பிரச்சனையும் தீர்வதாக நம்பப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் உண்டாக விரதமிருந்த இந்நாளில் காவல் தெய்வங்களை வழிபட உங்களுக்கு வரும் எல்லா தடைகளையும் அந்த தெய்வங்கள் தகர்த்தெறிந்து உங்களுக்கான நல்ல வழியை காண்பிப்பார்கள்.

- Advertisement -

மேலும் சோடசக்கலை நேரம் ஆக நாளைய நாள் அமாவாசை திதியில் மதியம் 1 மணியிலிருந்து மூன்று மணி வரையிலும் இருக்கும் காலகட்டத்தில் நிகழ இருப்பதால் அந்த நேரத்தில் நீங்கள் தியான நிலையில் அமர்ந்து தியானம் செய்து வந்தால் எத்தகைய கடன்கள் விரைவில் காணாமல் போகும். சோடசக்கலை நேரத்தை இறைவனுக்கு என்று முழுமையாக நம் நேரத்தை செலவிட்டால் பணம் சம்பந்தப்பட்ட எத்தகைய பிரச்சினைகளும் தீரும். கடன் மட்டுமல்லாது வருமானத்தில் பிரச்சனை இருந்தாலும், தொழில் ரீதியான பிரச்சனைகள் இருந்தாலும் சோடசக்கலை நேரத்தில் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி கண்களை மூடி உங்களுக்கு இருக்கும் எல்லா பிரச்சினைகளைப் பற்றியும் மனதார பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு செய்ய சகல பிரச்சனைகளும் தீர்ந்து விடுவதாக நம்பிக்கை உண்டு.

banana-for-cow

மேலும் இந்நாளில் பசுக்களுக்கு தானம் செய்வது சகல தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி அடைய செய்யும் ஒரு அற்புத பரிகாரம் ஆகும். எனவே இந்நாளில் பசுக்களுக்கு வாழைப்பழம், வெல்லம், பச்சரிசி, அகத்திக்கீரை போன்ற பொருட்களை தானம் கொடுத்து நம் வாழ்வில் இருக்கும் தோஷங்களையும், பிரச்சனைகளையும் எளிதாக தீர்த்து கொள்ள முடியும். மேலும் இந்நாளில் உங்களால் முடிந்த வரை அன்னதானம் செய்தால் செய்த புண்ணியம் இரட்டிப்பாகும்.

- Advertisement -