- Advertisement -
Homeவீட்டு குறிப்புகள்கார்த்திகை தீப விளக்கு அணையாமல் எரிய பயனுள்ள வீட்டு குறிப்புகள்

கார்த்திகை தீப விளக்கு அணையாமல் எரிய பயனுள்ள வீட்டு குறிப்புகள்

- Advertisement -

வரக்கூடிய 26/11/2023 ஆம் தேதி கார்த்திகை தீபம். இந்த நாளில் நம்முடைய எல்லோர் வீட்டிலும் வாசலில், மாடிப்படியில், பால்கனியில் விளக்கு ஏற்றி அழகாக கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடுவோம். ஆனால் வீசும் காற்றில் இந்த விளக்கு உடனே அணைந்து போகும். இதனால் கொஞ்சம் பெண்களுக்கு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும்.

ஆனா ஜில்லுன்னு அடிக்கக்கூடிய காற்றில் கூட நம்ம வீட்டு விளக்கு அணியாமல் எரிந்தால், எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அதற்கு ஒரு சில ஐடியா இருக்குதுங்க. அகல் விளக்கில் எண்ணெய் கீழே கசியாமல் இருக்கவும், விளக்கு நின்று எரியவும், ஒரு சில பயனுள்ள வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த சின்ன சின்ன ஐடியாவை தெரிஞ்சுகிட்டாலே போதும். கார்த்திகை தீப விளக்கு உங்க வீட்டில் அணியவே அணையாது.

- Advertisement -

கார்த்திகை தீப விளக்கு காற்றில் அணையாமல் இருக்க

புதுசாக வாங்கிய மண் அகல் விளக்கை 8 மணி நேரமாவது தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். அப்படி தண்ணீரில் ஊறிய அகல் விளக்குகளை எடுத்து வெயிலில் காய வைத்து விடுங்கள். அதற்கு நீங்கள் கார்த்திகை தீபம் வருவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே புது அகல் விளக்கை வாங்கி தயார் செஞ்சுக்கணும்.

புது அகல் விளக்கு தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊறினால், அந்த அகல் விளக்கில் நாம் ஊற்றும் எண்ணெய் அப்படியே இருக்கும். இல்லையென்றால் அந்த மண் அகல் விளக்கே எண்ணெய் எல்லாம் உருஞ்சி கொள்ளும்.

- Advertisement -

அடுத்தபடியாக நாம் விளக்குக்கு போடப்படும் திரி. எந்த திரியாக இருந்தாலும் சரி, அதை கொஞ்சம் தடிமனாக திரித்து போடுங்கள். வீட்டிற்கு வெளியே ஏற்றப்படக்கூடிய விளக்கு திரி தடிமனாக இருக்கும் போது, அந்த விளக்கு அவ்வளவு எளிதில் அணைந்து போகாது. இரண்டாவதாக ஒரு விஷயம் நம்முடைய வீட்டிலேயே பஞ்சை வைத்து விளக்கு திரி தயாரிக்கலாம்.

எப்படி தெரியுமா. சாதாரணமாக கடைகளில் கிடைக்கும் பஞ்சை வாங்கிக்கோங்க. அதை சின்ன சின்ன துண்டுகளாக எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பஞ்சுகளை எடுத்து உங்கள் விரல்களாலேயே சுருட்டி, மேலே மெல்லிசாக திரி போல தயார் செய்து கொள்ளுங்கள். பிள்ளையாருக்கு மோதகம் தயார் செய்வோம் அல்லவா. அதேபோல வடிவத்தில் விளக்கு திரியை பஞ்சில் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். 27 திரி வேண்டும் என்றால், 27 திரிகளை இப்படி தயார் செய்து விடுங்கள்.

- Advertisement -

ஒரு சின்ன கிண்ணத்தில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். அந்த நல்லெண்ணெயில் இரண்டு கற்பூர கட்டிகளை நசுக்கி போடுங்கள். இந்த எண்ணெயில் நீங்களே, உங்கள் கையால் தயார் செய்து வைத்திருக்கும் பஞ்சு விளக்கு திரிகளை போட்டு ஒரு நாள் முழுவதும் ஊற வைத்து விடுங்கள். இந்த பஞ்சு திரையில் விளக்கு ஏற்றினால் ரொம்ப நேரம் எரியும் அணியாமல் எரியும்.

எப்போதும் போல மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, நீங்கள் தயார் செய்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா இந்த மோதகம் போல இருக்கும் பஞ்சு திரி, அதை எடுத்து அந்த அகல் விளக்குக்கில் நடுவே போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த அகல் விளக்கில் இருக்கும் தீபம், ஜோதி தீபம் போல நடுவில் ஏற்றப்பட வேண்டும்.

அது மட்டுமல்ல அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றினீர்கள் அல்லவா. அந்த நல்லெண்ணெயில் ஒரு சின்ன துண்டு ‘கட்டி கற்பூரத்தை’ போட்டு வையுங்கள். இப்படி அகல்விளக்கில் இருக்கும் நல்லெண்ணெயில் கட்டி கற்பூரம் இருந்தால் விளக்கு, வேகமாக காற்று அடித்தாலும் அணையாது. நீங்க வேணும்னா ட்ரை பண்ணி பாருங்க.

அகல் விளக்கில் எண்ணெய் கீழே கசியாமல் இருக்க

இதற்கு ஒரு சில ஐடியாக்கள் இருக்கிறது. முதல் ஐடியா. அகல் விளக்குகளை எல்லாம் தண்ணீரில் போட்டு ஊற வைத்து காய வச்சிட்டீங்க. அகல் விளக்குகளுக்கு அடியில் நெயில் பாலிஷ் அடித்து சிறிது நேரம் காய வைத்தால் அகல் விளக்கில் இருந்து எண்ணெய் கீழே கசையாது. அகல் விளக்குக்கு உள்ளே எண்ணெய் ஊற்றுவதற்கு முன்பாக, அந்த அகல்விளக்கில் கொஞ்சமாக முகத்துக்கு போடும் பவுடரை கொட்டி உங்கள் விரல்களாலேயே எல்லா இடங்களிலும் பரப்பி விட்டு விடுங்கள்.

அதன் பிறகு நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாலும் எண்ணெய் கீழே கசையாது. நம்முடைய வீட்டில் நிறைய அகல் விளக்குகள் இருக்கிறது என்றால், ஒரு அகல் விளக்குக்கு கீழே, இன்னொரு அகல் விளக்கை வைத்து, விளக்கேற்றுங்கள். எண்ணெய் கசிந்தாலும் கீழே இருக்கும் அகல்விளக்கில் தான் எண்ணெய் வடியும்.

அப்படி இல்லை என்றால் சின்ன சின்ன அட்டைகளை வெட்டி தரையில் வைத்து, அந்த அட்டைக்கு மேல் அகல் விளக்குகளை வைத்து, தீபம் ஏற்றலாம். அப்படி இல்லை என்றால் பழைய காலண்டர் காகிதங்கள் கீழே வைத்து விளக்கு ஏற்றலாம். தரையில் எண்ணெய் படாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த பயனுள்ள வீட்டு குறிப்பு உங்களுக்கு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பூஜை பாத்திரங்கள் பளபளக்க வீட்டு குறிப்பு

பின்குறிப்பு: கூடுமானவரை இந்த கார்த்திகை தீபத்திற்கு விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் பயன்படுத்துங்கள். காசு கொஞ்சம் அதிகம் தான் இருந்தாலும், வருடத்திற்கு ஒருமுறை இறைவனுக்காக ஏற்றப்படக்கூடிய விளக்கு. இதில் நாம் கணக்கு பார்க்கத் தேவையில்லை. கடவுளின் அனுகிரகத்தை பெற சுத்தமான நல்லெண்ணெய் பயன்படுத்தி தீபம் ஏற்றவும்.

சற்று முன்